Rasi palangal

Friday, April 14, 2017

வார ராசிப்பலன் - ஏப்ரல் 16 முதல் 22 வரை 2017

வார ராசிப்பலன் - ஏப்ரல் 16 முதல்  22 வரை   2017  ( சித்திரை  3 முதல்வரை )
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

இறைவனிடம் வேண்டுதல் செய்யும் முறை! – சித்தயோகி சிவதாசன் ரவி

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகுபாலமுருகன்

வார ராசிபலன் (16-04-2017 முதல் 22-04-2017 வரை) சித்திரை 3 முதல் சித்திரை 9 வரை
முனைவர் முருகுபாலமுருகன்

வெளிநாட்டில் உயர்கல்வி யோகம்!-   சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

அவிட்டத்தினர் தெவிட்டாத சுகம் பெற! நட்சத்திரப் பரிகாரங்கள்!
ஜோதிஷண்முகம்

யோக அரிட்டங்கள்! குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்!
                                    -பிராஜசேகரன் M.Phil Astro

 “ஹேவிளம்பி” புத்தாண்டுப் பலன்கள்!- சென்ற இதழ் தொடர்ச்சி
முனைவர் முருகுபாலமுருகன்

பிரேத தோஷம் தீர்க்கும் வழிகள்! (வாரம் ஒரு பரிகாரம்)-   விசுஅய்யர்

அரசுப் பணியில் சேர ஜாதக அமைப்புகள்?- -சரவணன் Gendral Sec ICAS

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -  -டாக்டர் இராரகு M,Sc Astro


உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகுபாலமுருகன்


சுக்கி
சூரிய,
புதன் ( )
செவ்

கேது 
திருக்கணித கிரக நிலைராகு
சனி ( )
சந்திர

குரு ()

கிரக மாற்றம்  இல்லை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
விருச்சிகம்                14-04-2017 அதிகாலை 04.09 மணி முதல் 16-04-2017 மாலை 04.40 மணி வரை.
தனுசு               16-04-2017 மாலை 04.40 மணி முதல் 19-04-2017 அதிகாலை 04.43 மணி வரை.
மகரம்              19-04-2017 அதிகாலை 04.43 மணி முதல் 21-04-2017 மதியம் 02.16 மணி வரை.
கும்பம்            21-04-2017 மதியம் 02.16 மணி முதல் 23-04-2017 இரவு 07.56 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

17-04-2017 சித்திரை 04-ஆம் தேதி திங்கட்கிழமை, சஷ்டி திதி, மூல நட்சத்திரம், சித்தயோகம், காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மேஷ லக்னம். தேய்பிறை

21-04-2017 சித்திரை 08-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, தசமி திதி, அவிட்ட நட்சத்திரம், சித்தயோகம், காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் ரிஷப லக்னம். தேய்பிறை

மேஷம்   அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்
தைரியமும், அஞ்சா நெஞ்சமும் உடன் பிறந்தது என்பதால் எந்தவித பிரச்சனைகளையும் எளிதில் சமாளித்து விடும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது என்றாலும் அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் எந்த சிரமமும் இருக்காது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைக்கவும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். அசையும், அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சற்று பிரச்சனைகளை சந்திப்பீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தியை பெருக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வேலைபளு சற்று குறைவாகவே இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை உண்டாக கூடும் என்பதால் முழு மூச்சுடன் முயன்று படிப்பது உத்தமம். சிவ வழிபாடு, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     --            19, 20, 21, 22.

சந்திராஷ்டமம்        14-04-2017 அதிகாலை 04.09 மணி முதல் 16-04-2017 மாலை 04.40 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
பார்ப்பதற்கு சாதாரணப் பேர் வழிகளாக இருந்தாலும் யார் வம்புக்கு வந்தாலும் ஓட ஓட விரட்டியடிக்கும் குணம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 5-ல் குரு, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பு ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில்  பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கலாம். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சினைகளும் ஏற்படாது. வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் நல்ல லாபத்தினை அடைய முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். வெளியூர், வெளி நாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி, கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். முருகபெருமானை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     --            - 21, 22

சந்திராஷ்டமம்         16-04-2017 மாலை 04.40 மணி முதல் 19-04-2017 அதிகாலை 04.43 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
தன்னுடைய  ரசிக்கும் படியான பேச்சாற்றலால் மற்றவர்களின் நம்பிக்கைக்கு எளிதில் பாத்திரமாக கூடிய மிதுன ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு, 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தாமதநிலை ஏற்படும். பண வரவுகள் தாராளமாக இருக்கும் என்றாலும் எதிர்பாராத வீண் செலவுகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அசதி சோர்வு போன்றவை உண்டாவதால் அன்றாட பணிகளில் மந்த நிலையிலேயே செயல்படுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். கூட்டாளிகளிடம் சற்று விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைப்பதை பயன் படுத்திக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறும். முருகப்பெருமானை வழிபடுவது, சனிக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்     --- 16, 17, 18.

சந்திராஷ்டமம்          19-04-2017 அதிகாலை 04.43 மணி முதல் 21-04-2017 மதியம் 02.16 மணி வரை.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
கள்ளம் கபடமின்றி வெளிப்படையாக பேசும் வெகுளித்தனமும், பிறருக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் நடந்து கொள்ளும் பண்பும் கொண்ட கடக ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 6ல் சனி, 10ல் சூரியன், 11ல் செவ்வாய் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருந்தாலும் அடிக்கடி சிறுசிறு ஒற்றுமை குறைவுகளும் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சில நேரங்களில் அவர்களே தேவையற்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்துவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபத்தினை அடைய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க பெறுவதோடு எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். தொழிலாளர்களும், கூட்டாளிகளும் அனுகூலமாக செயல்படுவார்கள். பயணங்களால் சாதகப்பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கனைப் பெற முடியும். எதிர்பார்க்கும் இடமாற்றமும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிப்பதால் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     --            -  17, 18, 19, 20.

சந்திராஷ்டமம்                      21-04-2017 மதியம் 02.16 மணி முதல் 23-04-2017 இரவு 07.56 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கும் பண்பும், தன்னை போலவே பிறரும் நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் குணமும் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, 9-ல் புதன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அனுகூலமான அமைப்பு என்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கரை எடுத்துக்கொள்வது நல்லது. கணவன்- மனைவி இடையே தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகி குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்பட கூடும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். திருமண சுபகாரியங்கள் கை கூட சற்று தாமத நிலை ஏற்படும். உற்றார்- உறவினர்களை  அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அனுகூலப் பலன்களைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற சற்று தாமத நிலை உண்டாகும் என்றாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்தே லாபத்தினைப் பெற முடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்க பெறும். முடிந்தவரை தேவையற்ற பயணங்களை குறைத்து கொள்வது நல்லது. மாணவர்களுக்கு உடல் நிலையில் உண்டாக கூடிய பாதிப்புகளால் கல்வியில் சற்று மந்த நிலை உண்டாகும். முருகப் பெருமானை வழிபாடு செய்யவும்.

வெற்றிதரும் நாட்கள்     --- 19, 20, 21, 22.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
தவறு செய்பவர்களைக்கூட தன் அன்பான பேச்சாற்றலால் திருத்தி விடும் இயல்புடையவராக விளங்கும் கன்னி ராசி நேயர்களே, இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 4-ல் சனி, 8-ல் சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற, இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் மட்டுமே தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலப்பலன் கிட்டும்தொழில், வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைபெற்றாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது மூலம் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சற்றே கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைப்பதில் தாமதநிலை ஏற்படும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். இந்த வாரம் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது, குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     --- 16, 21, 22.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்
தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் எதற்கும் சலைக்காமல் பாடுபடும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலைகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருந்தாலும் அடிக்கடி சிறுசிறு ஒற்றுமை குறைவுகளும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப் பலனை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விட கூடிய ஆற்றல் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி எதிர்பார்த்த லாபத்தை அடைந்துவிட முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளர்களையும், கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது சிறப்பு. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. சிவ பெருமானை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     -- - 17, 18.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
மற்றவர்களில் எதிர்ப்புகளுக்கு அஞ்சாது பிறர் போற்றும் வகையில் வெற்றி பெற்று முன்னேறும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன், சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்க்கும் வெற்றிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அனைவரிடமும் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது மூலம் மருத்துவ செலவுகளை குறைத்து கொள்ள முடியும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது என்றாலும் நிறைய போட்டிகளை சமாளித்தே லாபத்தை பெற வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பணவரவுகளில் சுமாரான நிலையிருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்கள் ஏற்படாமல் சமாளிக்கலாம். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டினை செலுத்துவது நல்லது. முருகப்பொருமானை வழிபாடு செய்வது, சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து மேற்கொள்வது உத்தமம்.

வெற்றிதரும் நாட்கள்     --16, 19, 20, 21.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
யாருக்கும் கீழ் படிந்து அடிமையாக நடப்பதென்பதை இயலாத காரியமாக கருதும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன், 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் ஓரளவுக்கு தாராளமாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் தேடி வரும். செலவுகளும் கட்டுக்குள் இருப்பதால் சேமிக்க முடியும். உடல் நிலையில் சற்றே மந்தநிலை உண்டானாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றல் இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பொன், பொருள் சேரும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலனை அடைய முடியும். உற்றார்- உறவினர்கள் அனுகூலமாக அமைவார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். செய்யும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறுதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது, சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     --17, 18, 21, 22.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்
எப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும், கள்ள கபடமன்றி வெகுளித்தனமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 2,8-ல் கேது, ராகு, 4-ல் சூரியன் சஞ்சாரம்  செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 9-ல் குரு சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன்- மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் சிறுசிறு வீண் செலவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றமானப் பலன்களைப் பெறுவீர்கள். கிடைக்க வேண்டிய லாபமும் கிடைக்கும். மாணவர்கள் கல்விக்காக பயணங்கள் மேற்கொள்ள கூடிய சூழ்நிலைகள் உண்டாவதால் சற்றே அலைச்சல்கள் அதிகரிக்கும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     --16, 19, 20, 21.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
தனக்கு பிடித்தவர்களிடம் அன்புடன் நெருங்கி பழகும் பண்பும், பிடிக்காதவர்களை ஏறெடுத்தும் பார்க்காத பிடிவாத குணமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் ஜென்ம ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 11-ல் சனி சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் லாபமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் மட்டுமே தேவையற்ற மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளை எதிர்கொள்ள நேரிடும். குடும்பத்தில் சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவும். எதிர்பார்த்த லாபத்தை பெற எதிர் நீச்சல் போட வேண்டி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் வேலைபளு கூடும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரியத் தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். இந்த வாரம் முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றிதரும் நாட்கள்     --17, 18, 21, 22.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
சின்ன சின்ன விஷயங்களில் கூட குற்றம் கண்டுபிடித்து பேசும் போது வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என உணர்த்தும் குணம் கொண்ட மீன  ராசி நேயர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், 6-ல் ராகு, 7-ல் குரு சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். பணம் பல வழிகளில் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் சுபிட்சமும் சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வீடு, மனை போன்றவற்றை வாங்கும் முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நல்ல வரன்களும் தேடி வரும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். பல பெரிய மனிதர்களின் உதவிகளும் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதையும் சிறப்புடன் செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். பெற்றோர் ஆசிரியர்களுக்கு கீழ் படிந்து நடந்து கொண்டால் அனைவரின் ஆதரவுகளையம் பெறுவீர்கள். சிவபொருமானை வழிபாடு செய்வது நல்லது.


வெற்றிதரும் நாட்கள்     -- 17, 18, 19, 20, 21.

No comments: