Saturday, April 22, 2017

இன்று - 22.04.2017


இன்று -  22.04.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

தங்கம் வாங்க நல்ல தருணம்!-              முனைவர் முருகுபாலமுருகன்

வெற்றி தரும் நட்சத்திரக் குறியீடுகள்! –    சித்தயோகி சிவதாசன் ரவி

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகுபாலமுருகன்

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -  -டாக்டர் இராரகு M,Sc Astro

சதயத்தினர் சகலமும் பெற வழிகள்! நட்சத்திரப் பரிகாரங்கள்!                                                          ஜோதிஷண்முகம்

சுயதொழில், அடிமைத்தொழில் யாருக்கு?-  -சரவணன் Gendral Sec ICAS

சொந்த வீட்டுக் கனவை நிஜமாக்கும் பரிகாரம்! (வாரம் ஒரு பரிகாரம்)-                                                                 விசுஅய்யர்

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகுபாலமுருகன்

500 ஆண்டு ஆயுள் யாருக்கு! குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்!                                     -பி.ராஜசேகரன் M.Phil Astro

27 நட்சத்திரங்களின் தன்மைகள்!
&மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

வெற்றி சூத்திரம்!-    சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

வார ராசிபலன் (23-04-2017 முதல் 29-04-2017 வரை) சித்திரை 10 முதல் 16 வரை

முனைவர் முருகுபாலமுருகன்



இன்றைய  பஞ்சாங்கம்
22-04-2017, சித்திரை-9, சனிக்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 04.05 வரை பின்பு தேய்பிறை துவாதசி. சதயம் நட்சத்திரம் பின் இரவு 02.32 வரை பின்பு பூரட்டாதி, அமிர்தயோகம் பின்இரவு 02.32 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. ஏகாதசி பெருமாள் வழிபாடு நல்லது.
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள்- காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

சுக்கி

சூரிய
புதன்(வ)
செவ்

கேது 
சந்தி  
திருக்கணித கிரக நிலை
22.04.2017



ராகு
சனி(வ)
 

               
குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் -  22.04.2017
மேஷம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். மற்றவர்களுக்கு உதவும் வகையில் பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சேமிப்பு உயரும்.
ரிஷபம்
இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு ஆனந்தத்தை தரும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு உண்டாகும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் சிறு வேலையை செய்வதற்கு கூட அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிட்டும்.
கடகம்
இன்று உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். மற்றவர்கள் மீது கோபப்படும் நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை.
சிம்மம்
இன்று புது உற்சாகத்துடன் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். வெளியூரிலிருந்து வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான சூழ்நிலை உருவாகும்.
கன்னி
இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சக நண்பர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். சமுதாயத்தில் நல்ல செல்வாக்கு கிடைக்கும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.
துலாம்
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவதில் சிக்கல்கள் ஏற்படும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். வேலையில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.
விருச்சிகம்
இன்று உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். வீட்டில் பிள்ளைகளால் மன சங்கடங்கள் ஏற்படும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
தனுசு
இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். வேலையில் உயர் அதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
மகரம்
இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைகளுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புது நம்பிக்கையை தரும். கடன் பிரச்சனைகள் குறையும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாய் அமைவார்கள். சுப செலவுகள் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்கான செயல்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். வேலையில் பணிச்சுமை குறையும்.
மீனம்

இன்று எதிர்பாராத வகையில் திடீர் தனவரவு உண்டாகும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த பிரச்சனைகள் விலகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும்.

No comments: