Rasi palangal

Tuesday, April 4, 2017

தமிழ் புத்தாண்டு பலன்கள் சிம்மம்

தமிழ் புத்தாண்டு பலன்கள் சிம்மம்

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை -- 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


 

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே, அஞ்சா நெஞ்சமும், சிங்கம் போல தைரியமும், தெய்வ பக்தியும், இரக்க குணமும் கொண்ட உங்களுக்கு ஹேவிளம்பி வருடத்தில் ஆண்டு கோளான குருபகவான் தன ஸ்தானத்தில் சாதகமாக சஞ்சாரம் செய்வதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். உங்களுக்கு இருந்து வந்த கடன்கள் படிப்படியாகக் குறையும். வீடு மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். புதிய நவீன பொருட் சேர்க்கைகளும், பொன் பொருள் சேரும் யோகமும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றக்கூடிய ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வுகள் கிட்டும். ஆண்டின் தொடக்கத்தில் 5ல் அதிசாரமாக சஞ்சரிக்கும் சனி ஆனி 6ம் தேதி முதல் ஜப்பசி 9ம் தேதி வரை பின்னோக்கி 4ம் வீட்டில் சஞ்சரிப்பது அர்தாஷ்டம சனி என்பதால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் பாதிப்புகள், தேவையற்ற வீண் செலவு ஏற்படும் என்றாலும் வரும் ஜப்பசி 9ம் தேதி முதல் சனி முழுமையாக 5ம் வீட்டிற்கு மாறுதலாக உள்ளதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு ஆவணி 27 முதல் 3ல் சஞ்சரிக்க இருப்பதால் ஆண்டின் பிற்பாதியில் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். தொழில் உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். வீண் போட்டிகள், மறைமுக எதிர்ப்புகளும் உண்டாகக் கூடும். ஆண்டின் தொடக்கத்தில் சர்பகிரகங்களான ராகு கேது 1,7ல் அனுகூலமற்ற சஞ்சாரம் செய்வதினால் குடும்ப வாழ்வில் பிரச்சனை கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே எந்தவித குடும்ப பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும். ஆவணி 2ம் தேதி ஏற்படும் சர்ப்ப கிரக பெயர்ச்சியால் ராகு 12ம் வீட்டிலும், கேது 6 வீட்டிலும் சஞ்சரிக்க இருப்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். குடும்ப ஒற்றுமை பலப்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்திலுள்ளவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வதும் பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பதும் நல்லது. பொருளாதார ரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சிக்கனமாக செயல்பட்டால் அனைத்து நற்பலன்களையும் அடைய முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் ஆண்டின் முற்பாதியில் சாதகப்பலன் கிட்டும்பூர்வீகச் சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஒரளவுக்கு அனுகூலப் பலன்களைப் பெறுவீர்கள்.
உடல் ஆரோக்கியம்
உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தினாலும் எதையும் சமாளிக்கும் வலிமையும், வல்லமையும் உண்டாகும். பயணங்கள் அடிக்கடி செல்ல வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுவதால் உடல்நிலை சோர்வடைந்தாலும் அதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலமும் அடைவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு புத்திர பாக்கியம் அமையப் பெறுவதால் பூரிப்பு உண்டாகும்.
உத்தியோகம்
எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். சிலர் சொந்த ஊருக்கே இடமாற்றம் கிடைத்து குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு அமையும். பொருளாதார நிலை உயர்வடைவதால் வண்டி வாகனம் வாங்கும் யோகமும் அமைந்து விடும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்றப்படி வேலை வாய்ப்பு கிட்டும்
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் சிறப்பாக அமையும். எதிரிகளின் பலம் குறைவதால் போட்டி பொறாமைகளும் விலகும். தொழிலை விரிவு செய்ய எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை மகிழ்ச்சி அளிக்கும். ஜப்பசியில் ஏற்படும் சனி மாற்றத்தால் அலைச்சல்கள் குறையும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். பெரிய முதலீடுகளில் செய்யும் காரியங்களில் சற்று கவனம் தேவை.
கொடுக்கல் வாங்கல்
கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்றவற்றால் நல்ல லாபம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சரளமாக அமைந்து விடும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். பெரிய தொகைகளையும், எளிதில் ஈடுபடுத்த முடியும். ஆண்டின் பிற்பாதியில் எதிலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் அனுகூலப் பலனை அடையலாம்.
அரசியல்
எதிர்பார்க்கும் பதவிகள் கிடைக்கப் பெறும். மக்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கிட்டும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகளால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
விவசாயிகள்
விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருக்கும். நெல் முதல் தானியங்கள் வரை. காய் முதல் பழ வகைகள் வரை சிறப்பான விளைச்சல்களால் சந்தையில் விளைபொருக்கேற்ற விலையை பெற முடியும். பொருளாதார நிலையும் மேன்மையடையும். எதிர்பாராத தன சேர்க்கையால் கடன்களில்லாத கண்ணிய வாழ்க்கை அமையும். புதிய பூமி மனை வாங்கும் யோகம் குடும்பத்தில் மகிழ்ச்சி சுபிட்சமும் யாவும் சிறப்படையும்.
கலைஞர்கள்
தங்களின் திறமைக்கு தீனி போடுவது போல் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சிறுசிறு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளித்து விடுவீர்கள். பொருளாதார நிலை மேம்படும். பயணங்கள் செல்லக்கூடிய வாய்ப்புகளால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் அனுகூலமும் உண்டாகும். ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும்.
பெண்கள்
சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். ஆடை ஆபரணங்கள் சேரும். நினைத்த காரியங்களை சாதிக்க முடியும். கணவன், மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறைந்து போகும். பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும்.
மாணவ மாணவியர்
கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும், பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்களும், ஆசீர்வாதமும் கிடைக்கப் பெறும். உயர்கல்வி ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். விளையாட்டுத் துறைகளில் பரிசுகள் பெற்று சாதனைகள் படைக்க முடியும். நல்ல மதிப்பெண்களை பெற முடியும்

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண்    - 1,2,3,9
நிறம் - வெள்ளை, சிவப்பு
கிழமை - ஞாயிறு, திங்கள்
கல் - மாணிக்கம்
திசை - கிழக்கு

தெய்வம் - சிவன்

No comments: