Rasi palangal

Tuesday, April 11, 2017

சித்திரை மாத பலன்கள்

சித்திரை மாத பலன்கள்

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் -  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

இறைவனிடம் வேண்டுதல் செய்யும் முறை! – சித்தயோகி சிவதாசன் ரவி

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகுபாலமுருகன்

வார ராசிபலன் (16-04-2017 முதல் 22-04-2017 வரை) சித்திரை 3 முதல் சித்திரை 9 வரை
முனைவர் முருகுபாலமுருகன்

வெளிநாட்டில் உயர்கல்வி யோகம்!-   சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

அவிட்டத்தினர் தெவிட்டாத சுகம் பெற! நட்சத்திரப் பரிகாரங்கள்!
ஜோதிஷண்முகம்

யோக அரிட்டங்கள்! குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்!
                                    -பிராஜசேகரன் M.Phil Astro

 “ஹேவிளம்பி” புத்தாண்டுப் பலன்கள்!- சென்ற இதழ் தொடர்ச்சி
முனைவர் முருகுபாலமுருகன்

பிரேத தோஷம் தீர்க்கும் வழிகள்! (வாரம் ஒரு பரிகாரம்)-   விசுஅய்யர்

அரசுப் பணியில் சேர ஜாதக அமைப்புகள்?- -சரவணன் Gendral Sec ICAS

மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -  -டாக்டர் இராரகு M,Sc Astro


உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகுபாலமுருகன்


மேஷம்
ஜென்ம ராசியில் சூரியன், 2ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கோபத்தை குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்படுவது நல்லது. குரு வக்ர கதியில் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். தேவையற்ற அலைச்சல்களால் உடல் நிலையிலும் பாதிப்புகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவதன் மூலம் வேலையில் நன்மதிப்பை பெறலாம். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கப்பெறும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

ரிஷபம்
ஜென்ம ராசியில் செவ்வாய், 12ல் சூரியன் சஞ்சரிப்பதால் வீண் பிரச்சனைகள் ஏற்படும் என்றாலும் 11ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் உண்டாகும் என்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். சிவபெருமானை வழிபடவும்.

மிதுனம்
உங்கள் ராசிக்கு 3ல் ராகு 11ல் சூரியன் புதன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். சுபகாரியங்கள் கைகூடும். உடன் பிறந்தவர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒன்று சேருவார்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் பெருகும். உத்தியேகாஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். முருகபெருமானை வழிபடுவது உத்தமம்.

கடகம்
சூரியன் 10லும் செவ்வாய் 11லும் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நற்பலன்கள் ஏற்படும். சனி 6ல் இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் குறையும். தொழில் வியாபாரத்தில் ஏற்றம் மிகுந்த பலன்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்திலிருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். தேவையற்ற அலைச்சல்கள் சற்று ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புக்கள் தோன்றி மறையும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ப பாராட்டுதல்கள் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகள் செல்லும் வாய்ப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். துர்கை அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

சிம்மம்
தன ஸ்தானத்தில் குரு, 10ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் புதிய வாய்ப்புகள் தேடி வரும் யோகம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும், அதிகரிக்கும். தொழில் வியாபாரம் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் கடனுதவிகள் கிடைக்கப் பெறும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். உறவினர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். துர்கை அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

கன்னி
ஜென்ம ராசியில் குரு 8ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். எதிர்பாராத வீண் விரயங்களையும் எதிர்கொள்ள நேரிடும். பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் நிலவும். எந்த காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நெருங்கியவர்களிடையே வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தொழில் வியாபாரம் ஓரளவுக்கு லாபகரமாக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

துலாம்
ஜென்ம ராசிக்கு 7ல் சூரியன், 8ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் கவனமாக செயல்படுவது உத்தமம். உடனிருப்பவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கப் பெறும். வெளியூர் வெளிநாடு பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்

விருச்சிகம்
பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் 6ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். எதிர்பாராத தன சேர்க்கைகள் ஏற்படும். தொழில் ரீதியாக அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். பணம் பல வழிகளில் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். கடன்கள் படிப்படியாக குறையும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கொடுக்கல் வாங்கலில் சரளநிலை இருக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.

தனுசு
ஜென்ம ராசிக்கு 3ல் கேது 6ல் செவ்வாய் இருப்பது நல்ல அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொண்டு சாதகமான பலன்களை அடைவீர்கள். உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணம் சேரும். கடன்கள் குறைந்து விடும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். சுபகாரியங்கள் சிறப்பாக நடைபெறும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொருளாதாரம் மேம்படும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

மகரம்
சுக ஸ்தானமான 4ல் சூரியன் சஞ்சரிப்பதால் அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும் 3ல் சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பதும், 9ல் குரு சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் பணவரவுக்கு பஞ்சமிருக்காது. நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமலிருப்பதும் உத்தமம். வீடுமனை வாங்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் நிலவினாலும் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உத்தியோக ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

கும்பம்
ஜென்ம ராசிக்கு 2ல் சுக்கிரன், முயற்சி ஸ்தானமான 3ல் சூரியன், லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார ரீதியாக லாபகரமான பலன்களை அடைவீர்கள். கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வீடு மனை வாங்கும் யோகம் ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் இடமாற்றம் கிடைக்கப்பெறும். எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.

மீனம்
ஜென்ம ராசிக்கு 3ல் செவ்வாய் 6ல் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலங்களை பெற முடியும். சூரியன் 2ல் இருப்பதால் கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது. தொழில் உத்தியோக ரீதியாக சாதகமான பலனை அடைவீர்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவர்களால் வீண் அலைச்சல் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத சுப செலவுகளும் உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

No comments: