Rasi palangal

Thursday, April 6, 2017

தமிழ் புத்தாண்டு பலன்கள் மீனம்

தமிழ் புத்தாண்டு பலன்கள் 


மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை -- 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,அன்புள்ள மீன ராசி நேயர்களே கனிந்த பார்வையும், பிறரை எளிதாக வசப்படுத்தக் கூடிய கவர்ச்சியான முகத்தோற்றம் கொண்ட உங்களுக்கு, இந்த ஹேவிளம்பி வருடத்தில் சமசப்தம ஸ்தானமான 7ம் வீட்டில் குருபகவான் அமையப் பெற்று ஜென்ம ராசியைப் பார்வை செய்வதால் ஆண்டின் முற்பாதியில் உங்கள் பலமும் வலிமையும் கூடும். பணவரவுகள் தாராளமாக அமைந்து குடும்ப தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன் சுமைகளும் குறையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுக்கும் பஞ்சம் இருக்காது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திரபாக்கியம் வேண்டுபவர்களுக்கு தடையின்றி புத்திரபாக்கியம் அமையும். பொன்பொருள், ஆடை, ஆபரணம் யாவும் சேரும். அசையா சொத்துக்களால் அனுகூலப்பலனைப் பெறுவீர். ஆவணி 27ம் தேதி ஏற்பட உள்ள குரு மாற்றத்தால் குரு அஷ்டம ஸ்தானமான 8ல் சஞ்சரிக்க இருப்பதாலும் ஜப்பசி 9ம் தேதி முதல் சனி முழுமையாக 10ல் சஞ்சரிக்க இருப்பதாலும் ஆண்டின் பிற்பாதியில் தொழில் வியாபார ரீதியாக நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று அக்கரை எடுத்து கொள்வது நல்லது. கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். ஆண்டின் தொடக்கத்தில் சர்ப கிரகமான ராகு 6ல் சஞ்சரிப்பது ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். ஆவணி 2ம் தேதி ஏற்பட இருக்கும் ராகு கேது மாற்றத்தின் மூலம் கேது 11ல் சஞ்சரிக்க இருப்பதன் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆண்டின் பிற்பாதியில் பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சனை, பூர்வீக சொத்து வழக்குகளில் இழுபறியான நிலை சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை, உற்றார் உறவினர்களிடையே பகை போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும் என்பதால் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

குடும்பம் பொருளாதார நிலை
குடும்ப ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக அமையும். உற்றார், உறவினர்களின் ஆதரவைப் பெற அவர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் அமையும். சுபகாரியங்கள் ஆண்டின் முற்பாதியில் கைகூடும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. ஆவணி மாதத்தில் ஏற்படும் குரு மாற்றத்தால் குரு 8ல் சஞ்சரிக்க இருப்பதால் உடல் நிலையில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்பு, அஜீரணக்கோளாறு போன்றவை உண்டாகும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடாக இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் வீண் அலைச்சல்கள் குறையும்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் ஆண்டின் தொடக்கத்தில் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளும் அதிகாரிகளின் பாராட்டுதல்களும் மனநிறைவை உண்டாக்கும். எடுக்கும் எந்த பணிகளையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ஆண்டின் பிற்பாதியில் சில நேரங்களில் பிறர் செய்கின்ற தவறுகளுக்கும் பொறுப்பேற்க நேரிடும் என்பதால் எதிலும் சற்று கவனமாக செயல்படுவது நல்லது. வெளியூர் வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் அமையும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியைப் பெருக்க உதவும் என்றாலும் மிகவும் அனுசரித்து செல்ல நேரிடும். வெளியூர், வெளிநாடு தொடர்புடையவைகள் ஏற்றம் தரும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சற்று அலைச்சல் அதிகரித்தாலும் அதன் மூலம் அனுகூலமும் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் பெரிய முதலீடுகளில் செய்கின்ற காரியங்களில் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
கொடுக்கல் வாங்கல்
கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்றவற்றில் ஓரளவுக்கு லாபம் அமையும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருந்தாலும் ஆண்டின் பிற்பாதியில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாத சூழ்நிலைகளும் ஏற்படலாம். கொடுத்த கடன்களை வசூலப்பதில் சிக்கல் ஏற்படும்.
அரசியல்
உங்கள் பெயர், புகழ் உயரும் காலம் என்றாலும் ஆண்டின் முற்பாதி மட்டுமே நற்பலன்களைத் தரும். ஆண்டின் பிற்பாதியில் தேவையற்ற பிரச்சனைகள் சங்கடங்களைக் கொடுக்கும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதும் உத்தமம்.
விவசாயிகள்
விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்கும் எதிர்பார்த்த வங்கிக் கடன்களும்  கிடைக்கப் பெற்று தேவைகள் பூர்த்தியாகும். பூமி, மனை, வாங்கும் யோகம் உண்டு என்றாலும்  சில தடைகளுக்கு பின் வாங்குவீர்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்களையும் நிறைவேற்ற முடியும். ஆண்டின் பிற்பாதியில் உழைப்பிற்கேற்ற பலன்களை பெற தடைகள் ஏற்படும்.
கலைஞர்கள்
கிடைத்த வாய்ப்புகளைத் தவற விடாமல் பயன்படுத்திக் கொள்வது நல்லது. பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்தி தருவதாக அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் உடல்நிலையிலும் சற்று அக்கரை எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகளில் தடை ஏற்படும்.
பெண்கள்
குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எந்த பிரச்சனைகளையும் சமாளித்து விடலாம். உடல்நிலை சற்று சோர்வாக இருந்தாலும் எதையும் செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். பொருளாதாரம் ஓரளவுக்கு சிறப்பாக அமையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் உதவி கிடைக்கும். ஆண்டின் முற்பாதியில் சுபகாரியங்கள் கைகூடும். புத்திர பாக்கியமும் அமையும்.
மாணவ மாணவியர்
படிப்பில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்லது நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைவீர்கள். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்கள் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் கவனம் தேவை. ஆண்டின் பிற்பாதியில் உடல்நிலை பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் ; 1,2,3,9,10,
நிறம் ; மஞ்சள், சிவப்பு
கிழமை ; வியாழன், ஞாயிறு
கல் ; புஷ்ப ராகம்
திசை ; வடகிழக்கு
தெய்வம் ; தட்சிணாமூர்த்தி


No comments: