Rasi palangal

Tuesday, April 4, 2017

தமிழ் புத்தாண்டு பலன்கள் கன்னி

தமிழ் புத்தாண்டு பலன்கள் கன்னி

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை -- 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே  நல்ல ஞாபக சக்தியும், எதிலும் நிதானமாகவும், நேர்மைகயாகவும் செயல்படும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு இந்த ஹேவிளம்பி வருடத்தில் ருணரோக ஸ்தானமான 6ம் வீட்டில் கேது ஆவணி 2ம் தேதி வரை சாதமாக சஞ்சாரம் செய்வதும், முயற்சி ஸ்தானமான 3ம் வீட்டில் சனி ஆனி 6ம் தேதி முதல் ஜப்பசி 9ம் தேதி வரை பலமாக சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் முன்னேற்றம் மிகுந்த பலன்களை அடைய முடியும் என்றாலும் ஆண்டின் முற்பாதி வரை குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் நெருக்கடிகள் நிலவும். எதிலும் கவனமாக செயல்பட்டால் மட்டுமே லாபகரமான பலன்களை அடைய முடியும். நெருங்கியவர்களால் சில மன கசப்பான சம்பவங்களும் நடைபெறும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு சற்று அதிகப்படியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். ஆவணி 2ம் தேதி ஏற்படும் ராகு கேது மாற்றத்தால் ராகு 11ம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதும், ஆவணி 27ம் தேதி ஏற்படும் குரு மாற்றத்தின் மூலம் குரு ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான வீட்டிற்கு மாறுதலாக இருப்பதும் உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் அமைப்பாகும். பண வரவில் இருந்த நெருக்கடிகள் குறையும். மங்களகரமான சுபகாரிங்கள் கைகூடி தடபுடலாக நடைபெறும். உங்களிடம் பகைமை பாராட்டியவர்களும் நட்புக்கரம் நீட்டுவார்கள். பணிபுரிபவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் தேடி வரும். வண்டி வாகனங்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். ஜப்பசி மாதம் 9ம் தேதி ஏற்படவிருக்கும் சனி மாற்றத்தினால் சனி 4ம் வீட்டிற்கு மாறுதலாக உள்ளதால் உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி தொடங்க உள்ளது. இதனால் தேவையற்ற அலைச்சல்கள், சுக வாழ்வு பாதிப்படையும் சூழ்நிலைகள், உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகம் என்பதால் அதிக கெடுதிகளை செய்யமாட்டார்.

குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் ஒற்றுமை சுமாராக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சில தடைக்கு பின்பு அனுகூலமான பலன்கள் உண்டாகும். உற்றறார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். எந்த காரியத்திலும்  நிதானமாக செயல்பட்டால் அனுகூலமான பலனைப் பெற முடியும். ஆண்டின் முற்பாதியில் தேவையற்ற செலவுகளைக் குறைப்பதும், மற்றவரை அனுசரித்து நடப்பதும் நல்லது. வீடு மனை வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகள் ஆண்டின் பிற்பாதியில் நிறைவேறும்.
உடல் ஆரோக்கியம்
உடல்நிலையில் புதுத் தெம்பும், உற்சாகமும் உண்டாகும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடித்து அனைவரின் பாராட்டுல்களையும், பெறுவதால் மனதில் உற்சாகம் உண்டாகும். பயணங்களால் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடைபெற்று மகிழ்ச்சி அளிக்கும். ஆண்டின் பிற்பாதி உங்களுக்கு அனுகூலம் மிகுந்ததாக இருக்கும்
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு கனவுகள் நினைவாகும். எதிர்பார்க்கும் உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கப் பெறும். எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். வெளியூர் வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புவர்களின் நோக்கம் நிறைவேறும். புதிய வேலை வாய்ப்பும் தகுதிக்கேற்றபடி அமைந்து விடும். தேவையற்ற அலைச்சல் ஏற்படும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கப் பெறுவார்கள். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை தொழிலை அபிவிருத்தி செய்ய உதவும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவர்களாலும், அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் உதவிகளும் தடையின்றி கிட்டும். ஆண்டின் முற்பாதியில் பெரிய முதலீடுகளில் செய்யும் காரியங்களில் கவனம் தேவை.
கொடுக்கல் வாங்கல்
காண்டிராக்ட் போன்றவற்றில் கவனத்துடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். கொடுக்கல் வாங்கலில் திருப்தியான நிலையும், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதால் பெரிய மனிதர்களின் ஆதரவும் கிடைக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது.
அரசியல்
அரசியல்வாதிகளின் பெயர், புகழ் உயரக்கூடிய காலமாகும். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். தலைவர்களின் ஆதரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதால் மக்களின் ஆதரவையும் பெறுவீர்கள். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
விவசாயிகள்
விவசாயிகள் விளைச்சலை இரட்டிப்பாகப் பெறுவார்கள். சந்தையில் உங்களின் விளைபொருளுக்கேற்ற விலையும் சிறப்பாகக் கிடைக்கும். அரசாங்க உதவிகளால் அனுகூலம் ஏற்படும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் புதிய பூமி, மனை வாங்கும் யோகம், புதிய பம்ப் செட்டுகள் அமைக்கும் வாய்ப்பு போன்றவை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவகங்களும் நடைபெறும்.
கலைஞர்கள்
புதிய வாய்ப்புகள் தேடி வரும். சில நேரங்களில் போட்டிகள் அதிகரித்தாலும் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீகள். வெளியூர் வெளிநாடுகள் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும். ஆண்டின் பிற்பாதியில் பொருளாதார நிலை உயரும். வர வேண்டிய பாக்கி தொகைகளும் வந்து சேரும். பெயர், புகழ் மேன்மையடையும்
பெண்கள்
நினைத்த காரியங்கள் நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும். கணவன், மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. பொருளாதார உயர்வுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சிறப்பான புத்திர பாக்கியமும் அமையும். ஆண்டின் பிற்பாதியில் அனுகூலமான பலன்கள் அதிகரிக்கும். ஆடை ஆபரணம் சேரும். வீடுமனை வாங்கும் முயற்சிகளில் சற்று சிநதித்து செயல்பட்டால் அனுகூலப்பலன் உண்டாகும். உடல்நிலையில் சேர்வும், மந்த நிலையும்  இருக்கும். பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும்
மாணவ மாணவியர்
கல்வியில் உயர்வுகளும் மேன்மைகளும் உண்டாகும். உயர்கல்வி ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு தடைகள் நிலவும். நல்ல நண்பர்களின் சேர்க்கை சாதகமான பலனை உண்டாக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறும். விளையாட்டு துறைகளிலும் அனுகூலப் பலன் உண்டாகும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 4,5,6,7,8
நிறம் - பச்சை, நீலம்
கிழமை - புதன், சனி
கல் - மரகத பச்சை
திசை - வடக்கு

தெய்வம்- ஸ்ரீ விஷ்ணு

No comments: