Rasi palangal

Thursday, April 6, 2017

தமிழ் புத்தாண்டு பலன்கள் மகரம்

தமிழ் புத்தாண்டு பலன்கள் மகரம்

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை -- 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001, 

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே செய்வன திருந்த செய் என்பதற்கேற்றபடி எந்த காரியத்தை எடுத்துக் கொண்டாலும் அதைத் திறம்பட செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு இந்த ஹேவிளம்பி வருடத்தில் ஆண்டின் முற்பாதியில் ஆண்டு கோளான குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9ம் வீட்டில் பலமாக சஞ்சாரம் செய்வதால் தொழில் உத்தியோக ரீதியாக சாதகமான பலன்கள் தொடர்ந்த படியிருக்கும். நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்திலும்  அனுகூலப்பலன் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண சுபகாரியங்கள் யாவும் கைகூடும். சிலருக்கு சிறப்பான புத்திரபாக்கியமும் அமையும். கொடுக்கல் வாங்கல்கலிலும் சரளமான நிலை இருக்கும் என்றாலும் குரு ஆவணி 27ம் தேதி முதல் ஜீவன ஸ்தானமான 10ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் ஆண்டின் பிற்பாதியில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருப்பது, எந்தவொரு முடிவு எடுப்பதென்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்தமான நிலையே தொடரும் என்றாலும் பொருட் தேக்கமின்றி சமாளிக்க முடியும். தற்போது 2,8ல் சஞ்சரிக்கும் கேது ராகு வரும் ஆவணி 2ம் தேதி முதல் ராகு 7லும், கேது ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும். பேச்சைக் குறைத்துக் கொண்டு மற்றவர்களை அனுசரித்து நடந்து கொள்வது மிகவும் நல்லது. உங்கள் ராசியாதிபதி சனிபகவான் ஆண்டின் தொடக்கத்தில் அதிசாரமாக 12ம் வீட்டில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பாகும். சனி ஆனி 6ம் தேதி முதல் ஜப்பசி 9ம் தேதி வரை பின்னோக்கி மீண்டும் 11ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் அனுகூலமான பலன்களை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நற்பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். ஜப்பசி 9ம் ஏற்படவிருக்கும் சனி மாற்றத்தால் உங்களுக்கு ஏழரைச்சனி தொடங்க உள்ளது. இதனால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும்.   நீங்கள் எதிலும் சற்று நிதானத்துடன் செயல்பட்டால் மட்டுமே நற்பலன்களை அடைய முடியும். பண விஷயத்தில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். நெருங்கியவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம்.
               
குடும்பம் பொருளாதார நிலை
குடும்ப ஒற்றுமை சுமாராக இருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. திருமண சுபகாரியங்கள் ஆண்டின் முற்பாதியில் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பொருளாதார நிலை சுமாராகவே இருக்கும். தேவையற்ற செலவுகளைக் குறைத்து சிக்கனமாக செயல்பட்டால் மட்டுமே சேமிக்க முடியும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.
உடல் ஆரோக்கியம்
உடல்நிலையில் அடிக்கடி சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளை சற்று கஷ்டப்பட்டே முடிக்க நேரிடும். உடல் நிலை சோர்வாக அமைவதால் எந்த காரியத்திலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட முடியாமல் போகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் ஓரளவுக்கு மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள்.
உத்தியோகம்
ஆண்டின் முற்பாதி ஓரளவுக்கு முன்னேற்றங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். தடைப்பட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். வேலைபளு அதிகரித்தாலும் சிரமம் பாராது அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கௌரவ பதவிகளால் பொறுப்புகள் அதிகரித்து அதிக நேரம் உழைக்க நேரிடும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடப்பது உத்தமம்.
தொழில் வியாபாரம்
எதிர்பர்த்த லாபம் அமையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதபலன் கிட்டும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலங்கள் அதிகரித்தாலும், அதன் மூலம் அலைச்சலும் உண்டாகும். ஆண்டின் முற்பாதி ஓரளவுக்கு ஏற்றமிகுப் பலன்களை ஏற்படுத்தும். ஆண்டின் பிற்பாதியில் பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பதும் மிகவும் உத்தமம்.
கொடுக்கல் வாங்கல்
கமிஷன் ஏஜென்சி போன்றவற்றில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் அடைய முடியாது. பண விஷயத்தில் மிகவும் கவனமாகவே செயல் படவேண்டும். பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தினால் வீண் விரயம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாது.
அரசியல்
அரசியல்வாதிகள் தங்கள் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்படிப்பது நல்லது. எடுக்கும் காரியங்களில் தடை தாமதங்கள் நிலவினாலும் முழு மூச்சுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்தால் வீண் குழப்பங்கள் குறையும். மக்களின் தேவை அறிந்து செயல்பட்டால் அவர்களின் ஆதரவைகளைப் பெறலாம்.
விவசாயிகள்
விவசாயிகள் சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும் மகசூல் ஒரளவுக்கு திருப்தியளிப்பதாக அமையும். விளைபொருளுக்கேற்ற விலையை சந்தையில் பெற முடியாமல் போகும் என்றாலும் நஷ்டம் ஏற்படாது. வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளால் சிறுசிறு மன சஞ்சலங்கள் உண்டாகக் கூடும். வங்கிக் கடன்களை குறித்த நேரத்தில் செலுத்த முடியாமல் போகும். கால்நடைகளால் ஒரளவுக்கு லாபத்தினை அடைவீர்கள்.
கலைஞர்கள்
புதிய வாய்ப்புகள் தேடி வந்தாலும் பண வரவுகளில் சில தடைகள் நிலவும். உடன் பணிபுரியும் கலைஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். அனைவரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகளால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் அலைச்சலும் அதிகரிக்கும்.
பெண்கள்
குடும்ப ஒற்றுமை சுமாராக அமையும். தேவையற்ற வாக்குவாதங்களால் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து நல்லது. உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும். மருத்துவ செலவுகள் சற்று ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. உற்றார், உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். பொருளாதார நிலை சுமாராகவே இருக்கும். பிறரிடம் எந்த பொருளையும இரவல் வாங்குவதை தவிர்க்க வேண்டும். சுபகாரியங்கள் ஆண்டின் முற்பாதியில் கைகூடும்.
மாணவ மாணவியர்
கல்வியில் சற்று அதிக அக்கறை எடுத்து படிப்பது நல்ல மதிப்பெண்களைப் பெற வழி வகுக்கும். பெற்றேர் ஆசிரியர்களின் ஆதரவு ஓரளவு சிறப்பாகவே இருக்கும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பதும், வீணான நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பதும் கல்வியில் முன்னேற்றம் நிலையை ஏற்படுத்தும். விளையாட்டுகளில் ஈடுபடும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் ; 5,6,7,8,
நிறம் ; நீலம், பச்சை
கிழமை ; புதன், வெள்ளி
கல் ; நீலக்கல்
திசை ; மேற்கு
தெய்வம் ; விநாயகர்


No comments: