Tuesday, April 4, 2017

தமிழ் புத்தாண்டு பலன்கள் துலாம்

தமிழ் புத்தாண்டு பலன்கள் துலாம்

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை -- 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,



அன்புள்ள துலா ராசி நேயர்களே, நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவராகவும், எந்த காரியத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிக¬ளைப் பெற கூடிய ஆற்றல் உடையவராகவும் விளங்கும் உங்களுக்கு இந்த ஹேவிளம்பி வருடத்தில் ஆண்டுகோள் என வர்ணிக்கப்படக் கூடிய குருபகவான் விரயஸ்தானமான 12ம் வீட்டில் ஆவணி 27ம் தேதி வரையும் அதன் பின்பு ஜென்ம ராசியிலும் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பாகும். பொருளாதார நிலையில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். பணவிஷத்தில் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகிளில் தடை ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் மன அமைதி குறையும்சர்ப கிரகமான ராகு 11ம் வீட்டில் ஆவணி 2ம் தேதி வரை சஞ்சரிப்பது சற்று ஆறுதலை தரும் அமைப்பு என்றாலும் ஆவணி 2ம் தேதி முதல் 4ல் கேது, 10ல் ராகு சஞ்சரிக்க இருப்பதால் தேவையில்லாத அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறு உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் உண்டாகும்உங்கள் ராசிக்கு ஆண்டின் தொடக்கத்தில் அதிசாரமாக 3ல் சஞ்சரிக்கும் சனி ஆனி மாதம் 6ம் தேதி முதல் ஜப்பசி மாதம் 9ம் தேதி வரை மீண்டும் பின்னோக்கி 2ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் சில நெருக்கடிகளை நீங்கள் எதிர் கொண்டாலும் ஜப்பசி 9ம் தேதி ஏற்படவிருக்கும் சனி மாற்றத்தால் உங்களுக்கு ஏழரைச்சனி முழுமையாக முடிவடைந்து முயற்சி ஸ்தானமான 3ம் வீட்டில் சனி சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். குரு சாதகமற்று சஞ்சரித்தாலும் சனியின் சாதகமான சஞ்சாரத்தால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் நல்ல லாபத்தையும் அனுகூலத்தையும் அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கப் பெறும். பொருளாதார மேம்பாடுகளால் சேமிப்பும் பெருகும். கடன்கள் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வெற்றி மேல் வெற்றிகளைப் பெறுவீகள்.

குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் உள்ளவர்களை மிகவும் அனுசரித்து செல்ல நேரிடும். தேவையற்ற பிரச்சனைகளாலும் வாக்குவாதங்களாலும் நெருங்கியவர்களிடையே ஒற்றுமை குறையும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் தேவைகள் பூர்த்தி ஆகும். வண்டி வாகனங்களாலும் செலவுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது.
உடல் ஆரோக்கியம் 
உடல்நிலையில் அடிக்கடி சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எந்த முயற்சிகளையும் கடின உழைப்பிற்கு பிறகு தான் முடிக்க முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். நெருங்கியவர்களுக்கு உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் ஏற்படுவதால் மனநிம்மதி குறையும்
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைக்கு பின்பு கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். உடல்நிலை பாதிப்புகள் இருக்கும் என்றாலும் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து அதிகாரிகளிடம் நற்பெயர் எடுப்பீர்கள். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.
தொழில் வியாபாரம்
வீண் போட்டி பொறாமைகளால் லாபம் குறைந்து போகும். வியாபார நிலை மந்தமாக இருந்தாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகளிடையே நம்பிக்கை குறைவுகளும், நாணயமின்மையும் உண்டாகும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. ஆண்டின் பிற்பாதியில் கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் துறைகளில் லாபம் கிடைக்கும்தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் கடினமான வேலையை கூட எளிதில் செய்து முடிக்க முடியும்.
கொடுக்கல் வாங்கல்
கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருந்தால் நற்பலனை அடையலாம். பண விஷயத்திலும் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆண்டின் பிற்பாதியில் கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் துறைகளில் லாபம் கிடைக்கும்நண்பர்களின் உதவியால் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். கடினமாக உழைக்க வேண்டி இருந்தாலும் அதற்கான நற்பலளை பெற முடியும்.
அரசியல்
பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் அதனை பாதுகாத்துக் கொள்ள அதிகம் பாடுபட வேண்டிவரும். எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் நிறைய தடைகளை சந்திக்க நேரிடும். உடனிருப்பவர்கள் அனுகூலமாக செயல்படுவதால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும்.
விவசாயிகள்
மகசூல் சற்று சுமாராக இருந்தாலும் சந்தையில் நல்ல விலைபோகும். ஆண்டின் தொடக்கத்தில் தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது மிகவும் நல்லது. ஆண்டின் பிற்பாதியில் தாராள தன வரவுகள் கிடைக்கப் பெறுவதால் ஆழ்கிணறு போடுவது புதிய நவீன கருவிகள் வாங்குவது போன்றவை நிறைவேறும். கால்நடைகளால் ஒரளவுக்கு லாபத்தைப் பெறுவீர்கள்.
கலைஞர்கள்
தொழிலில் நிறைய போட்டிகள் நிலவும். வெளியூர் வெளிநாட்டு பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் நற்பலனை அடைவீர்கள். வரவேண்டி சம்பளத் தொகைகளை வசூலிப்பதில் தாமத நிலை ஏற்படும். ஆண்டின் பிற்பாதியில் புதிய வாய்ப்புகள் கிடைத்து மன நிம்மதி ஏற்படும். பணவரவுகளும் சிறப்பாக இருக்கும்.
பெண்கள்
உடல்நிலையில் இருந்த சோர்வு, மந்தமான நிலை போன்றவை படிப்படியாக விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றல் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகள் ஆண்டின் பிற்பாதியில் கைகூடும். கணவன், மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவியால் குடும்ப தேவைகள் பூர்த்தி ஆகும். முடிந்த வரை பேச்சைக் குறைத்துக் கொள்வதும் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம்.
மாணவ மாணவியர்
கல்வியில் சற்று மந்தமானமான நிலையும், எவ்வளவு தான் முயன்று படித்தாலும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாத சூழலும் உண்டாகும் என்றாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள். விளையாட்டு போட்டிகளில் ஈடுபட முடியாத அளவிற்குல் உடல்நிலையில் சோர்வு உண்டாகும். தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை குறைத்து கொள்வது  நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 4,5,6,7,8
நிறம் - வெள்ளை, பச்சை
கிழமை - வெள்ளி, புதன்
திசை - தென் கிழக்கு
கல் - வைரம்
தெய்வம் - லட்சுமி


No comments: