Thursday, April 6, 2017

தமிழ் புத்தாண்டு பலன்கள் கும்பம்


தமிழ் புத்தாண்டு பலன்கள் 

 

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை -- 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,



அன்புள்ள கும்ப ராசி நேயர்களே, புரட்சிகரமான கொள்கைகளை உடையவர்களாகவும், எந்த காரியத்திலும் அதன் சாதகப் பலனையும் ஆராய்ந்து செயல்படுவராகவும் விளங்கும் உங்களுக்கு இந்த ஹேவிளம்பி வருடத்தில் உங்கள் ராசியாதிபதி சனி ஆண்டின் தொடக்கத்தில் அதிசாரமாக 11ல் சஞ்சரிப்பது நல்ல பலன்களை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் வரும் ஆனி மாதம் 6ம் தேதி முதல் ஜப்பசி மாதம் 9ம் தேதி வரை பின்னோக்கி மீண்டும் 10ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் சிறிது நெருக்கடிகளை எதிர் கொள்ள நேரிடும். ஜப்பசி 9ம் தேதி ஏற்படவிருக்கும் சனி மாற்றத்தால் லாப ஸ்தானமான 11ல் சனி சஞ்சரிக்க இருப்பது உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் அமைப்பாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும்பயணங்களால் அனுகூலப்பலன்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். எந்த விதமான எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெற கூடிய ஆற்றல் உண்டாகும். பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் இந்த ஆண்டு தொடக்கத்தில் 8ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் சுபகாரியங்கள் நடைபெற இடையூறுகள் ஏற்படும் என்றாலும் ஆவணி 27ம் தேதி ஏற்படும் குரு மாற்றத்தால் 9ம் வீட்டிற்கு செல்ல இருப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் நடைபெறும். பொருளாதார நிலை மேன்மை அடையும். உங்களுக்குள்ள சோதனைகள் யாவும் ஆண்டின் பிற்பாதியில் ஒரளவுக்கு குறையும். பெரிய முதலீடுகள் கொண்டு செய்ய நினைக்கும் காரியங்களில் அதிக கவனம் தேவை. ஆண்டில் தொடக்கத்தில் சில ஆரோக்கிய பாதிப்புகள் இருந்தாலும் பிற்பாதியில் உடல்நிலையில் முன்னேற்றங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு ஆண்டின் முற்பாதியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஆண்டின் பிற்பாதியில் ஓரளவுக்கு அனுகூலப்பலன்களை அடைய முடியும். தற்போது 1,7ல் சஞ்சரிக்கும் கேது, ராகு ஆவணி 2ம் தேதி முதல் முதல் ராகு 6லும், கேது 12லும் சஞ்சரிக்க இருப்பதால் நெருங்கியவர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் ஆண்டின் பிற்பாதியில் முழுமையாக குறையும். மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும் பகைமை பாராட்டியவர்களும் நட்பு கரம் நீட்டுவார்கள்.

குடும்பம் பொருளாதார நிலை
குடுமப ஒற்றுமை சுமாராக இருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு நற்பலன்கள் அமையும். பொருளாதார நிலை ஒரளவுக்கு திருப்தி தரும். ஆவணி மாதத்திற்கு பிறகு சுபகாரியங்கள் கைகூடும். உற்றர், உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும் வீண் செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகள் நிலவினாலும் முடிவில் வெற்றி பெறுவீர்கள்.
உடல் ஆரோக்கியம்
உடல் நிலை சோர்வாக அமைந்தாலும் எந்த காரியத்தையும், எளிதில் செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் ஒரளவுக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும். எதிர்பாராத சுப செய்திகள் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும்
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்க நேரிடும் என்பதால் எதிலும் சற்று கவனம் தேவை. முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் ஆவணி மாதத்திற்கு பிறகு கிட்டும். வேலைப்பளு சற்று அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகி படிப்படியாக முன்னேற்றத்தை அடைவீர்கள். எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவர்களால் சுமாரான லாபம் அமையும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் ஒரளவுக்கு ஏற்றம் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் தொழிலை மேலும் அபிவிருத்தி செய்ய முடியும்.
கொடுக்கல் வாங்கல்
கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்றவற்றில் நிலவிய பல்வேறு தடைகள் மறைந்து லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளையும், வாக்குறுதிகளையும் ஆண்டின் முற்பாதியில் தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்கள் திருப்திகரமாக வசூலாகும். வம்பு, வழக்குகளில் ஆண்டின் பிற்பாதியில் சாதகப்பலன் கிடைக்கும்.
அரசியல்
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் சில தடைகளை சந்திக்க நேர்ந்தாலும் முழு முயற்சியுடன் பாடுபட்டு நிறைவேற்றி விடுவீர்கள். அமைச்சர்களின் ஆதரவைப் பெற அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். உடன் இருப்பவர்கள் உதவியால் பிரச்சனைகள் குறையும்.
விவசாயிகள்
விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவிற்கு மகசூல் இருக்கும். புழு, பூச்சி போன்றவற்றின் தொல்லைகளால் வீண் விரயங்கள் ஏற்பட்டாலும் காய், கனி, பூ வகைகள் மூலம் ஒரளவுக்கு லாபங்களைப் பெற முடியும். கால்நடைகளாலும் பால், வெண்ணெய், நெய் போன்றவற்றாலும் லாபம் கிட்டும். ஆண்டின் பிற்பாதியில் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் நடைபெறும். பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும்.
கலைஞர்கள்
தொழிலில் நிறைய போட்டிகள் நிலவினாலும் உங்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் கண்டிப்பாக வந்தடையும். பணவரவுகளால் சில தடைகளை சந்தித்தாலும் சிலரின் ஆதரவுகளால் அனைத்தும் சுமூகமாக முடிவடையும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.
பெண்கள்
உடல்நிலை சற்று சோர்வாகவே அமையும். கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பொருளாதாரம் ஓரளவுக்கு திருப்தி அளிக்கும். ஆண்டின் முற்பாதியில் சில பிரச்சனைகளைச் சந்தித்தாலும் பிற்பாதியில் ஏற்றமிகுப் பலன்களை அடைவீர்கள். சுபகாரிய முயற்சிகள் ஆவணி மாதத்திற்கு பிறகு கைகூடும். சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும்.
மாணவ மாணவியர்
கல்வியில் நிலவிய மந்த நிலை விலகி சுறுசுறுப்பாக செயல்பட முடியும். எதிர்பார்த்த மதிப்பெண்களை அடைந்து விடுவீர்கள். உடல்நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு பள்ளிக்கு விடுமுறை எடுக்க நேரிடலாம். எதிலும் கவனமுடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட்டால் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் :  5,6,8
நிறம் ; நீலம், பச்சை
கிழமை : புதன், சனி
கல் ; நீலக்கல்
திசை ; மேற்கு

தெய்வம் ; ஐயப்பன்

No comments: