Rasi palangal

Tuesday, April 4, 2017

தமிழ் புத்தாண்டு பலன்கள் விருச்சிகம்

தமிழ் புத்தாண்டு பலன்கள் 

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை -- 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே கேட்பவர்களை தன் வசமாக்கி கொள்ளக்கூடிய அளவிற்கு பேச்சாற்றல் கொண்ட உங்களுக்கு இந்த ஹேவிளம்பி வருடத்தில் ஆண்டுக்கோள் என வர்ணிக்கப் படக்கூடிய குருபகவான் லாப ஸ்தானமான 11ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் ஆண்டின் முற்பாதியில் பொருளாதார ரீதியாக ஏற்றம் மிகுந்த பலன்களை தடையின்றி அடைவீர்கள். மங்களரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைப்பட்ட உயர்வுகள் கிடைக்கப்பெறும். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமை கரம் நீட்டுவார்கள். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் நற்பலனை ஏற்படுத்துவார் என்றாலும் ஆவணி 27ம் தேதி ஏற்படக்கூடிய குரு மாற்றத்தினால் விரய ஸ்தானமான 12ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் ஆண்டின் பிற்பாதியில் பொருளாதார நிலையில் நெருக்கடிகள் உண்டாகும். தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் வியாபாரத்திலும் மந்தமான நிலை நிலவும். போட்டி பொறாமைகளையும் சமாளிக்க வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் தேவையற்ற பிரச்சனைகளை எதிர் கொள்ள நேரிடும் என்பதால் எதிலும் கவனமாக செயல்படுவது உத்தமம். ஆண்டின் தொடக்கத்தில் அதிசாரமாக 2ல் சஞ்சரிக்கும் சனி ஆனி 6ம் தேதி முதல் ஜப்பசி 9ம் தேதி வரை பின்னோக்கி மீண்டும் ஜென்ம ராசியில் சஞ்சரித்து, அதன் பின்பு ஜப்பசி 9ம் தேதி முதல் 2ல் வீட்டில் சஞ்சரிப்பார். இவ்வாண்டு முழுவதும் உங்களுக்கு ஏழரைச்சனி தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். பேச்சில் நிதானத்த கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆண்டின் தொடக்கத்தில் 4, 10ல் சஞ்சரிக்கும் கேது ராகுவால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும் ஆவணி 2ம் தேதிக்கு பிறகு ஏற்படக்கூடிய ராகு கேது மாற்றத்தினால் கேது 3ம் வீட்டிலும், ராகு 9 வீட்டிலும், சஞ்சரிக்க உள்ளதால் உங்களுக்குள்ள பிரச்சனைகள் ஓரளவுக்கு குறையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக் நல்ல லாபம் கிட்டும். அசையா சொத்து வழியில் இருந்த வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.

குடும்பம் பொருளாதார நிலை
கணவன் மனைவி விட்டு கொடுத்து செல்வது பேச்சில் நிதானத்தைதே கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களின் ஆதரவு சிறப்பாக அமையும். ஆண்டின் முற்பாதியில் பொருளாதார உயர்வுகளால் புதிய பொருட்சேர்க்கைகள் அமையும். சுபகாரியங்கள் தடபுடலாக நடந்தேறும். வீடு கட்டும் யோகம் அமையும். சிலர் பழைய வீட்டைப் புதுப்பிப்பார்கள். புத்திரர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் படிப்படியாகக் குறையும்.
உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் ஏற்படும். எடுக்கும் எந்தவொரு காரியத்தையும் சில தடைகளுக்கு பின்பு தான் செய்து முடிக்க முடியும்உற்றார் உறவினர்களின் உதவி மன நிம்மதியைத் தரும். தொலைதூர பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். ஆண்டின் முற்பாதியில்  சுப செய்திகள் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும். தேவையற்ற மனக்குழப்பங்கள் சில நேரங்களில் தோன்றி மறையும்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவுகளால் வேலைபளு குறையும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். பொருளாதார நிலை சுமாராக அமையும். எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். வெளியூர் வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் நோக்கம் நிறைவேறும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். பெரிய முதலீடுகளில் தொழிலை விரிவு படுத்தும் செயல்களில் கவனம் தேவை. எதிர்பார்க்கும் கடனுதவிகள் கிடைக்கப் பெற்று புதிய நவீன கருவிகளை வாங்குவீர்கள். கூட்டாளிகளிடையே விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் அனுகூலப்பலன் உண்டாகும்.
கொடுக்கல் வாங்கல்
கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் போன்றவற்றில் சுமாரான லாபம் அமையும், கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கொடுத்த கடன்கள் திருப்திகரமாக வசூலாகும்.
அரசியல்
பெயர் புகழ் உயரக்கூடிய காலமாக அமையும். எடுக்கும் காரியங்களை திட்டமிட்டு செயல்படுத்தி அனைவரின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைத் தவறாமல் காப்பாற்றி அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கட்சி பணிக்காக வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிட்டும்அமைச்சர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.
கலைஞர்கள்
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். ஆண்டின் முற்பாதியில் பல சிறப்பான வாய்ப்புகள் தேடி வரும். நீங்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த மக்களைக் கவரக்கூடிய கதாபாத்திரங்களும் அமையும். ரசிகர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.
விவசாயிகள்
விவசாயிகளுக்கு விளைச்சல் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். நீர் பற்றாக்குறை வரப்பு தகாரறு என சில பிரச்சனைகளை சந்தித்தாலும் பட்ட பாட்டிற்கான பலன்கள் தடையின்றி கிடைத்து விடும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். புதிய நவீன கருவிகள் வாங்குவது, பூமி, மனை வாங்குவது போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது நல்லது.
பெண்கள்
பெண்களுக்கு நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஆண்டின் முற்பாதியில் சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பொன்பொருள் சேரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன் மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. சிலருக்கு புத்திரபாக்கியம் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆண்டின் பிற்பாதியில் நிம்மதி குறையும்.
மாணவ  மாணவியர்
கல்வியில் கடின முயற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே முன்னேற்றமான பலன்களை அடைய முடியும். உயர்கல்வி ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி கிட்டும். கல்விக்காக எதிர்பார்க்கும் கடனுதவிகளும் கிடைக்கப் பெறும். சில பெரிய மனிதர்களின் ஆதரவும் கிடைக்கும். தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் : 1,2,3,9
நிறம் ; அடர்சிவப்பு, மஞ்சள்
கிழமை ; செவ்வாய், வியாழன்
திசை ; தெற்கு
கல் ; பவளம்

தெய்வம் ; முருகன்

No comments: