Thursday, May 4, 2017

இன்று - 04.05.2017

இன்று -  04.05.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

வர்ணிக்க முடியாத நற்பலன் தரும் தசை!-                                                                  முனைவர் முருகு பாலமுருகன்

நோய் தீர்க்கும் ஸ்ரீரங்கநாதர்! –   சித்தயோகி சிவதாசன் ரவி

உத்திரட்டாதியினர் உச்சம் தொட என்ன வழி! நட்சத்திரப் பரிகாரங்கள்!                                                       ஜோதிஷண்முகம்

உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகுபாலமுருகன்

தேய்பிறையில் முகூர்த்தம் வைக்கலாமா?  அம்சி விவேகானந்தன்

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகுபாலமுருகன்

அறிவியல் ஆன்மிகத்தை இணைக்கும் ஜோதிடம்!-- - -டாக்டர் இரா.ரகு M,Sc Astro

வேலைக்கு உலை வைக்குமா கோட்சார குரு?-  -சரவணன் Gendral Sec ICAS

பெரும் பிரச்சனை தரும் பிரம்மஹத்தி தோஷம்! – தீர்க்கும் பரிகாரம்? (வாரம் ஒரு பரிகாரம்)-                                 விசு அய்யர்

வருமுன் காக்கும் வழி! –             ஜோதிடச்சுடர் ந. ஞானரதம் M.Phil Astro

ஆயிரம் பொன் பெறும் அதிர்ஷ்ட ஜாதகம்! -     பிராஜசேகரன் M.Phil Astro

27 நட்சத்திரங்களின் தன்மைகள்!
&மன்னை ஸ்ரீமதி விஅகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

சகுனத்தால் வென்ற சத்ரபதி!-         சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

வார ராசிபலன் (07-05-2017 முதல் 13-05-2017 வரை) சித்திரை 24 முதல் 30 வரை

முனைவர் முருகுபாலமுருகன்




இன்றைய  பஞ்சாங்கம்
04-05-2017, சித்திரை-21, வியாழக்கிழமை, நவமி திதி இரவு 07.30 வரை பின்பு வளர்பிறை தசமி. மகம் நட்சத்திரம் பின்இரவு 05.02 வரை பின்பு பூரம். அமிர்தயோகம் பின்இரவு 05.02 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. கத்ரி ஆரம்பம் பகல் 02.38. சுப முயற்சிகளையும். பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

சுக்கி

சூரிய
புதன்
செவ்

கேது 
திருக்கணித கிரக நிலை
04.05.2017



சந்தி
ராகு
சனி(வ)
 

               
குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் -  04.05.2017

மேஷம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவி இன்று உங்களுக்கு கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளி மாநிலங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.
ரிஷபம்
இன்று எந்த ஒரு செயலிலும் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறையும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். மனதில் மகிழச்சி ஏற்படும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு இன்று அனு-கூலமான பலன் உண்டாகும். பணப் பிரச்சனைகள் குறையும்.
கடகம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக அமையும். பணவரவு தாரளமாக இருக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் நல்ல பலன் கிடைக்கும். சேமிப்பு கூடும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவி கிட்டும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். வருமானம் பெருகும்.
கன்னி
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம்.
துலாம்
இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். புத்திர வழியில் அனுகூலம் கிட்டும். பொன் பொருள் சேரும். பழைய கடன்கள் குறையும். அமைதி நிலவும்.
தனுசு
இன்று உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் அனுகூலப்பலனை அடையலாம். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
மகரம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.
கும்பம்
இன்று உங்களுக்கு தீடீர் பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருள்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். சுபகாரியங்கள் கைகூடும்.
மீனம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். வழக்கு சம்மந்தமான விஷயங்களில் வெற்றி உண்டாகும். தொழிலில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய பொருள் வாங்குவீர்கள்.
Post a Comment

Intha Naal