Rasi palangal

Monday, May 8, 2017

இன்று - 08.05.2017

இன்று -  08.05.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்

சிறுகக் கட்டி பெருக வாழ்!-                முனைவர் முருகு பாலமுருகன்

கனவுக் கல்வி், கல்லூரியை கைவசமாக்கும் வழி என்ன? (வாரம் ஒரு பரிகாரம்)-                                  விசு அய்யர்

வார ராசிபலன் (14-05-2017 முதல் 20-05-2017 வரை) சித்திரை 31 முதல் வைகாசி 06 வரை                                     முனைவர் முருகு பாலமுருகன்

கற்காமல் கல்விநிலையம் நடத்துபவர்!-  சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

27 நட்சத்திரங்களின் தன்மைகள்!
&மன்னை ஸ்ரீமதி வி. அகிலாண்டேஸ்வரி ஐயர் M.Phil Astro

நிறைய பொன் சேர்த்து புதைத்து வைக்கும் ஜாதகர்! -                                                                       பி. ராஜசேகரன் M.Phil Astro

அமானுஷ்ய தோஷங்கள் தீர்க்கும் அபுர்வ மூலிகைகள்! – கடகம் இராமசாமி

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகு பாலமுருகன்

கொடுத்துக் கெடுக்கும் கோட்சாரம்!-   -      . சரவணன் Gendral Sec ICAS

நட்சத்திரங்கள் தரும் நோய்கள்!-- - -           டாக்டர் இரா. ரகு M,Sc Astro

வியாபாரத்தில் வெற்றி தரும் குறியீடு! –    சித்தயோகி சிவதாசன் ரவி

ரேவதி நட்சத்திரப் பரிகாரங்கள்!            ஜோதிஷண்முகம்


உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகு பாலமுருகன்


இன்றைய  பஞ்சாங்கம்
08-05-2017, சித்திரை-25, திங்கட்கிழமை, திரியோதசி திதி இரவு 11.16 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. அஸ்தம் நட்சத்திரம் காலை 09.43 வரை பின்பு சித்திரை. சித்தயோகம் காலை 09.43 வரை பின்பு பிரபலாரிஷ்டயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள் சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

சுக்கி

சூரிய
புதன்
செவ்

கேது 
திருக்கணித கிரக நிலை
08.05.2017ராகு
சனி  (வ)


               
குரு  (வ)
சந்தி

இன்றைய ராசிப்பலன் -  08.05.2017

மேஷம்
இன்று உங்களுக்கு உடல் நிலை மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுக்கும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். வேலை பளு சற்று குறையும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.
மிதுனம்
இன்று பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
கடகம்
இன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும். வருமானம் பெருகும்.
சிம்மம்
இன்று  எதிர்பாராத மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். திருமண சுப முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சனைகள் இருக்கும்உடனிருப்பவரை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடுகள் மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்.
கன்னி
இன்று உங்களுக்கு தாராள பணவரவு உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். தொழிலில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். உத்தியோகத்தில்  சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.
துலாம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மன கஷ்டங்கள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கா விட்டாலும் நஷ்டம் இருக்காது. வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். மாணவர்களுக்கு படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகும்.
தனுசு
இன்று நீங்கள் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ள பிரச்சனை தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கப்பெறும். பொன் பொருள் சேரும். சுபகாரியங்கள் கைகூடும்.
மகரம்
இன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படும். சுபமுயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். வேலையில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.
கும்பம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
மீனம்


இன்று உங்களுக்கு மன அமைதி இருக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். திடீர் பயணம் உண்டாகும்.

No comments: