Rasi palangal

Tuesday, June 6, 2017

இன்று - 06.06.2017

இன்று -  06.06.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் இதழில்


12 லக்னப் பலன்கள்!-                       முனைவர் முருகுபாலமுருகன்

வார ராசிபலன் (11-06-2017 முதல் 17-06-2017 வரை) வைகாசி 28 முதல் ஆனி 03 வரை
முனைவர் முருகுபாலமுருகன்

மகப்பேறு தரும் சிம்மக் குறியீடு! –    சித்தயோகி சிவதாசன் ரவி

உலக அரங்கில் புகழ் பெறுபவர்!-           சிவஸ்ரீ குருஜி ஜி.கே. முத்து குருக்கள்

மணமுறிவுகளைத் தவிர்க்கும் மார்க்கம்! – (வாரம் ஒரு பரிகாரம்)-
விசுஅய்யர்

செல்வம் பெருக 29 அற்புத வழிகள்!   -     கடகம் இராமசாமி

ராகு தோஷ நிவர்த்திக்கு எளிய பரிகாரம்! –      ஜோதி ஷண்முகம்

வழக்கில் வெற்றி தரும் நட்சத்திரம்!-- -           -டாக்டர் இரா.ரகு M,Sc Astro

நீர் ராசிகள்! -                             கே.பிஐயப்ப சர்மா

புதன் தரும் பாண்டித்ய யோகம்! -          அம்சி விவேகானந்தன்

இந்த வார பஞ்சாங்கம்!--                      முனைவர் முருகுபாலமுருகன்

ஹோரை அமைந்தது எப்படி? -             ஜி. ஆர். வெங்கடேஸ்வரன்


உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -     -முனைவர் முருகுபாலமுருகன்



இன்றைய  பஞ்சாங்கம்
06-06-2017, வைகாசி -23, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி பகல் 11.43 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. சுவாதி நட்சத்திரம் இரவு 08.27 வரை பின்பு விசாகம். சித்தயோகம் இரவு 08.27 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2, ஜீவன் - 1. பிரதோஷம். சிவ - முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.



சுக்கி
சூரிய புதன்
செவ்
கேது 
திருக்கணித கிரக நிலை
06.06.2017



ராகு
சனி(வ)
 

சந்தி
குரு (வ)

இன்றைய ராசிப்பலன் -  06.06.2017
மேஷம்
இன்று நீங்கள் எந்த செயலையும் உற்சாகத்தோடு செய்வீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினர் ஆதரவாய் இருப்பார்கள்.
மிதுனம்
இன்று பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். திருமண முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டாகலாம். சேமிப்பு குறையும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று விலகும். சிக்கனமுடன் செயல்பட்டால் கடன் பிரச்சனை குறையும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.
கடகம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வருமானம் பெருகும்.
சிம்மம்
இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். உடல் நிலை புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். வங்கி சேமிப்பு உயரும்.
கன்னி
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது நம்பிக்கையை தரும்.
துலாம்
இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே ஒற்றுமை நிலவும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும். வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட காலதாமதமாகும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.
தனுசு
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வீட்டு தேவைகள் யாவும் பூர்ததியாகும்.
மகரம்
இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். பொருளாதார நிலை உயரும். கடன் பிரச்சனைகள் தீரும். பொன் பொருள் சேரும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். வியாபார முன்னேற்றத்திற்கான திட்டங்களில் சில இடையூறுகள் உண்டா-கும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் சுமை ஓரளவு குறையும். நண்பர்கள் துணை நிற்பர். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.
மீனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு. சுபகாரியங்களை தவிர்க்கவும்.
Post a Comment