Rasi palangal

Wednesday, June 14, 2017

இன்று - 14.06.2017


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



இன்றைய  பஞ்சாங்கம்
14-06-2017, வைகாசி- 31, புதன்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 04.22 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. திருவோணம் நட்சத்திரம் பகல் 03.32 வரை பின்பு அவிட்டம். சித்தயோகம் பகல் 03.32 வரை  பின்பு பிரபலாரிஷ்டயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00



சுக்கி
சூரிய புதன்
செவ்
கேது 
திருக்கணித கிரக நிலை
14.06.2017


சந்தி
ராகு
சனி(வ)
 

குரு

இன்றைய ராசிப்பலன் -  14.06.2017
மேஷம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். நண்பர்களின் ஆலோசனைகள் புது தெம்பை தரும். தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெறலாம்.
மிதுனம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமலிருப்பது உத்தமம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. சுபகாரியங்களை தவிர்க்கவும்.
கடகம்
இன்று நீங்கள் எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான வங்கி கடன் எளிதில் கிடைக்கப்பெறும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு வியத்தகு செய்திகள் வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும்.
கன்னி
இன்று குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும்.
துலாம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு தடங்கல்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற மனஸ்தாபம் தோன்றும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாய் இருப்பார்கள். எதிர்பாராத உதவி கிட்டும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிட்டும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் லாபம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.
தனுசு
இன்று உங்களுக்கு உறவினர்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கடன்கள் குறையும்.
மகரம்
இன்று உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமின்றி கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள்.
கும்பம்
இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருக்கும். உறவினர்களால் வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் லாபம் பெருகும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.
மீனம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். கடன் பிரச்கனைகள் தீரும். சேமிப்பு உயரும். பெண்களுக்கு வேலைபளு குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.
Post a Comment