Wednesday, June 28, 2017

ஜுலை மாத ராசிப்பலன் - 2017

வாங்கி படிக்க தவறாதீர்கள் 
ஜுலை 2017 ஓம்சரவணபவா இதழுடன்
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2017 - 2019
(12 ராசிகளுக்கும் பொதுப்பலன்,பரிகாரம்,
 அதிர்ஷ்டக்குறிப்புகள் அடங்கியது)  
96 பக்கம் இலவச இனைப்பு
இப்படிக்கு
ஜோதிட மாமணி, 
முனைவர் முருகு பாலமுருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம்




ஜுலை மாத ராசிப்பலன் - 2017

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் 
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை -- 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,




சுக்கி
புதன் சூரிய செவ்
கேது 




ராகு 

சனி (

குரு  சந்தி

கிரக   மாற்றம்

3-07-2017 - கடக புதன்
11-07-2017 - கடக செவ்வாய்
16-07-2017 - கடக சூரியன்
21-07-2017 - சிம்ம புதன்
26-07-2017 - மிதுன சுக்கிரன்


மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1 ம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே சிரிக்க சிரிக்க பேசி அனைவரையும் கவர்ந்திழுக்க கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ராசியதிபதி செவ்வாய் சூரியனுடன் 3-ஆம் வீட்டில் மாத முற்பாதியில் சஞ்சரிப்பதால் உங்களுடைய உழைப்பிற்கான பலனை அடைவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்-- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். உற்றார் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை கூடும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் உண்டாகும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். 2-ல் சுக்கிரன் வலுவாக இருப்பதால் குடும்பத்தில் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். தொழில் ரீதியாக வெளியூர், வெளிநாடு பயணங்கள் செல்லும் வாய்ப்பு உருவாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்ககூடும். மாணவர்கள் கல்வியில் ஆர்வமுடன் ஈடுபட்டு முன்னேற்றத்தை அடைவார்கள்.

பரிகாரம் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் -    04-07-2017 இரவு 10.46 மணி முதல் 07-07-2017 பகல் 11.21 மணி வரை

ரிஷபம்  கிருத்திகை 2,3,4ம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன் 5-ல் குரு சஞ்சரிப்பதால் பண வரவு மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும்பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலம் உண்டாகும்கணவன் மனைவியிடையே இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்களாலும் அனுகூலம் கிட்டும். கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும். மாத பிற்பாதியில் சூரியன் செவ்வாய் 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ளலாம். பணம் கொடுக்கல் வாங்கலிலும் எதிர்பார்த்த லாபத்தினை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களையும் எதிர்பார்த்த உயர்வுகளையும் பெறுவார்கள். உடன் பணிபுரிபவர்களாலும் அனுகூலம் கிட்டும்

பரிகாரம் - ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் -    07-07-2017 பகல் 11.21 மணி முதல் 09-07-2017 இரவு 11.21 மணி வரை

மிதுனம் மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே நிதானமான அறிவாற்றல் இருந்தாலும்  சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய காலமாகும். உடல் ஆரோக்கிய ரீதியாக உஷ்ண பாதிப்புகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் ராசிக்கு 3-ல் ராகு 6-ல் சனி சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். கணவன் மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்பட கூடிய காலம் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடிகளால் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம் - சிவ பெருமானை வழிபாடு செய்வதும் குரு பகவானை வணங்குவதும் நல்லது.

சந்திராஷ்டமம் -  09-07-2017 இரவு 11.21 மணி முதல் 12-07-2017 காலை 09.59 மணி வரை

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2, 8-ல் ராகு, கேது 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கவனமாக செயல்பட வேண்டிய காலமாகும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம் என்பதால் சிக்கனமாக செயல்படுவதும் செலவுகளை குறைத்துக் கொள்வதும் உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமணம் நடைபெறுவதில் இடையூறுகள் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டிகள் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்ககூடும். வெளியூர் பயணங்களில் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கை நழுவிப் போகக்கூடிய சூழ்நிலை உருவாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும்.

பரிகாரம் - துர்கையம்மனை வழிபடுவது தட்சிணாமூர்த்திக்கு நெய் தீப மேற்றுவது நல்லது.

சந்திராஷ்டமம் -    12-07-2017 காலை 09.59 மணி முதல் 14-07-2017 மாலை 06.33 மணி வரை

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1 ம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட உங்களுக்கு ராசியதிபதி சூரியன் லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய் சேர்க்கைப் பெற்று மாத முற்பாதியில் சஞ்சரிப்பதாலும் 2-ல் குரு வலுவாக இருப்பதாலும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும் அமைப்பு தாராள தனவரவு உண்டாகும். வியாபார ரீதியான போட்டி பொறாமைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். அபிவிருத்தி பெருகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்களில் இருந்த தடைகள் விலகி கைகூடக்கூடிய சூழ்நிலை உருவாகும். பண வரவுகளுக்கும் பஞ்சம் இருக்காது. கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். சிலருக்கு சொந்தமாக வீடு வாகனம் போன்றவற்றை வாங்க கூடிய யோகமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் உள்ளம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாய் அமைவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்களும் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.

பரிகாரம் - துர்கை அம்மனை வழிபடுவது தினமும் விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் -    14-07-2017 மாலை 06.33 மணி முதல் 16-07-2017 இரவு 12.23 மணி வரை

கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே பேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் உங்களுக்கு சுக்கிரன் 9-லும் சூரியன், செவ்வாய் 10, 11-லும் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல்- வாங்கல் லாபகரமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு நல்ல லாபத்தினை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வுகள் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் வெளிநாடு பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும்.

பரிகாரம் -  குருப்ரீதி தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் -    16-07-2017 இரவு 12.23 மணி முதல் 19-07-2017 அதிகாலை 03.21 மணி வரை.

துலாம் சித்திரை3,4, சுவாதி, விசாகம்1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட உங்களுக்கு ஏழரைச்சனி நடப்பதாலும் 12-ல் குரு இருப்பது தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். சூரியன் செவ்வாய் மாத பிற்பாதியில் 10-ல் சஞ்சரிக்க உள்ளதால் நீங்கள் எதிலும் நிதானத்துடன் செயல்பட்டால்தான் மாத இறுதியில் ஓரளவுக்கு சாதக பலனை அடையமுடியும். மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றியினைப் பெற முடியும். பொருளாதார நிலை தேவைக்கேற்ற படியிருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களில் சிறுசிறு வம்பு வழக்குகளை சந்திக்க வேண்டிவரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. பொன் பொருள் சேரும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சிந்தித்து செயல்பட்டால் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் நிதானமாக செயல்படுவதன் மூலம் தடைபட்ட பதவி உயர்வுகளையும், ஊதிய உயர்வுகளையும் கிடைக்கப் பெறுவார்கள்.

பரிகாரம் -  சனிக்கு எள் விளக்கேற்றி வழிபடுவது, சனிப்பரீதி ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் -    19-07-2017 அதிகாலை 03.21 மணி முதல் 21-07-2017 அதிகாலை 04.13 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு சூரியன், செவ்வாய் 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படக்கூடும். கணவன் மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி நிம்மதி குறைவுகள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வழியிலும் தேவையற்ற மன சங்கடங்கள் வீண் அவப்பெயர்கள் ஏற்படக்கூடும் என்பதால் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். திருமண சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் சாதகமான பலனை கொடுக்கும். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் பணவரவுக்கு குறைவிருக்காது. பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் அனுபவமுள்ள கூட்டாளிகள் சேர்க்கையால் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கப் பெற்றாலும் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் கால தாமதம் உண்டாகும்.

பரிகாரம் -  சிவ வழிபாடு மேற்கொள்வதும் முருக பெருமானை வழிபாடு செய்வதும் மேன்மை தரும்.

சந்திராஷ்டமம் -    21-07-2017 அதிகாலை 04.13 மணி முதல் 23-07-2017 அதிகாலை 04.30 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி  ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு சமசப்த ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களே உங்கள் நிம்மதியை குறைப்பார்கள். உடன் பிறந்தவர்களாலும் மன சங்டங்கள் உண்டாகக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. சுப காரிய முயற்சிகளில் தடங்கலுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். ராசியதிபதி குரு 10-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் ஏற்படும். பண வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான முன்னேற்றங்கள் உண்டாகும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினை பெற முடியும்.

பரிகாரம் - பிரதோஷ விரதம் மேற்கொள்வது முருக பெருமானை வணங்குவது உத்தமம்.

சந்திராஷ்டமம் -    23-07-2017 அதிகாலை 04.30 மணி முதல் 25-07-2017 காலை 06.02  மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2ம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட உங்களுக்கு ராசியதிபதி சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் கடந்த கால சிக்கல்கள் குறைந்து சகல விதத்திலும் ஏற்றத்தை அடைவீர்கள். தாராள தனவரவுகள் ஏற்பட்டு பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் கிட்டும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். பல பெரிய மனிதர்களின் ஆதரவுகளால் வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.

பரிகாரம் - துர்கையம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம் -    25-07-2017 காலை 06.02 மணி முதல் 27-07-2017 காலை 10.25 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன், செவ்வாய் 6-ல் சஞ்சரிக்க இருப்பதும் நற்பலனை தரும் அமைப்பு என்பதால் பிரச்சனைகள் குறைந்து முன்னேற்றம் அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். சுப காரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சொந்த பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். உங்கள் ராசிக்கு குரு, சனி சாதகமற்று இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பயணங்களாலும் அனுகூலம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம் பட செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளையும் தடைகளுக்குப் பின் பெற முடியும்.

பரிகாரம் - வியாழக்கிழமைகளில் குரு தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம் -    30.06.2017 அதிகாலை 01.34 மணி முதல் 02-07-2017 காலை 10.55 மணி வரை மற்றும் 27-07-2017 காலை 10.25 மணி முதல் 29-07-2017 மாலை 06.30 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன ராசி நேயர்களே தயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் உங்களுக்கு ராசியதிபதி குரு 7-லும், 6-ல் ராகுவும் சஞ்சரிப்பதால் சிறப்பான பணவரவு ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடக்கூடிய யோகம் உண்டாகும் என்றாலும் நீங்கள் எதிலும் சற்று நிதானமுடன் செயல்படுவதே நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைகளுக்குப் பின் வெற்றியினைப் பெற முடியும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் கைகூடும். உற்றார் உறவினர்கள் ஓரளவு அனுகூலமாய் அமைவார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள் என்றாலும் 4-ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் வியாபார ரீதியான பயணங்களில் தேவையற்ற அலைச்சல்கள் டென்ஷன் போன்றவை ஏற்படும் என்பதால் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

பரிகாரம்சிவ வழிபாடு மற்றும் முருக கடவுள் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் -  02-07-2017 காலை 10.55 மணி முதல் 04-07-2017 இரவு 10.46 மணி வரை மற்றும் 29-07-2017 மாலை 06.30 மணி முதல் 01.08.2017 காலை 05.42 மணி வரை.

சுப முகூர்த்த நாட்கள்

03-07-2017 ஆனி 19 ஆம் தேதி திங்கட்கிழமை தசமிதிதி சுவாதி நட்சத்திரம் அமிர்தயோகம் 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். வளர்பிறை

05-07-2017 ஆனி 21 ஆம் தேதி புதன்கிழமை துவாதசிதிதி அனுச நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். வளர்பிறை

16-07-2017 ஆனி 32 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சப்தமிதிதி ரேவதி நட்சத்திரம் அமிர்தயோகம் 09.00 மணி முதல் 10.00 மணிக்குள் சிம்ம இலக்கினம்தேய்பிறை

21-07-2017 ஆடி 05 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரயேதசிதிதி மிருசீரிஷ நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை

28-07-2017 ஆடி 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பஞ்சமிதிதி அஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை

30-07-2017 ஆடி 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சப்தமிதிதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை


Post a Comment

Intha Naal