Rasi palangal

Thursday, June 15, 2017

ஆனி மாத பலன்கள்ஆனி மாத பலன்கள்

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


மேஷம்
இம்மாதம் முயற்சி ஸ்தானமான 3ம் வீட்டில் செவ்வாய் சூரியன் சஞ்சாரம் செய்வதாலும் 11ல் கேது சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும். சுக்கிரன் ஜென்ம ராசியில் பலமாக இருப்பதால் புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகளால் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடைபெறும். குருபகவானை வழிபடுவது உத்தமம்.

ரிஷபம்
பஞ்சம ஸ்தானமான 5ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுக்கு பஞ்சமிருக்காது என்றாலும் சூரியன் செவ்வாய் 2ல் இருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை முன்னேற்றமாக இருக்கும். வீடுமனை வாங்கும் முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி ஏற்படும். தொழில் வியாபாரம் லாபம் தரும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சிவபெருமானை வழிபடவும்.

மிதுனம்
ஜென்ம ராசியில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் 3ல் ராகு மாத முற்பாதியில் 11ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எந்தவித பிரச்சனைகளையும் சமாளித்து நற்பலன்களை அடைவீர்கள். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. தொழில் வியாபாரம் சற்று மந்தமாக நடைபெற்றாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும் என்பதால் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் முன் ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

கடகம்
ஜென்ம ராசிக்கு 2ல் ராகு, 12ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எல்லா வகையிலும் அனுகூலம் மிகுந்த பலன்களை பெற முடியும். உத்தியோகஸ்தர்களின் கனவுகள் நினைவாகும். அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். பண வரவுகள் சரளமாக அமையும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதி£ப்புகள் விலகும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.

சிம்மம்
ஜென்ம ராசிக்கு 2ல் குரு, 11ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைக்கூடும். மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொருளாதார நிலை திருப்தியளிக்கும். கடன்கள் படிப்படியாகக் குறையும். உடன் பிறந்தவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் அனுகூலப்பலன்கள் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகளால் பெயர் புகழ் உயரும். பயணங்களால் எதிர்பாராத லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.

கன்னி
உங்கள் ராசிக்கு 10ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். 4ம் தேதி முதல் புதன் 10ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பொருளாதார நிலை சிறப்பாக அமையும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். எதிர்பாராத சுபசெலவுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவும், திறமைகளுக்கு தகுந்த பாராட்டுதல்களும் கிடைக்கும். சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.

துலாம்
உங்கள் ராசிக்கு 9ல் சூரியன், செவ்வாய் 11ல் ராகு சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். தேவையற்ற செலவுகளும் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். வெளிவட்டார தொடர்புகளால் ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

விருச்சிகம்
குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்குமென்றாலும் 8ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது. உஷ்ண சம்பந்தப்பட்ட உடல் பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் வீண் பிரச்சனைகளையும், சங்கடங்களையும் எதிர்கொள்ள நேரிடும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எவ்வளவு தான் பாடுபட்டாலும் எடுத்த பணியை முடிக்க முடியாத நிலை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு நன்மை தரும். முருக பெருமானை வழிபாடு செய்வது நல்லது.

தனுசு
உங்கள் ராசிக்கு 7ல் சூரியன் செவ்வாயும், 10ல் குருவும் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களால் பிரச்சனை, பொருளாதார ரீதியாக நெருக்கடி ஏற்படும். குடும்பத்திலும் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். உடல்நிலையில் சற்று கவனம் செலுத்த நேரிடும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எதிர்பார்க்கும் உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளிலும் சில தடைகள் நிலவும். தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சந்தித்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களை குறைத்துக் கொள்வதன் மூலம் வீண் அலைச்சல்களை தவிர்க்கலாம். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

மகரம்
சுக்கிரன் 4லும் சூரியன் செவ்வாய் 6லும் சஞ்சரிப்பது தொழில் வியாபார ரீதியாக இருந்த எதிர்ப்புகள் குறைந்து லாபத்தை தரும் அமைப்பாகும். எதிர்பாராத தனவரவு உண்டாகி உங்களது பிரச்சனைகள் ஓரளவுக்கு குறைந்து விடும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகி சுபிட்சமான சூழ்நிலைகள் உண்டாகும். வீடுமனை வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் அமையும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கப்பெறும். விநாயகரை வழிபடுவது நல்லது.

கும்பம்
புதன் 4லும் சூரியன் செவ்வாய் 5லும் சஞ்சரிப்பதால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குரு 8ல் இருப்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் ஓரளவுக்கு அனுகூலப்பலனை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க தாமதமானாலும் அதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். குடும்ப ஒற்றுமை சுமாராக அமையும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்கியே காணப்படும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறைந்து விடும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

மீனம்
சுக ஸ்தானமான 4ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பது அலைச்சலை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் 7ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுக்கு பஞ்சமிருக்காது. நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். சுபகாரிய முயற்சிகள் தடையின்றி கைகூடும். எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப்பெறும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் சாதகப்பலன் அமையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற முடியும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதால் லாபத்தை பெறுவீர்கள். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.


No comments: