Thursday, July 13, 2017

இன்று - 13.07.2017

இன்று -  13.07.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

இன்றைய  பஞ்சாங்கம்
13-07-2017, ஆனி- 29, வியாழக்கிழமை,சதுர்த்தி திதி பகல் 02.45 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. சதயம் நட்சத்திரம் இரவு 12.00 வரை பின்பு பூரட்டாதி. மரணயோகம் இரவு 12.00 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.




சுக்கி
சூரிய
கேது சந்தி
திருக்கணித கிரக நிலை
13.07.2017

செவ் புதன்

ராகு

சனி  (வ)
               
குரு 

இன்றைய ராசிப்பலன் -  13.07.2017
மேஷம்
இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும்.
ரிஷபம்
இன்று எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். சேமிப்பு உயரும்.
மிதுனம்
இன்று எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று காலதாமதமாகும். வியாபாரத்தில் கொடுக்கல்& வாங்கலில் இழுபறி நிலை ஏற்படக்கூடும். சேமிப்பு கரையும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.
கடகம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.
சிம்மம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கப்பெறும். உத்தியோகஸ்தர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
கன்னி
இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். கடன் பிரச்சனைகள் தீரும். பொன்பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம்
இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். பிள்ளைகளின் படிப்பில் சற்று முன்னேற்ற நிலை உருவாகும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்கள் உதவிகரம் நீட்டுவர்.
விருச்சிகம்
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே ஒற்றுமை குறைவு ஏற்படலாம். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத உதவி கிட்டும்.
தனுசு
இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். கணவன்& மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து சந்தோஷம் கூடும். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.
மகரம்
இன்று வெளியூர் பயணங்களில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில்  எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். உடல்நிலையில் புது பொலிவும், தெம்பும் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்துவார்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.
மீனம்

இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படலாம். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.
Post a Comment

Intha Naal