Wednesday, July 26, 2017

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019


ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் -  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com
கும்பம்  
அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்


எந்தப் பிரச்சினைகளையும் அலசிஆராய்ந்து தீர்த்து வைக்கக்கூடிய அளவிற்கு அறிவாற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே! வாக்கியப்படி வரும் 27-7-2017முதல் 13-2-2019வரை சர்ப்ப கிரகங்களான ராகு ஜென்ம ராசிக்கு 6-ஆம் வீட்டிலும், கேது 12-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதும் மிகச்சிறப்பான அமைப்பு என்பதால் இதுநாள்வரை கணவன் -மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுவிலகி ஒற்றுமை அதிகரிக்கும். குருபகவான் 2-9-2017முதல் 4-10-2018வரை 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதும், 19-12-2017முதல் ராசியாதிபதி சனிபகவான் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. கடன்கள் யாவும் குறையும். தடைப்பட்ட சுபகாரியங்கள் யாவும் தடையின்றிக் கைகூடும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும் பாக்கியமும் உண்டாகும். கூட்டாளிகளிடம் ஒற்றுமை பலப்படும். அழகான புத்திரபாக்கியமும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு அசையும், அசையாச் சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகையை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை அடையமுடியும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொன் பொருள் சேரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதால் லாபங்கள் சிறப்பாக அமையும். அபிவிருத்தியும் பெருகும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பதுடன் இடமாற்றங்களும் கிடைக்கப் பெறுவதால் குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைக்கும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர் களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த மாண்புமிகு பதவிகளைப் பெறுவார்கள். மக்களின் ஆதரவுகளும் சிறப்பாக அமைவதால் நினைத்த காரியங்களை எளிதில் நிறைவேற்றிவிடமுடியும். கலைஞர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் கதாபாத்திரங்கள் அமைவதால் நடிப்புத்திறனை வெளிபடுத்தி ரசிகர்களின் ஆதரவுகளைப் பெறுவார்கள்.  மாணவர்கள் கல்வியில் நல்லஈடுபாட்டுடன் செயல்பட்டு பெற்றோர், ஆசிரியர்களின் நன்மதிப்பைப் பெறுவார்கள். 

உடல் ஆரோக்கியம்

உடல்நிலை சிறப்பாக இருக்கும். சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் அதிகமாக இருக்காது. குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். நீண்ட நாட்களாக மருத்துவச் சிகிச்சைகளை எடுத்துக்கொண்டிருப்பவர்களுக்கு உடல்நிலை முன்னேற்றமடையும்.

குடும்பம், பொருளாதார நிலை 

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இதுவரைப்பட்ட கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். எடுக்கும் முயற்சிகளில் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நடைபெறக்கூடிய இனிய சம்பவங்களும் உங்கள் மனமகிழ்ச்சியை மேலும் அதிகப்படுத்தும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும். 

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலிலும் அனுகூலமான பலன்கள் ஏற்படும். கொடுத்த கடன்களும் திருப்தியாக வசூலாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். 

தொழில், வியாபாரம் 

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அபரிமிதமான லாபம் கிடைக்கும். இதுவரை இருந்த போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் கஷ்ட நஷ்டங்கள் விலகும். பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பும் கூட்டாளிகளின் ஆதரவும் மேலும்மேலும் லாபத்தைக் கொடுக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் லாபம் கிடைக்கும். 

உத்தியோகம் 

உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் மகிழ்ச்சிகரமாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் அமையும். உங்கள் திறமைகளுக்குத் தகுந்த பாராட்டுதல்கள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எந்தக் காரியத்தையும் எளிதில் செய்துமுடிப்பீர்கள். சிலருக்குத் தடைப்பட்ட இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் யோகம் உண்டாகும். உத்தியோக உயர்வுகளால் குடும்பத்தின் பொருளாதார நிலையும் உயரும். 

பெண்கள் 

குடும்பத்தில் மகிழ்ச்சியும், பூரிப்பும் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். எந்தக் காரியத்திலும் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றலைப் பெறுவீர்கள். உற்றார் -உறவினர்களிடையே நல்ல பெயரும் மதிப்பும் மரியாதையும் உயரும். புதிய பொருட்சேர்க்கைகளும், ஆடை ஆபரணச் சேர்க்கையும் உண்டாகி மனநிம்மதியை ஏற்படுத்தும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 

அரசியல் 

அரசியல்வாதிகளின் பேச்சுக்கு மதிப்பும், செல்வம், செல்வாக்கு உயரக்கூடிய நிலையும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எந்தவித இடையூறுகளும் இன்றி சாதனைகள் புரிவார்கள். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும்அமைந்து அதன்மூலம் அனுகூலமும், பாராட்டுதல்களும் கிடைக்கும். பொருளாதாரம் மேம்படும்.

விவசாயிகள்

விளைச்சல் சிறப்பாக இருக்கும் என்பதால் லாபமும் சிறப்பாகவே அமையும். பொருளாதாரமிகுதியால் பூமி, மனை வாங்குவது, புதிய நவீன கருவிகள் வாங்குவது போன்றவற்றில் அனுகூலப்பலன் உண்டாகும். பங்காளிகளிடையே இருந்த பிரச்சினைகள் யாவும்விலகி ஒற்றுமை பலப்படும். கடன்கள் குறையும்.

கலைஞர்கள் 

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத் தட்டும். புறக்கணித்தவர்களும் வாய்ப்புகளை வாரி வழங்குவார்கள். நீங்கள் நடித்த படங்களும் வசூலை வாரி வழங்கும். போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். 

மாணவ- மாணவியர்

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். மேற்கல்வியிலும் புதிய சாதனைகள் செய்ய வாய்ப்பு அமையும். நல்ல நண்பர்களின் சேர்க்கை மகிழச்சி அளிப்பதாக அமையும். விளையாட்டுத்துறைகளிலும் மாநில அளவில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாக அமையும்.

ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது அவிட்ட நட்சத்திரத்தில் 27-7-2017முதல் 29-11-2017வரை

ராகு பகவான் 5-ஆம் அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 6-ஆம் வீட்டிலும், கேது பகவான் 3,10-க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் 12-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். 2-9-2017முதல் குரு பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடைவிலகி கைகூடும். பணவரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார், உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடிவந்து ஒற்றுமை பாராட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படு வார்கள். அபிவிருத்தியும் பெருகும். தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடிவரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம். 

ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 30-11-2017முதல் 4-4-2018வரை

ராகு பகவான் 5-ஆம் அதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 6-ஆம் வீட்டிலும், கேது பகவான் 6-ஆம் அதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் 12-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் நினைத்தது யாவும் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொளாதாரநிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பொன் பொருள் சேரும். கணவன்- மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். சொந்த பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலும் சரளநிலையில் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைப் காப்பாற்றி நல்லபெயரை எடுப்பீர்கள். 19-12-2017முதல் சனி லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் லாபம் கிட்டும். அரசுவழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகள் புதிதாக சேருவார்கள். உத்தியோகஸ்தர்களும் பணியில் திறம்பட செயல்பட்டு கைநழுவிய பதவி உயர்வுகளைத் தடையின்றிப் பெறுவார்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். விநாயகர் வழிபாடு உத்தமம்.

ராகு பூச நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 5-4-2018முதல் 8-8-2018வரை

ராகுபகவான் உங்கள் ராசியாதிபதியான சனியின் நட்சத்திரத்தில் 6-ஆம் வீட்டிலும், கேது பகவான் 6-ஆம் அதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் 12-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் மேன்மையான பலன்களே உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். மணவயதை அடைந்தவர்களுக்கு மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன்- மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். பலருக்கு உதவிகள் செய்யக்கூடிய வாய்ப்பும் கிட்டும். பூமி, மனை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெறமுடியும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

ராகு பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 9-8-2018முதல் 12-12-2018வரை

ராகு பகவான் உங்கள் ராசியாதிபதியான சனியின் நட்சத்திரத்தில் 6-ஆம் வீட்டிலும், கேது பகவான் 7-ஆம் அதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் 12-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கிச் சேர்ப்பீர்கள். அசையும், அசையாச் சொத்துகளால் அனுகூலப்பலன் உண்டாகும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும்.  கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர் களின் ஆதரவுகளால் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனதிற்கு உற்சாகத்தைத் தரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். 04-10-2018 முதல் குருபகவான் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தும்போது சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். கொடுத்த கடன்களைத் தடையின்றி வசூலிக்க முடியும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது. 

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-12-2018முதல் 13-2-2019வரை

ராகுபகவான் உங்கள் ராசியாதிபதியான குருவின் நட்சத்திரத்தில் 6-ஆம் வீட்டிலும், கேது பகவான்  சூரியனின் நட்சத்திரத்தில் 12-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது அற்புதமான நற்பலன்களைப் பெறமுடியும். தாராள தனவரவுகளைக் கொடுக்கும். கடன்கள் யாவும் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய யுக்திகளைக் கையாண்டு தொழிலை விரிவுசெய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் -மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். உற்றார் -உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வெற்றிகள் கிட்டும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். கல்வியிலும் மாணவர்கள் சிறந்து விளங்கமுடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது உத்தமம்.

பரிகாரம் 

கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது 12-ல் சஞ்சரிப்பதால் தினமும் விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பீஜ மந்திரத்தைக் கூறிவருவது, செவ்வரளிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ணமயமான போர்வை, போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது, சர்ப்ப சாந்தி செய்வது, தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் - 5,6,8,
நிறம் - பச்சை, நீலம்
கிழமை - புதன், சனி
கல் - நீலக்கல்
திசை - மேற்கு
தெய்வம் - ஐயப்பன்

No comments: