Saturday, July 22, 2017

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் -  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.comகன்னி 
உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்


அதிக உணர்ச்சிவசப்படக் கூடியவராகவும், எப்பொழுதும் சுறுசுறுப்பானவராகவும் விளங்கும் கன்னி ராசி நேயர்களே! வாக்கியப்படி வரும் 27-7-2017முதல் 13-2-2019வரை ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் இராகுவும் 5-ல் கேதுவும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகி கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். 

குருபகவான் 2-9-2017முதல் 4-10-2018வரை தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப்பெற்று மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடந்தகால கடன்கள் யாவும் படிப்படியாகக் குறையும். புத்திரவழியில் மகிழ்ச்சித் தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம், கார் ,பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடையமுடியும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள், அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும். 

19-12-2017 முதல் சனி சுகஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமச்சனி தொடங்கவுள்ளது. இது அவ்வளவு சாதகமான அமைப்பு இல்லை என்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். அசையும், அசையாச் சொத்துகளால் சிறுசிறு வீண்செலவுகளை எதிர்கொள்வீர்கள். முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக்கொள்வதன்மூலம் அலைச்சலைக் குறைத்துக்கொள்ளலாம். சிலசமயங்களில் நேரத்திற்கு உணவு உண்ணமுடியாத சூழ்நிலையும் ஏற்படும். சனி உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகம் என்பதால் பெரிய கெடுதல்களைச் செய்யமாட்டார். 4-10-2018முதல் குரு முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பணம் கொடுக்கல் -வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் நடந்து கொள்வது உத்தமம். 

உடல் ஆரோக்கியம்  

உடல்நிலை அற்புதமாக அமையப்பெறுவீர்கள். பலமும் வலிமையும் கூடும். ஜலத்தொடர்புடைய பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. குடும்பத்தில் உள்ளவர்களும் உற்சாகமாக அமைவதால் மருந்துச்செலவுகள் குறையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல அதிகரிக்கும் என்றாலும் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறி மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்திலும் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

குடும்பம், பொருளாதார நிலை 

குடும்ப வாழ்வில் குதூகலமும் பூரிப்பும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திரர்களால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தாராள தனவரவுகளால் இதுவரை தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். வண்டி வாகனம் வாங்கும் யோகமும், வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலனும் உண்டாகும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். 

கொடுக்கல்- வாங்கல்

பொருளாதாரநிலை சிறப்பாக அமையும். கொடுத்த வாக்குறுதிகளை சரியான நேரத்தில் காப்பாற்றமுடியும். பெரிய தொகையையும் எளிதாக ஈடுபடுத்தி லாபங்களை அடைவீர்கள். நண்பர்கள் மற்றும் உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக அமையும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். 

தொழில் வியாபாரம் 

தொழில், வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்தித்தாலும் எதிர்பார்த்த லாபத்தை அடைவார்கள். எதிர்பாராத பணவரவுகளால் தொழிலை அபிவிருத்திச் செய்ய முடியும். சனி 4-ல் இருப்பதால் சற்று அலைச்சலை சந்திக்க நேரிடும் என்றாலும் புதிய முயற்சிகளில் அனைத்தும் வெற்றியினை ஏற்படுத்தும். சிலருக்கு புதிய தொழில் தொடங்க எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள்.

உத்தியோகம் 

உத்தியோகஸ்தர்கள் அனுகூலமான பலனை அடைவார்கள் என்றாலும் கூடுதல் பொறுப்புகளும் வேலைப்பளுவும் சற்று அதிகரித்தே காணப்படும். எதிர்பார்த்த பதவி உயர்வும், மேல்அதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் மனதிற்கு மகிழச்சி அளிப்பதாகவே அமையும். சிலர் எதிர்பார்த்துக் காத்திருந்த இடமாற்றமும் கிடைக்கப்பெறும். சனி 4-ல் இருப்பதால் எதிலும் சற்று கவனமாக நடந்துகொண்டால் நல்லபலனை அடையமுடியும்.

பெண்கள் 

குடும்ப வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். உடல்நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும் குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெற்று மனம் பூரிப்படையும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சிகளிலம் வெற்றி கிட்டும். கணவன் -மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொருளாதாரநிலைமை சிறப்பாக அமைந்து புதிய பொருட்சேர்க்கைகள் உண்டாகும். பணிபுரியும் பெண்களுக்குப் பதவி உயர்வுகள் கிடைக்கும். வேலைப்பளு குறையும்.

அரசியல்

அரசியல்வாதிகளுக்கு செல்வம், செல்வாக்கு உயரக்கூடிய காலமாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். உங்களின் பேச்சுகளுக்கு ஆதரவுகள் அதிகரிக்கும். பொருளாதாரநிலையிலும் உயர்வையே சந்திப்பீர்கள். பயணங்களால் சற்று அலைச்சல் உண்டாகும். 

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய பல யுக்திகளைக் கையாண்டு லாபத்தினைப் பெறுவீர்கள். எவ்ளவு சோதனைகள் ஏற்பட்டாலும் அவற்றை சாதனையாக மாற்றும் ஆற்றல் உண்டாகும். லாபங்கள் பெருகுவதால் புதிய பூமி, நிலம், நவீன கருவிகள் போன்றவற்றையும் வாங்குவீர்கள்.

கலைஞர்கள் 

தொழிலில் இருந்த போட்டி, பொறாமைகள், சிக்கல்கள் குறையும். தடைப்பட்ட தனவரவுகளும் தடைகள் நீங்கி கிடைக்கப்பெறும். உடன் இருக்கும் கலைஞர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நீங்கள் நடித்த படங்களுக்கு அமோக ஆதரவு கிடைக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் சற்று மந்தநிலை நிலவுனாலும் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். நல்ல நண்பர்களின் சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும். தேவையற்ற பொழுதுபோக்குகளில் நேரத்தை செலவழிக்காமல் பாடங்களில் முறையுடன் கவனம் செலுத்துவதால் அனைவரின் ஆதரவையும் பெறமுடியும். 

ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது அவிட்ட நட்சத்திரத்தில் 27-7-2017முதல் 29-11-2017வரை

ராகு பகவான் உங்கள் ராசியாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 11-ஆம் வீட்டிலும், கேதுபகவான் செவ்வாயின் நட்சத்திரத்தில் 5-ஆம் வீட்டிலும், சஞ்சரிக்கும் இக்காலங்களில் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும்.2-9-2017முதல் குருபகவான் தனஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பணம் பலவழிகளில் தேடிவந்து பாக்கெட்டை நிரப்பும். எல்லாவிதத் தேவைகளும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக குடும்பத்தோடு பயணம் மேற்கொள்வீர்கள். தடைப்பட்டுக் கொண்டிருந்த மங்களகரமான சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடும். ஆடை ஆபரணம் சேரும். பூர்வீகச் சொத்துகளால் லாபம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியைப் பெருக்க உதவும். தொழிலாளர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்துக் காத்திருந்த இடமாற்றங்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் திறம்படச் செயல்படுவீர்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 30-11-2017முதல் 4-4-2018வரை

ராகுபகவான் ராசியாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 11-ஆம் வீட்டிலும், கேதுபகவான் லாபதிபாதியான சந்திரனின் நட்சத்திரத்தில் 5-ஆம் வீட்டிலும், சஞ்சரிக்கும் இக்காலங்களில் சுபிட்சம் நிறைந்ததாகவே இருக்கும். குரு தனஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் தடையின்றிக் கைகூடும். கணவன் -மனைவியிடையே மகிழ்ச்சியும் ஒற்றுமையும் சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள்மூலம் பலவிதமான சாதகப்பலனைப் பெறமுடியும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் குறையும். கொடுக்கல்- வாங்கலும் லாபமளிக்கும். பெரிய தொகையை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். அசையும், அசையாச் சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளாலும் லாபம் கிட்டும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்கேற்ற பாராட்டுதல்கள் தடையின்றிக் கிட்டும். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் வேலைப்பளுவும் குறையும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். 19-12-2017 முதல் சனி 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

ராகு பூச நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 5-4-2018முதல் 8-8-2018வரை

ராகுபகவான் சனியின் நட்சத்திரத்தில் 11-ஆம் வீட்டிலும், கேதுபகவான் லாபாதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் 5-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப்பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாவதோடு குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் நிறைய போட்டிகள் ஏற்பட்டாலும் கிடைக்கவேண்டிய லாபங்கள் கிடைக்கும். எந்தவொரு காரியத்திலும் முழுமுயற்சியுடன் செயல்படக்கூடிய ஆற்றல் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. பெரிய தொகையைக்  கடனாகக் கொடுத்தால் வீண்பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவார்கள். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் அமையும் என்றாலும் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

ராகு பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 9-8-2018முதல் 12-12-2018வரை

ராகுபகவான் சனியின் நட்சத்திரத்தில் 11-ஆம் வீட்டிலும், கேதுபகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 5-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் ஓரளவுக்கு அனுகூலமான அமைப்பாகும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. மணமாகாதவர்களுக்கு மணமாகும். நல்லவரன்கள் தேடிவரும். கணவன்- மனைவியிடையேயும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும். செய்யும் தொழில், வியாபாரரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் விருப்பம் நிறைவேறும். 4-10-2018முதல் குருபகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்துச்செயல்படுவது, பெரிய முதலீடுகளை எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். சனி 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-12-2018முதல் 13-2-2019வரை

ராகுபகவான் குருவின் நட்சத்திரத்தில் 11-ஆம் வீட்டிலும், கேதுபகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 5-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கும் இக்காலங்களில் பண வரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. ராகு லாப ஸ்தானத்தில் இருப்பதால் நினைத்த காரியங்களை எளிதில் நிறைவேற்றமுடியும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறுவதால் கடன்கள் யாவும் குறையும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றிவிடமுடியும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில்  தடைகளுக்குப்பின் கைகூடும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன் -மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். புத்திரவழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றக்கூடும். அசையும், அசையாச் சொத்துகளால் அனுகூலங்கள் உண்டாகும் என்றாலும் புதிய சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. குரு, சனிக்குப் பரிகாரம் செய்வது உத்தமம்.

பரிகாரம்

கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு கேது 5-ல் சஞ்சரிப்பதால் தினமும் விநாயகரை வழிபடுவது, ஓம் சரம் ச்ரீம் ச்ரௌம் சஹ கேதவ நமஹ என்ற பீஜ மந்திரத்தைக் கூறிவருவது, செவ்வரளிப் பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்  கூறுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ணமயமான போர்வை, வெள்ளைப் புள்ளிகள் உடைய பழுப்பு நிறப்பசு போன்றவற்றை  ஏழைகளுக்கு தானம் தருவது, சர்ப்ப சாந்தி செய்வதும், தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது. 

சனி பகவான் 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டமச்சனி நடைபெறுவதால் அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, சனிக்கிழமைகளில் விரதமிருந்து கருப்புத் துணியில் எள்ளைப் பொட்டலம் கட்டி, அகல்விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றவது, சனிக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்குப் பூக்கள் மற்றும் கருங்குவளைப் பூக்களால் அர்ச்சனை செய்வது, நல்லெண்ணெய், எள், கடுகு, தோல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், அடுப்பு போன்றவற்றையும், குடை, செருப்பு, நீல மலர்கள் ஆகியவற்றையும் ஏழைகளுக்கு தானம் செய்யவது, நீலக்கல் மோதிரம் அணிவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் -  4, 5, 6, 7, 8
நிறம் -  பச்சை, நீலம்
கிழமை - புதன், சனி
கல் -  மரகத பச்சை
திசை - வடக்கு
தெய்வம் - ஸ்ரீவிஷ்ணு

No comments: