Monday, July 24, 2017

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017- 2019
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் -  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.comவிருச்சிகம் 
விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை

நியாய அநியாயங்களை யாருக்கும் பயப்படாமல் எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! வாக்கியப்படி வரும் 27-7-2017முதல் 13-2-2019வரை சர்ப்ப கிரகங்களான ராகு பகவான் ஜென்ம ராசிக்கு 9-ஆம் வீட்டிலும், கேது பகவான் 3-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பே ஆகும். இதனால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அனுகூலமும் உண்டாகும். பயணங்களால் சாதகமானப் பலன்களைப் பெறுவீர்கள். பூர்வீகச் சொத்து விஷயங்களில் இருந்து வந்த பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். 2-9-2017முதல் குருபகவான் ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டிலும் 4-10-2018முதல் ஜென்ம ராசியிலும் சஞ்சாரம் செய்ய இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாகவே இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்துச் செயல்படுவது, ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது உத்தமம். இதுமட்டுமின்றி 19-12-2017முதல் சனி பகவான் ஜென்ம ராசிக்கு 2-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் ஏழரைச்சனியில் குடும்பச்சனி தொடங்கவுள்ளது. இதுவும் சாதகமற்ற அமைப்பே ஆகும். இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நல்லவரன்கள் அமைவதில் தாமதநிலை உண்டாகும். மணமானவர்களுக்கு சில மருத்துவச் செலவுகளுக்குப்பின் புத்திரபாக்கியம் அமையும். சர்ப்ப கிரகங்கள் சாதமாக சஞ்சரிப்பதால் சொந்தமாக வீடு, கார் போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளாலும் லாபங்கள் அமையும். பொன் பொருள் சேரும். கடன்கள் குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில், வியாபாரம் சற்று மந்தநிலையில் நடைபெற்றாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது சிந்தித்துச் செயல்படவும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் சற்றே அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலத்தை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் வேலைப்பளுவை குறைத்துக்கொள்ள முடியும்.

உடல் ஆரோக்கியம் 
உடல்நிலையில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகளை மேற்கொள்ள வேண்டிவரும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், தலை வலி, சோர்வு உண்டாகும். எந்தக் காரியத்தையும் முழுமையாகச் செய்துமுடிக்க முடியாதபடி உடல்நிலை சோர்வடையும். வாகனங்களில் பயணம் செல்லும்போது சற்று கவனமுடன் இருப்பது நல்லது. நெருங்கியவர்களுக்கு உடல்நிலை பாதிப்புகள் ஏற்படுவதால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும்.

குடும்பம், பொருளாதார நிலை 
குடும்பத்தில் வீண்பிரச்சினைகளும் குழப்பங்களும் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். பொருளாதாரநிலையிலும் ஏற்றத்தாழ்வான நிலைகளே உண்டாகும். உற்றார் -உறவினர்களும் சாதகமின்றி இருப்பார்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்ய கடன் வாங்க வேண்டியிருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றமுடியாத சூழ்நிலைகள் உண்டாகும்.

கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்றவற்றின்மூலம் வீண்விரயங்கள் உண்டாகும். கொடுக்கல் -வாங்கலிலும் கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியாத நிலை ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியாது. பெரிய தொகை ஈடுபடுத்துவதையும், முன்ஜாமீன் கொடுப்பதையும் தவிர்ப்பதால் வீண்சங்கடங்கள் குறையும். வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும்.

தொழில், வியாபாரம் 
தொழில், வியாபாரம் செய்பவர்கள் அதிக போட்டி பொறாமைகளையும், மறைமுக எதிர்ப்புகளையும் சந்திக்க நேரிடும். எதிர்பார்த்த உதவி தாமதப்படும். அரசு வழியில் அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் வீண்விரயம் ஏற்படும். கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு லாபம் குறையும். தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கிகள் உண்டாகும்.

உத்தியோகம் 
உத்தியோகஸ்தர்கள் பணியில் பல சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும். கூடுதல் பொறுப்புகள் அதிகமாவதால் அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி விடுப்பு எடுக்க நேரிடும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைப்பதால் எதையும் முடிந்த அளவு செய்து முடிப்பீர்கள். தேவையற்ற இடமாற்றங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும்.

பெண்கள் 
பெண்களுக்கு புகுந்தவீட்டிலும் சரி பிறந்தவீட்டிலும் சரி நிம்மதியற்ற நிலையே உண்டாகும். தாய்வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காது. பொருளாதார நிலையில் சங்கடங்கள் நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகள் தடைப்படும். உடல்நிலை பாதிப்படையும். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்ய கடன்கள் வாங்க வேண்டி இருக்கும். எல்லா வகையிலும் நெருக்கடிகள் தோன்றும்.

அரசியல் 
அரசியல்வாதிகளின் பெயர், புகழுக்கு பங்கம் வரக்கூடும். நெருங்கியவர்களே கூடஇருந்து குழிபறிப்பார்கள். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாது. அமைச்சர்களின் கெடுபிடிகளுக்கு ஆளாக நேரிடும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளைபொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப்பெறுவதால் பொருளாதாரநிலை உயர்வடையும். புதிய பூமி, மனை போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். கால்நடைகளாலும் லாபம் உண்டாகும்.

கலைஞர்கள் 
கலைஞர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்காமல் மிகுந்த சஞ்சலத்திற்கு ஆளாவார்கள். எவ்வளவு முயற்சி செய்தாலும் எதிர்பார்த்த வசூலைப் பெறமுடியாமல் படங்கள் பாதிப்பு அடையும். ரசிகர்களின் ஆதரவு குறையும். பொருளாதாரமும் தடைப்படும்.

மாணவ- மாணவியர்
கல்வியில் கவனம் செலுத்தமுடியாதபடி மந்தநிலை உண்டாகும். விளையாட்டுப்போட்டிகளிலும் சிக்கல் உண்டாகும். தேவையற்ற நண்ர்களின் சகவாசம் வீண்பிரச்சினைகளை ஏற்படுத்தும். மதிப்பெண்கள் குறைவதால் ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்.

ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது அவிட்ட நட்சத்திரத்தில் 27-7-2017முதல் 29-11-2017வரை
ராகு பகவான் புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 9-லும் கேது பகவான் ராசியாதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 3-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். 2-9-2017முதல் குரு ஜென்ம ராசிக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்ய கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதிக்குறைவுகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. உற்றார் -உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபங்கள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர் களுக்கு உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப் பவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். குருவுக்குரிய பரிகாரங் களைச் செய்வது நல்லது.

ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 30-11-2017முதல் 4-4-2018வரை
ராகு பகவான் புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 9-லும், கேது பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 3-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்பதால் இக்காலங்களில் ஓரளவுக்கு ஏற்றமான பலன்களை அடைவீர்கள் என்றாலும் 12-ல் குரு சஞ்சரிப்பதாலும் 19-12-2017 முதல் சனி பகவான் குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மட்டுமே சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியம். குடும்பத்திலுள்ள வர்களை அனுசரித்துச்செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.சிலநேரங்களில் நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களாலும் வீண்பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் நிறைய போட்டிகள் தோன்றினாலும் வரவேண்டிய வாய்ப்புகளில் தடை ஏற்படாது. தொழிலாளர்களை அனுசரித்து நடந்துகொண்டால் ஓரளவுக்கு அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். அசையும், அசையா சொத்துக்களால் ஓரளவுக்கு அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக இருந்தாலும் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் கிட்டும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

ராகு பூச நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 5-4-2018முதல் 8-8-2018வரைராகு பகவான் சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 9-லும் கேது பகவான் சந்திரனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 3-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளித்து ஏற்றம்பெற முடியும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருந்தாலும் ஆடம்பரமாகச் செலவு செய்வதைத் தவிர்க்கவும். தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நற்பலன் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகையைப்  பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். பூர்வீகச் சொத்துகளால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். செய்யும் தொழில், வியாபாரத்தில் மந்தநிலை ஏற்பட்டாலும் கிடைக்கவேண்டிய லாபம் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் நற்பலன் அமையும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கப்பெற்றாலும் உடன்பணிபுரிபவர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் திறம்படச் செயல்படுவீர்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

ராகு பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 9-8-2018முதல் 12-12-2018வரை
ராகு பகவான் சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 9-லும் கேது பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 3-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் பொருளாதாரநிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக அமையும். 4-10-2018முதல் குரு ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. உடன்பழகுபவர்களிடம் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களும் உங்களுக்கே வீண்பிரச்சினைகளை உண்டாக்கிவிடும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் தேவையற்ற மருத்துவச் செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. செய்யும் தொழில், வியாபாரத்திலும் நிறைய போட்டிகள் நிலவும். வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப்போகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமைவதில் தடைகள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம்.
ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-12-2018முதல் 13-2-2019வரை
ராகு பகவான் குருவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 9-லும், கேது பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 3-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் இக்காலங்களில் எந்தவித எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு வெற்றிபெறும் ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்த நிலை, கைகால், மூட்டுகளில் வலி போன்றவை உண்டாகும். என்றாலும் அன்றாடப் பணிகளில் திறம்படச் செயல்படமுடியும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப்பெற்றாலும் திருமணம் நடைபெறத் தாமதம் ஏற்படும்.  கணவன்- மனைவிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உற்றார் -உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். பணம் கொடுக்கல் -வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தும்போது கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே லாபத்தைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் தடைகளுக்குப்பின் கிடைக்கும். சில நேரங்களில் பிறர்செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தும். பயணங்களால் ஓரளவுக்கு அனுகூலங்கள் ஏற்படும். வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.
பரிகாரம்
ஏழரைச்சனி நடைபெறுவதால் சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீப மேற்றுவது நல்லது.  திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வேங்கடாசலபதியை வழிபடுவது, சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்குப் பூக்கள் மற்றும் கருங்குவளைப் பூக்களால் அர்ச்சனை செய்வது, ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, கருப்புநிற ஆடை அணிவது நல்லது.
குரு சாதகமின்றி சஞ்சரிப்பதால் குருவுக்குப் பரிகாரமாக வியாழக்கிழமைகளில் விரதமிருந்து குரு, தட்சிணாமூர்த்திக்குக் கொண்டைக் கடலையை மாலையாகக் கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை,
எண்    - 1,2,3,9,
நிறம்    - ஆழ்சிவப்பு, மஞ்சள்
கிழமை  - செவ்வாய், வியாழன்
கல்     - பவளம்
திசை   - தெற்கு
தெய்வம் - முருகன்

No comments: