Friday, July 21, 2017

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017 2019

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017 2019

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2017 2019
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் -  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடுஇந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


சிம்மம் 
மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்


நல்ல மனவலிமையும், உண்மை பேசும் குணமும், வசீகரமானத் தோற்ற அமைப்பும் கொண்ட சிம்ம ராசி நேயர்களே! வாக்கியப்படி வரும் 27-7-2017 முதல் 13-2-2019வரை சர்ப்ப கிரகங்களான ராகு 12-ஆம் வீட்டிலும், கேது 6-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக விலகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். 2-9-2017முதல் குருபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு 3-ஆம் வீட்டிலும், 4-10-2018முதல் சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது என்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின்பே வெற்றியினைப் பெறமுடியும். பொருளாதார நிலையும் ஏற்ற இறக்கமாகவே இருக்கும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப்பெறுவதால் எல்லாத் தேவைகளையும் பூர்த்திசெய்து விடமுடியும்.

தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச்செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் சற்று நிதானம் தேவை. வரும் 19.12.2017 முதல் சனிபகவான் 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் உங்களுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் அர்த்தாஷ்டமச்சனி முடிவடைகிறது. இதனால் தேவையற்ற அலைச்சல்கள் குறையும். சர்ப்பகிரகங்கள் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து முன்னேறக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் ஈடேறுவதற்கான வாய்ப்புகள் அமையும்.  பூர்வீகச் சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். உற்றார், உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். ஆன்மிக, தெய்வீகக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பயணங்களால் அனுகூலமானப் பலன்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வேலைப்பளு கூடுதலாகும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன்மூலம் அனுகூலங்கள் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்துச்செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெற்றுவிடமுடியும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகளைச் செய்வீர்கள். மக்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்துக்கொள்வது நல்லது.

உடல் ஆரோக்கியம் 

உங்கள் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் விரைவில் சரியாகிவிடும். குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்து வந்த கடந்த கால மருத்துவச் செலவுகள் குறையும். அன்றாடச் செயல்களில் மிகவும் சுறுசுறுப்புடன் செயல்படும் ஆற்றலைப் பெறுவீர்கள். எடுக்கும் காரியங்களில் வெற்றியை உண்டாக்கும். உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் ஒத்துழைப்புடன் இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்று உங்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தும். தொலைதூரப் பயணங்களால் சற்று சோர்வு இருந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும்.

குடும்பம், பொருளாதார நிலை 

கணவன் -மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும். கடந்தகால மருத்துவச் செலவுகள் குறையும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் அற்புதமாக இருக்கும். உற்றார் உறவினர்களின் அன்பும், அரவணைப்பும் மகிழ்ச்சியை உண்டாக்கும். வெளியூர்களிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்திகள் அனுகூலத்தைத்தரும். பொருளாதாரநிலை சுமாராக இருந் தாலும் எதிர்பாராத திடீர் தனவரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். செலவுகள் கட்டுக்கடங்கி இருப்பதால் சேமிக்க முடியும். திருமண சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் தடைகளுக்குப்பின்பே வெற்றியினை அடையமுடியும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன், ஏஜென்ஸி, கான்டிராக்ட் துறையில் சுமாரான முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகையை ஈடுபடுத்தும்போது சிந்தித்துச்செயல்படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் இடையூறுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். 

தொழில், வியாபாரம்  

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கடந்தகால பிரச்சினைகள் விலகி ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். அரசுவழியில் எதிர்பாசித்த உதவிகள் கிடைக்கும். தொழிலை விரிவுசெய்யும் நோக்கம் பலன் அளிக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். மறைமுக எதிர்ப்புகள் விலகினாலும் போட்டிகளை சமாளிக்க வேண்டிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் சுமாரான லாபம் கிடைக்கும்

உத்தியோகம் 

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு தாமதப்பட்டாலும் பதவி உயர்வு கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அமைந்து அதிகாரிகளின் பாராட்டுதல்களையும் ஒத்துழைப்பையும் பெறமுடியும். சிலருக்கு தேவையற்ற இட மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டுப்பிரிய நேரிடும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் சில தடைகளுக்குப்பின் நிறைவேறும்.

பெண்கள் 

உடல்நிலையில் சில பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். தன வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. ஆடை ஆபரணம் சேரும். புதிய பொருட்சேர்க்கைகள் கிடைக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கப்பெறும். 

அரசியல் 

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினால் மட்டுமே உங்களின் பெயர், புகழை நிலைநிறுத்திக் கொள்ளமுடியும். தொண்டர்களின் ஒத்துழைப்பு நற்பலனை உண்டாக்கும். அமைச்சர்களின் ஆதரவும், பெரிய மனிதர்களின் நட்பும் கிடைக்கும். தேவையற்ற அலைச்சல்களும் விரயங்களும் ஏற்படும் என்பதால் எதிலும் சிந்தித்துச்செயல்படுவது  நல்லது. 

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச்சிறப்பாக இருக்கும். உழைப்பிற்கான பலனை இருமடங்காகப் பெறமுடியும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சியில் அரசின் உதவி கிடைக்கும். பூமி, நிலம் போன்றவற்றையும் வாங்கிப்போடுவீர்கள். சேமிப்பும் பெருகும்.

கலைஞர்கள் 

கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி உங்களுக்கு இருக்கும் கலைத்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். இசைத்துறையிலும் பாடல்துறையிலும் உள்ளவர்கள் ரசிகர்களின் பேராதரவைப் பெறுவார்கள். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றாலும் பணவரவுகள் சுமாராகவே இருக்கும். 

மாணவ -மாணவியர் 

கல்வியில் சற்று மந்தமான நிலையே இருக்கும். நண்பர்கள் ஓரளவுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். அரசு உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். விளையாட்டுத்துறையிலும், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி போன்றவற்றிலும் பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கப்பெறும். 

ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது அவிட்ட நட்சத்திரத்தில் 27-7-2017முதல் 29-11-2017 வரை

ராகு பகவான் புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 12-லும், கேதுபகவான் 4,9-க்கு அதிபதியான செவ்வாயின் நட்சத்திரத்தில் 6-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் ஒரளவுக்கு நற்பலன்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றியினைப் பெறமுடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்கொண்டால் மருத்துவச்செலவுகளைக் குறைத்துக்கொள்ளலாம். 2-9-2017முதல் குருபகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருப்பதால் எல்லாத் தேவைகளையும் பூர்த்திசெய்ய முடியும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூடத் தாமதநிலை உண்டாகும். புத்திரவழியில் சிறு சிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தாலே வீண்பிரச்சினைகள் உண்டாவதைக் குறைத்துக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்துமுடிப்பதில் சற்று இடையூறுகளைச் சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும்.  குருவுக்குப் பரிகாரம் செய்வது நல்லது. 

ராகு ஆயில்ய நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 30-11-2017முதல் 4-4-2018வரை

ராகு பகவான் புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 12-லும், கேதுபகவான் 12-ஆம் அதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் 6-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களையே பெறமுடியும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே வெற்றிபெற வேண்டியிருக்கும். சுக வாழ்வு பாதிப்படையும். வண்டி வாகனம், வீடு, மனை போன்றவற்றால் வீண்விரயங்கள் உண்டாகும் என்றாலும் எதையும் எதிர்கொண்டு வெற்றிபெற முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்காது. 19-12-2017முதல் சனி 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பூர்வீகச் சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகள் படிப்படியாகக் குறையும். செய்யும் தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதையும் சிறப்புடன்செய்து பாராட்டுதல்களைப் பெறமுடியும். முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன்மூலம் அலைச்சலைக் குறைத்துக்கொள்ளலாம். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்துச்செயல்படுவது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

ராகு பூச நட்சத்திரத்தில், கேது திருவோண நட்சத்திரத்தில் 5-4-2018முதல் 8-8-2018வரை

ராகு பகவான் சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 12-லும், கேதுபகவான் 12-ஆம் அதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் 6-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் பொருளாதாரரீதியாக ஓரளவுக்கு ஏற்றங்களைப் பெறுவீர்கள். பயணங்களால் சிறுசிறு அனுகூலங்கள் உண்டாகும் என்றாலும் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது, உறவினர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பிறருக்கு பெரிய தொகையைக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் தேக்க நிலை இல்லாமல் தொழில் செய்யமுடியும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுபாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்ர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். அசையும், அசையாச் சொத்துகளால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.

ராகு பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 9-8-2018முதல் 12-12-2018வரை

ராகுபகவான் சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 12-லும், கேதுபகவான் ராசியாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் 6-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் முன்கோபத்தைக் குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. 4-10-2018முதல் குருபகவான் சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளதால் பணவிஷயங்களில் சிந்தித்துச்செயல்படுவது, பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். அசையும், அசையாச் சொத்துகளால் சிறுசிறு விரயங்களைச் சந்திப்பீர்கள். உற்றார், உறவினர்களால் ஓரளவுக்கு அனுகூலத்தைப் பெறமுடியும். பிள்ளைகளை அனுசரித்து நடப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு முன்னேற்றமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகளால் அனுகூலமானப் பலன்களை அடைவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களைக் குறைத்துக்கொள்ள முடியும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-12-2018முதல் 13-2-2019வரை

ராகு பகவான் 5-ஆம் அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் 12-ஆம் வீட்டிலும், கேதுபகவான் 4 ராசியாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் 6-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். மணமாகாதவர்களுக்கு சில தடைகளுக்குப்பின் மணமாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது.  உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். பொன் பொருள் சேரும். உடல்நிலையில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் ஈடேறும். எடுக்கும் முயற்சிகளில் அனைத்திலும் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளநிலையில் நடைபெறும் என்றாலும் பெரிய தொகையை பிறருக்குக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்கவும். செய்யும் தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபத்தைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற்று மகிழ்ச்சியடைவார்கள். குருப்பரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

பரிகாரம்

சிம்ம ராசியில் பிறந்துள்ள  உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 12-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைக்குட்டை போன்றவற்றைப் பயன்படுத்துவது நல்லது.

உங்களுக்கு குரு பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து குரு, தட்சிணாமூர்த்திக்குக் கொண்டைக்கடலையை மாலையாகக் கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். 5 முக ருத்ராட்சம் அணியவும். குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்யவும். 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்       - 1,2,3,9
நிறம் - வெள்ளை, சிவப்பு
கிழமை - ஞாயிறு, திங்கள்
கல் - மாணிக்கம்
திசை - கிழக்கு
தெய்வம் - சிவன்

No comments: