Thursday, July 20, 2017

வார ராசிப்பலன் ஜுலை 23 முதல் 29 வரை 2017

வார ராசிப்பலன்  ஜுலை 23 முதல் 29 வரை   2017 (ஆடிமுதல்  13  வரை)

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com





சந்திர


சுக்கி

கேது 
திருக்கணித கிரக நிலை

சூரிய,
செவ்


ராகு
புதன்


சனி ( )


குரு

               
கிரக மாற்றம்
26-07-2017 மிதுன சுக்கிரன் மாலை 05.09 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கடகம்              23-07-2017 அதிகாலை 04.30 மணி முதல் 25-07-2017 காலை 06.02  மணி வரை.
சிம்மம்            25-07-2017 காலை 06.02 மணி முதல் 27-07-2017 காலை 10.25 மணி வரை.
கன்னி     27-07-2017 காலை 10.25 மணி முதல் 29-07-2017 மாலை 06.30 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
28-07-2017 ஆடி 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பஞ்சமிதிதி அஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
நல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, ராசியதிபதி செவ்வாய் சூரியன் சேர்க்கை பெற்று 4-ஆம் வீட்டில் இருப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் அலைச்சல் டென்ஷன் ஏற்படும் என்றாலும் 2-ல் சுக்கிரன் 5-ல் புதன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் சமாளிப்பீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தடை தாமதங்களுக்கு பிறகு அனுகூலப் பலன் கிட்டும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளால் சிறுசிறு மருத்துவ செலவுகளை எதிர் கொள்வீர்கள். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற முடியும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்று எதிர்பார்த்த லாபத்தை தரும். பொருட் தேக்கம் ஏற்படாது. மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சிவ பெருமானை வழிபாடு செய்வது, தட்சணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - -27, 28, 29.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே ஜென்ம ராசியில் சுக்கிரன் வலுப்பெற்று குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பது பொருளாதார ரீதியாக ஏற்றமிகு பலனை ஏற்படுத்தும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன், பொருள் சேரும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி நிலவும். முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உழைப்பிற்கான பலனை எளிதில் அடைவீர்கள். பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் யாவும் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன நிம்மதி உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பர். சனி பகவானை வணங்குவதும், துர்கையம்மனை வணங்குவதும் உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 23, 24.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் கோபப்படாமல் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையீடு செய்வதை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம்பணம் கொடுக்கல் வாங்கலில்  கவனமுடன் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, புதன், 6-ல் சனி சஞ்சரிப்பதால் எந்த சிக்கலையும் சமாளித்து சாதகமான பலன்களை அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது போன்றவற்றின் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். எதிர்பாராத திடீர் தன வரவுகள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் இருப்பது நல்லது. சிவ வழிபாடு உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 25, 26.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, இந்த வாரம் சூரியன் செவ்வாய் ஜென்ம ராசியிலும் 2-ல் ராகு 8-ல் கேது சஞ்சரிப்பதால் எந்த செயல் செய்வதென்றாலும் கவனத்துடன் செய்வது நல்லது. குரு பகவானும் சாதகமற்று இருப்பதால் எதிலும் சிக்கனமாக செயல்பட்டால் வீண் செலவுகளை குறைக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தகூடும். பொருளாதார நிலை ஓரளவுக்கு ஏற்ற இறக்கமாக இருந்தாலும், எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். முடிந்து வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலால் மதிப்பும் மரியாதையும் உயர்வடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதன் மூலம் முன்னேற்றம் அடையலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தள்ளி வைப்பது சிறப்பு. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொண்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். முருக வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 23, 24, 27, 28, 29.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே ஜென்ம ராசியில் புதன், 2-ல் குரு, 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் சுபிட்சமான பலன்கள் ஏற்படும். பணவரவுக்கு பஞ்சமிருக்காது என்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். கணவன்- மனைவியிடையே இருந்த பிரச்சனைகள் விலகி அன்யோன்யம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் பணிபுரிய முடியும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் உண்டாகும். எதிர்பாராத உதவிகளும் கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் 12-ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். பிரதோஷ காலங்களில் சிவ பெருமானை வணங்குவது நற்பலனை தரும்.

வெற்றி தரும் நாட்கள் - 25, 26.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, இவ்வாரம் பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன் 11-ல் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது பலமும் வலிமையும் கூடும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகுவதால் மனநிம்மதி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றிகளைப் பெறுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பதுடன் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்ப்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் தக்க சமயத்தில் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சற்றே மந்தநிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 23, 24, 27, 28, 29.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சூரியன் செவ்வாய், 11-ல் புதன் ராகு வலுவாக இருப்பதால் தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். தாராள தனவரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கடன் பிரச்சனைகள் யாவும் குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகளும் அமையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிட்டும். விநாயகர் ஆஞ்சநேயர் வழிபாடு மேற் கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 23, 24, 25, 26.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்ம சனி நடப்பதால் நெருக்கடியான சூழ்நிலை இருந்தாலும் 10-ல் புதன், ராகு, 11-ல் குரு சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள் உண்டாகி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணவரவுகள் சரளமாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்திலிருந்து வந்த கடன் பிரச்சனைகள் யாவும் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. உற்றார் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். சுபமுயற்சிகளில் தடைகள் விலகி சாதகப் பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். சனிக்கிழமைகளில் சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 25, 26, 27, 28, 29.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே இந்த வாரம் ஜென்ம ராசிக்கு 8-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய், 10-ல் குரு சஞ்சரிப்பதால் உங்கள் மன அமைதியை குறைக்கும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு வீண் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைப்பதால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. சில நேரங்களில் நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே பிரச்சனைகளை சமாளிக்க முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே முன்னேற வேண்டியிருக்கும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்ககூடும். மாணவர்கள் கல்விக்கான சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். முருக வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் -27, 28, 29.

சந்திராஷ்டமம் -  23-07-2017 அதிகாலை 04.30 மணி முதல் 25-07-2017 காலை 06.02  மணி வரை.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர் கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும் அற்புதமான அமைப்பாகும். உங்களுக்கு வரவேண்டிய பணவரவுகள் தக்க சமயத்தில் கிடைக்கப்பெற்று இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் குறையும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது முன் கோபத்தைக் குறைப்பது நல்லது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பதால் குடும்ப ஒற்றமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றத்தை பெற முடியும். தொழில் வியாபாரத்திலும் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் அமையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். துர்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 23, 24.

சந்திராஷ்டமம் - 25-07-2017 காலை 06.02 மணி முதல் 27-07-2017 காலை 10.25 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். வம்பு வழக்குகள் எல்லாம் குறைந்து தொழில் ரீதியாக லாபகரமான பலன்களை அடைவீர்கள்உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாக்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். வெளியூர் வெளிநாடு தொடர்புடைய வாய்ப்புகள் மூலம் அனுகூலம் ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை காணப்படும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் அஷ்டம ஸ்தானத்தில் குரு இருப்பதால் சிக்கனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்றே முழு முயற்சியுடன் பாடுபடுவது உத்தமம். குரு பகவான் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 23, 24, 25, 26.

சந்திராஷ்டமம்  -  27-07-2017 காலை 10.25 மணி முதல் 29-07-2017 மாலை 06.30 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீனராசி நேயர்களே இவ்வாரம் உங்கள் ராசியதிபதி குரு 7-ல் அமைந்து ஜென்ம ராசியை பார்ப்பதும் 3-ல் சுக்கிரன் 6-ல் ராகு சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி மேல் வெற்றியினை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் ஓரளவுக்கு நற்பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் முன் ஜாமீன் பொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள் என்பதால் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் ஓரளவுக்கு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைபளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதலால் மன நிம்மதி உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற சகவாசங்களை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். தினமும் விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 27, 28, 29.


Post a Comment

Intha Naal