Rasi palangal

Wednesday, July 26, 2017

இன்று - 26.07.2017

இன்று -  26.07.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com



இன்றைய  பஞ்சாங்கம்
26-07-2017, ஆடி- 10, புதன்கிழமை, திரிதியை திதி காலை 08.08 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. பூரம் நட்சத்திரம் பின்இரவு 04.23 வரை பின்பு உத்திரம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம்- 0, ஜீவன்- 1/2. மாத சதுரத்தி. ஆடிப்பூரம். விநாயகர் வழிபாடு நல்லது. கரிநாள். சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00




சுக்கி

கேது 
               
திருக்கணித கிரக நிலை
26.07.2017


சூரிய செவ்

புதன் சந்தி
ராகு

சனி  (வ)
               
குரு 

இன்றைய ராசிப்பலன் - 26.07.2017
மேஷம்
இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்தால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். கடன்கள் குறையும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருள்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.
மிதுனம்
இன்று நீங்கள் எந்த ஒரு கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்கி மகிழ்வார்கள். உறவினர்கள் வழியாக மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும்.
கடகம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் பொருளாதார பிரச்சனைகள் சற்று குறையும். மன அமைதி இருக்கும்.
சிம்மம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர் பதவிகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும்.
கன்னி
இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் உண்டாகும்.
துலாம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இருக்கும். குடும்பத்தில் கணவன்& மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிட்டும். கடன் பிரச்சனைகள் தீரும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். சேமிப்பு உயரும்.
தனுசு
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் குறைந்து காணப்படும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சனை குறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.
மகரம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமதப்பலனே கிட்டும். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை.
கும்பம்
இன்று உறவினர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை கூடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும்.
மீனம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். பெற்றோரிடமிருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
Post a Comment