Rasi palangal

Friday, July 28, 2017

இன்று - 28.07.2017

இன்று -  28.07.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (வார இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com


வாங்கி படிக்க தவறாதீர்கள்

ஆகஸ்ட் 2017 ஓம்சரவணபவா இதழுடன்
குரு பெயர்ச்சி பலன்கள் 2017 & 2018
(12 ராசிகளுக்கும் பொதுப்பலன்,பரிகாரம்,
 அதிர்ஷ்டக்குறிப்புகள் அடங்கியது
96 பக்கம் இலவச இனைப்பு

இப்படிக்கு
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பாலமுருகன்

ஆசிரியர் & இந்த வார ஜோதிடம் மாத இதழ்





இன்றைய  பஞ்சாங்கம்
28-07-2017, ஆடி- 12, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி காலை 06.38 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 05.40 வரை பின்பு சித்திரை. அமிர்தயோகம் பின்இரவு 05.40 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 1, ஜீவன்- 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   





சுக்கி
கேது 
               
திருக்கணித கிரக நிலை
28.07.2017


சூரிய செவ்

புதன்
ராகு

சனி  (வ)
               
சந்தி குரு 

இன்றைய ராசிப்பலன் -  28.07.2017
மேஷம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உதவியால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும்.
ரிஷபம்
இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுப செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரியவர்களின் மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.
கடகம்
இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்தொழிலில் கொடுக்கல்& வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு உயரும்.
சிம்மம்
இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் உத்தியோகத்தில் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
கன்னி
இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.
துலாம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் இருக்கும் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
விருச்சிகம்
இன்று எந்த ஒரு செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரிடமிருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன் பிறந்தவர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். கடன் பிரச்சனைகள் தீரும்.
தனுசு
இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும்உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் விலகும். உடல் ஆரோக்கியம் சீராகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன் கிட்டும்.
மகரம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று குறையும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.
கும்பம்
இன்று நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.
மீனம்

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.
Post a Comment