Saturday, August 19, 2017

இன்று - 19.08.2017

இன்று -  19.08.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com







இன்றைய  பஞ்சாங்கம்
19-08-2017, ஆவணி- 03, சனிக்கிழமை, துவாதசி திதி காலை 07.17 வரை பின்பு திரியோதசி திதி பின்இரவு 04.38 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. புனர்பூசம் நட்சத்திரம் இரவு 07.09 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 0, ஜீவன்- 1/2. சனிப் பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது.
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.




சந்தி சுக்கி
 
திருக்கணித கிரக நிலை
19.08.2017
ராகு செவ்
கேது  
சூரிய புதன்(வ)

சனி  (வ)

  குரு

இன்றைய ராசிப்பலன் - 19.08.2017
மேஷம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகி அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பாராத லாபம் கிட்டும். உத்தியோகத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும்-. வீட்டின் தேவைகள் நிறைவேறும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனைகள் குறையும். இது வரை வராத கடன்கள் வசூலாகும். பொன்பொருள் சேரும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
மிதுனம்
இன்று நீங்கள் தேவையற்ற மனஸ்தாபங்களை தவிர்க்க குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அயராத உழைப்பால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நல்லது.
கடகம்
இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பிள்ளைகள் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எடுத்த காரியம் எளிதில் முடியும்.
கன்னி
இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் வருமானம் பெருகும். தேவைகள் பூர்த்தியாகும்.
துலாம்
இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களின் மனஸ்தாபத்துக்கு ஆளாக நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பகல் 01.36 மணிக்கு வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை குறையும். வீண் விரயங்களால் கடன்சுமை அதிகமாகலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்க முடியும்.
தனுசு
இன்று உங்களுக்கு பகல் 01.36 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் உத்தியோக ரீதியாக மனஉளைச்சல் ஏற்படக்கூடும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.
மகரம்
இன்று குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.
கும்பம்
இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் வழியில் ஆதரவு கிட்டும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.
மீனம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் மூலம் பணிச்சுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத உதவிகள் கிட்டும்.
Post a Comment

Intha Naal