Wednesday, September 20, 2017

இன்று - 20.09.2017

இன்று -  20.09.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
Visit as @ www.muruguastrology.com

இன்றைய  பஞ்சாங்கம்
20-09-2017, புரட்டாசி -04, புதன்கிழமை, அமாவாசை திதி பகல் 11.00 வரை பின்பு பிரதமை. உத்திரம் நட்சத்திரம் இரவு 11.02 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் இரவு 11.02 வரை பின்பு மரணயோகம். நேத்திரம்- 0, ஜீவன்- 0.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00






               
திருக்கணித கிரக நிலை
20.09.2017


ராகு
கேது
செவ் சுக்கி புதன்

சனி
குரு
சூரிய சந்தி

இன்றைய ராசிப்பலன் -  20.09.2017
மேஷம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். வியாபாரத்தின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். இது வரை வராத கடன்கள் வசூலாகும். பொன்பொருள் சேரும்.
ரிஷபம்
இன்று நீங்கள் குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் தேவையற்ற மனஸ்தாபங்களை தவிர்க்கலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை குறையும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.
கடகம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துகளை விற்பதில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.
சிம்மம்
இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடு தோன்-றலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். தொழிலில் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் லாபம் கிட்டும்.
கன்னி
இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
துலாம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். நண்பர்களுடன் சிறு மனக்கசப்பு ஏற்படலாம். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நன்மையை கொடுக்கும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும்-. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். கூட்டாளிகளின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புக்கள் வந்து சேரும்.
தனுசு
இன்று குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். வருமானம் இரட்டிப்பாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனைகள் குறையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நற்பலனை தரும்.
மகரம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
கும்பம்
இன்று உங்களுக்கு மனதில் குழப்பம், கவலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுப காரியங்களை தள்ளி வைப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் வேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
மீனம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

No comments: