Wednesday, October 4, 2017

இன்று - 04.10.2017

இன்று -  04.10.2017
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

வாங்கி படிக்க தவறாதீர்கள்
இந்த வார ஜோதிடம் மாத இதழில்

குபேர செல்வம் தரும் லட்சுமி புஜை! -                               அழகரசன்
துலா குரு உலக அளவில் ஏற்படுத்தும் மாற்றங்கள்! -       அம்சி விவேகானந்தன்
முடக்குவாதத்திற்கு ஜோதிடப் பரிகாரங்கள்! –          அஸ்ட்ரோ சுந்தரராஜன்
உங்கள் எதிர்கால ஜோதிட வழிகாட்டி! -      முனைவர் முருகு பாலமுருகன்
தங்கம் விலை உயரும், வாகன விலை குறையும்!-          
 ஜி. ஸ்ரீனிவாசன்
அன்றாட வாழ்வில் அதிர்ஷ்டம் பெருக அற்புத வழிகள்?    -
கடகம் இராமசாமி
பிள்ளை ஜாதகம் தந்தையை தாங்குமா? தாக்குமா? -        
தோஷ சாம்யம்! -                                         பராசரி அய்யப்ப சர்மா
அக்டோபர் மாத பஞ்சாங்கம்!--                   முனைவர் முருகு பாலமுருகன்
சனி, செவ்வாயின் சம சப்தம நிலை!-                   எஸ். விஜய நரசிம்மன்
குமார சுவாமியம் கூறும் பன்னிரு பாவப் பலன்கள்! –
பி. ராஜசேகரன் M.Phil Astro
ஜென்ம பாவம் தீர்க்கும் பாத தரிசனம்! –           
சித்தயோகி சிவதாசன் ரவி
தனயோகம் தரும் கிரக நிலைகள்! –                           
அபிராமி சேகர்
காலத்தால் அழியாத ஜோதிடமும் காலத்தை வென்ற பரிகாரங்களும்! –  ஜி.கே. முத்து குருக்கள்
தனம் பெருக்கும் திரயோதசி வழிபாடு-                          
விசு அய்யர்
லக்னத்தில் கிரகங்கள் நின்ற பலன்கள்!- 
மன்னை ஸ்ரீமதி.வி. அகிலாண்டேஸ்வரி
12 லக்னப் பலன்கள்!-                              
 முனைவர் முருகு பாலமுருகன்
மருத்துவ ஜோதிடத்தின் மகத்துவங்கள்!-- -        -   
டாக்டர் இரா. ரகு M,Sc Astro
பரணி நட்சத்திர சூட்சுமங்கள்!-                            
ஜோதி ஷண்முகம்
சிவநயன யோகம் தரும் சிறப்பான பயன்கள்!-      
ஜி. ஆர். வெங்கடேஸ்வரன்
அக்டோபர் மாத எண்கணிதப் பலன்கள்!-                 
ஆம்புர் வேல்முருகன்
புகழ் தரும் சூரிய மேடு!-                              
 கைரேகைக் கலைஞன்
பஞ்சாங்கத்தில் திதி!-                                         
ஜி. ஸ்ரீனிவாசன்
வெற்றிக்கு வழிகாட்டும் எண்கணிதம்!-    ஜே.வி.வி. பொன்தாமரைக் கண்ணன்
அக்டோபர் மாத ராசிபலன்!--                        முனைவர் முருகு பாலமுருகன்




இன்றைய  பஞ்சாங்கம்
04-10-2017, புரட்டாசி -18, புதன்கிழமை, சதுர்த்தசி திதி பின்இரவு 01.48 வரை பின்பு பௌர்ணமி. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 09.39 வரை பின்பு உத்திரட்டாதி. அமிர்தயோகம் இரவு 09.39 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1. நடராஜர் அபிஷேகம்.
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 - 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00






  சந்தி
திருக்கணித கிரக நிலை
04.10.2017

ராகு
கேது
செவ்
சுக்கி 

சனி 

குரு    
  சூரிய புதன்

இன்றைய ராசிப்பலன் -  04.10.2017
மேஷம்
இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே அன்பும் ஆதரவும் பெருகும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும்.
ரிஷபம்
இன்று அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும்.
மிதுனம்
இன்று நீங்கள் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு கடினமான உழைப்பு வேண்டும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.
கடகம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உங்கள் ராசிக்கு மதியம் 03.45 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சுபமுயற்சிகளை தள்ளி வைப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
சிம்மம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு மதியம் 03.45க்கு பின் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் காலதாமதமா-கும். எந்த செயலையும் நிதானமாக செய்வது நல்லது.
கன்னி
இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துகளை விற்பதில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
துலாம்
இன்று இல்லத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சனைக்கு நல்ல தீர்வு உண்டாகும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிடைக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.
விருச்சிகம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். சிக்கனத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் உள்ள மந்த நிலை மாறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.
தனுசு
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சற்று மந்த நிலை ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
மகரம்
இன்று உங்களுக்கு அமோகமான பலன்கள் உண்டாகும். தொழிலில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். அரசு ஊழியர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கும்பம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வீண் செலவுகளால் குடும்பத்தில் நெருக்கடிகள் அதிகரிக்கலாம். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பெற்றோர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்களது அன்பை பெற முடியும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் சற்று குறையும்.
மீனம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் புரிவோர்களுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகும்.

No comments: