Friday, October 27, 2017

November Month rasipalan 2017

 நவம்பர் மாத ராசிப்பலன் - 2017

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர் - இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
வடபழனி, சென்னை -- 600 026
தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,









ராகு

கேது 
   

சனி 

குரு
புதன் 
சூரிய
செவ் சுக்கி
கிரக மாற்றம்
02-11-2017 விருச்சிகத்தில் புதன் அதிகாலை 12.44 மணிக்கு
02-11-2017 துலாத்தில் சுக்கிரன் இரவு 12.00 மணிக்கு
16-11-2017 விருச்சிகத்தில் சூரியன் பகல் 12.22 மணிக்கு
24-11-2017 தனுசில் புதன் பகல் 01.54 மணிக்கு
26-11-2017 விருச்சிகத்தில் சுக்கிரன் இரவு 10.09 மணிக்கு
30-11-2017 துலாத்தில் செவ்வாய் அதிகாலை 05.21 மணிக்கு

மேஷம்  அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்
அன்புள்ள மேஷ ராசி நேயர்களே, முன் கோபம் அதிகம் இருந்தாலும் இனிமையாக பழகும் சுபாவம் கொண்ட உங்களுக்கு இம்மாதம் ஜென்ம ராசிக்கு 6-ல் செவ்வாய், 7-ல் குரு சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மாதகோளான சூரியன் சாதகமற்று சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவினை ஏற்படுத்தும். உற்றார் உறவினர்களின் வருகை மன மகிழ்ச்சியை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்கள் தடையின்றி கை கூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சுமாராக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் அனுசரனையாக நடந்து கொள்வார்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். அபிவிருத்தியும் பெருகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களை வசூலித்துவிட முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தடைபட்ட பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் சற்ற கடின முயற்சிகளை மேற்கொண்டால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.

பரிகாரம்.  சிவபொருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்  18.11.2017 மதியம் 12.50 மணி முதல் 20.11.2017 இரவு 12.44 மணி வரை.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே எந்த கஷ்டத்தையும் தாங்கக்கூடிய சகிப்புதன்மை அதிகம் கொண்ட உங்களுக்கு இந்த மாதம் ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு சுமாரான அமைப்பு என்பதால் நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றுவதால் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்க பெறுவதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உறவினர்களும் சில நேரங்களில் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலமான பலன் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான முன்னேற்ற நிலையிருக்கும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினை பெற முடியும். வேலைபளு கூடுதலாகும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

பரிகாரம்.  இம்மாதம் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்  20.11.2017 இரவு 12.44 மணி முதல் 23.11.2017 பகல் 01.41 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள மிதுன ராசி நேயர்களே மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசி காரியங்களை சாதித்து கொள்ளக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 5-ல் குரு சுக்கிரன் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்ப தேவைகள் அனைத்தையும் தடையின்றி பூர்த்தி செய்து விட முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் லாபம் குறையும். தொழிலாளர்களும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள். விளையாடும் போது கவனமுடன் இருப்பது உத்தமம். சனிபகவானுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

பரிகாரம்.  சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நற்பலனை தரும்.

சந்திராஷ்டமம்  23.11.2017 பகல் 01.41 மணி முதல் 26.11.2017 அதிகாலை 01.59 வரை.

கடகம்  புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்
அன்புள்ள கடக ராசி நேயர்களே கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது நிறைவேற்ற கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய் 6-ல் சனி சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்றாலும் சூரியன் சாதகமற்று சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகளை தாண்டி வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் நிலையில் கவனம் செலுத்துவது உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் தோன்றி மறையும். முன் கோபத்தை குறைப்பது முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். குடும்பத்தில் ஓரளவுக்கு சுபிட்சமான நிலையிருக்கும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். மங்களரமான சுப காரியங்கள் கைகூடுவதில் சற்று தாமத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும்.

பரிகாரம்.  ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்  26.11.2017 அதிகாலை 01.59 மணி முதல் 28.11.2017 பகல் 11.17 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே வைராக்கியமான குணமும், வாழ்க்கையில் பல முறை தோற்றாலும் தன் சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2-ல் செவ்வாய், 3-ல் குரு சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 6-ல் கேது சஞ்சரிப்பதும் மாதமுற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் ஒரு சில ஆதாயங்களை பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்றே நெருக்கடியான காலம் என்பதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் நிலவும் என்றாலும் உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை நிலவும்.

பரிகாரம். குரு ப்ரீதி, தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்  01.11.2017 அதிகாலை 01.46 மணி முதல் 03.11.2017 அதிகாலை 05.33 மணி வரை.  மற்றும் 28.11.2017 பகல் 11.17 மணி முதல்  30.11.2017 மாலை 04.17 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
அன்புள்ள கன்னி ராசி நேயர்களே எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக் கூடிய திறமையும், அனைவரிடமும் அன்புடன் பழகும் பண்பும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2-ல் குரு 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதும்  மாதபிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயரும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே அவர்களால் சாதகப்பலனைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களையும் பெற்று விடுவீர்கள். கூட்டாளிகளும் ஆதரவாக அமைவார்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பும் அமையும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதினால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். மாணவர்களுக்கு அரசு வழியில் கல்விக்காக உதவிகள் கிட்டும்.

பரிகாரம். சனி ப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்  03.11.2017 அதிகாலை 05.33 மணி முதல் 05.11.2017 காலை 06.32 மணி வரை.
மற்றும்  30.11.2017 மாலை 04.17 மணி முதல் 02.12.2017 மாலை 05.32 மணி வரை.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள துலா ராசி நேயர்களே ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வதில் அலாதி பிரியம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3-ல் சனி சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் ஜென்ம ராசியில் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் உண்டாகி ஒற்றுமை குறைவு ஏற்படும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் தேவையற்ற கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியினை அளிக்கும். புத்திர வழியில் சிறுசிறு மனக்கவலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்களை எதிர் கொள்ள நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் சிறுசிறு மருத்துவ செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் வீண் பிரச்சனைகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.

பரிகாரம். முருகப்பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்  05.11.2017 காலை 06.32 மணி முதல் 07.11.2017 காலை 06.44 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற லட்சியத்துடன் பாடுபடக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு மாதகோளான சூரியன் சாதகமற்று சஞ்சரித்தாலும் ஜென்ம ராசிக்கு 3-ல் கேது 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பது ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் தடையின்றி வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுத்தால் தேவையற்ற பிரசங்சனைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்திலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடை தாமதங்களுக்குப் பின் கிட்டும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் அமையும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும்.

பரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை மேற்கொள்வது சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்  07.11.2017 காலை 06.44 மணி முதல் 09.11.2017 காலை 08.03 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
அன்புள்ள தனுசு ராசி நேயர்களே தன்னுடைய கொள்கைகளை யாருக்காகவும், எதற்காகவும் எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 11-ல் குரு, சூரியன் 10-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. எடுக்கும் சுபகாரியங்களில் வெற்றி கிட்டும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். ஆடை ஆபரணங்களை வாங்கி சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும்தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். பல பெரிய மனிதர்களின் உதவியும் ஆதரவும் தடையின்றிக் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். சற்று அலைச்சல் டென்ஷன்களும் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள். நல்ல நட்புகள் தேடி வரும்.

பரிகாரம். விநாயகரையும் அம்மனையும் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்  09.11.2017 காலை 08.03 மணி முதல் 11.11.2017 பகல் 11.44 மணி வரை.

மகரம்    உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்
அன்புள்ள மகர ராசி நேயர்களே தானுண்டு தன் வேலையுண்டு என பாடுபடும் குணம் கொண்ட உங்களுக்கு மாத கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், 10-ல் புதன் சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்றாலும் குரு, சனி சாதகமற்று சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகி குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுவதால் மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் தேவையற்ற வீண் செலவுகள் அலைச்சல்கள் அதிகரிக்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்க தாமத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாகவே செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை காண முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் தடையின்றி வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கப் பெறும். வேலைபளு குறைவாகவே இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம்.

பரிகாரம். சனிக்குரிய பரிகாரங்களை மேற்கொள்வது தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்  11.11.2017 பகல் 11.44 மணி முதல் 13.11.2017 மாலை 06.02 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்புள்ள கும்ப ராசி நேயர்களே வேகமாக பேசினாலும், திருத்தமாகவும், திறம்படவும் பேசக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பது உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும் 9-ல் குரு 6-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மன¬வியிடையே ஒற்றுமை பலப்படும். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே மறையும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபங்களை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிடைக்கும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.

பரிகாரம். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்  13.11.2017 மாலை 06.02 மணி முதல் 16.11.2017 அதிகாலை 02.32 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
அன்புள்ள மீன ராசி நேயர்களே மற்றவர்களின் குணாதிசியங்களை எளிதில் எடை போடும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 7-ல் செவ்வாய் 8-ல் குரு சூரியன் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை சற்றே அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களால் ஆதாயங்களை அடையலாம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் விலகி புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் உயரதிகாரிகளின் ஊக்குவிப்புகள் உற்சாகத்தை அளிக்கும்தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவார்கள்

பரிகாரம். சிவ பெருமானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்  16.11.2017 அதிகாலை 02.32 மணி முதல் 18.11.2017 மதியம் 12.50 மணி வரை

சுப முகூர்த்த நாட்கள்

01.11.2017 ஐப்பசி 15 ஆம் தேதி புதன்கிழமை துவாதசிதிதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் தனுசு இலக்கினம். வளர்பிறை

02.11.2017 ஐப்பசி 16 ஆம் தேதி வியாழக்கிழமை திரயோதசிதிதி ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் விருட்சிக இலக்கினம். வளர்பிறை

03.11.2017 ஐப்பசி 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சதுர்தசிதிதி அஸ்வினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் விருட்சிக இலக்கினம். வளர்பிறை

09.11.2017 ஐப்பசி 23 ஆம் தேதி வியாழக்கிழமை சஷ்டிதிதி புனர்பூசம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் விருட்சிக இலக்கினம். தேய்பிறை

16.11.2017 ஐப்பசி 30 ஆம் தேதி வியாழக்கிழமை திரயோதசிதிதி சித்திரை நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 08.30 மணிக்குள் விருட்சிக இலக்கினம்.தேய்பிறை

23.11.2017 கார்த்திகை 07 ஆம் தேதி வியாழக்கிழமை பஞ்சமிதிதி உத்திராட நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மகர இலக்கினம். வளர்பிறை

29.11.2017 கார்த்திகை 13 ஆம் தேதி புதன்கிழமை தசமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் விருச்சிக இலக்கினம். வளர்பிறை


Post a Comment

Intha Naal