Monday, October 30, 2017

Sani peyarchi 2017 to 2020 Mesha rasi

 

மேஷம்   
 
அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்

நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும், கூர்ந்து கவனிக்கும் ஆற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு 10,11-க்கு அதிபதியும் ராசியதிபதி செவ்வாய்க்கு பகை கிரகமுமான சனி இதுவரை அஷ்டமத்தில் சஞ்சரித்ததால் பல்வேறுவகையில் இன்னல்களை சந்தித்து வந்தீர்கள். வாக்கிய கணிதப்படி  19-12-2017 முதல் 27-12-2020 வரை பாக்கிய ஸ்தானத்தில், குருவின் வீடான தனுசு ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கிருந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறைந்து, ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கப்பெற்று செல்வம், செல்வாக்கு உயரும். பழைய கடன்கள் படிப்படியாகக் குறையும். குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நெருங்கியவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை நிலவும். வீடு, மனை,வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு புதுவீடு கட்டும் யோகம் கிட்டும். உடல்நிலையில் தெம்பும், உற்சாகமும் உண்டாகி எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். கடந்தகால மருத்துவச் செலவுகள் குறையும். கொடுக்கல்-வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று எதிர்பாராத லாபமும், அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்கள் தடைப்பட்ட உயர்வுகளைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும்.  
  
   சனி பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ள இக்காலத்தில், உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் 2-9-2017 முதல் 4-10-2018 வரையும், 9-ஆம் வீட்டில் 29-10-2019 முதல் 15-11-2020 வரையும் குரு சஞ்சரிக்க உள்ளதால் இக்காலங்களில் உங்கள் பலமும் வலிமையும் கூடும். பொருளாதார நிலை உயரும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் எளிதில் கைகூடும். நல்லவரன்கள் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு சிறப்பான புத்திர பாக்கியமும் உண்டாகும். 13-2-2019 முதல் 1-9-2020 வரை ராகு முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிக்க இருப்பது சிறப்பான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள்.

உடல்ஆரோக்கியம்   

  உடல்நிலை சிறப்பாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செல்படுவீர்கள். அன்றாடச் செயல்களை சிறப்பாகச் செய்து முடிக்கமுடியும். மருத்துவச் செலவுகள் யாவும் படிப்படியாகக் குறையும். மனைவி, பிள்ளைகள் மற்றும் நெருங்கியவர்களின் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெற்று மனநிம்மதி உண்டாகும்.

குடும்பம், பொருளாதார நிலை 

   குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். வீட்டைக் கட்டிக் குடிபுகும் அமைப்பு, வீடு, மனை வாங்கும் யோகம், வாகனச் சேர்க்கை யாவும் சிறப்பாக இருக்கும். பொருளாதாரம் மிகச்சிறப்பாக அமைந்து சேமிப்பு பெருகும். பிரிந்த உறவினர்களும் ஒன்றுகூடி மகிழ்வார்கள். நீண்ட நாட்களாகத் தடைப்பட்ட காரியங்களும் கைகூடும்.

கொடுக்கல்- வாங்கல்

  கமிஷன் ஏஜென்ஸி, கான்ட்ராக்ட் போன்றவற்றில் அற்புதமான லாபம் உண்டாக்கும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடையமுடியும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதால் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சேமிக்கமுடியும்.

தொழில், வியாபாரம்

   தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் அபிவிருத்தியும் உண்டாகும். இதுநாள் வரை இருந்துவந்த போட்டி பொறாமைகளும், மறைமுக எதிர்ப்புகளும் மறைந்து தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். எதிர்பார்க்கும் உதவிகள் அனைத்தும் தக்கசமயத்தில் கிடைக்கும். நண்பர்களாலும், உடனிருக்கும் தொழிலாளர்களாலும் சாதகமான பலன்கள் உண்டாகும்.

உத்தியோகம் 

  உத்தியோக நிலையில் இதுநாள் வரை தடைப்பட்ட ஊதிய உயர்வு, பதவி உயர்வுகள் யாவும் சிறப்பாக அமையும். மேலதிகாரிகளின் பரிபூரண ஒத்துழைப்பும் உடன்பணிபுரிபவர்களின் ஆதரவும் உங்களின் வேலைப்பளுவைக் குறைத்துக்கொள்ள உதவும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலப்பலன்களும் ஏற்படும்.

பெண்கள் 

  பொருளாதார நிலை சிறப்பாக அமைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் கைகூடும். பொன்பொருள், ஆடை, ஆபரணங்கள் சேரும். சிலர் புது வீடுகட்டிக் குடிபுகும் யோகப்பலனையும் பெறுவீர்கள். உற்றார் -உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை நிலவும். பணிபுரியும் பெண்களுக்கு வேலையில் திருப்தியும் மனநிறைவும் உண்டாகும்.

அரசியல்

உங்கள் வாழ்வில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தக்கூடிய காலமாக இருக்கும். இதுநாள் வரை இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும்விலகி பதவிகளில் மேன்மை, நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மக்களின் ஆதரவு பெருகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உங்கள்மீது இருந்த அவப்பெயர்கள் நீங்கும். 

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சுமாராக இருந்தாலும்  முதலீட்டினை எடுத்துவிட முடியும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சற்றே சுபச்செலவுகளைச் சந்திப்பீர்கள். குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். பங்காளிகள்வழியில் இருந்த பிரச்சினைகள் குறையும்.

கலைஞர்கள்

இசை, நாட்டியம் சங்கீதத்துறைகளில் உள்ளவர்கள் ஏற்றம்பெறுகின்ற காலமாகவே அமையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். எதிர்பார்க்கும் கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். பெயர், புகழ் யாவும் உயரும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.

மாணவ- மாணவியர்

  மந்தநிலை விலகி எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். கல்வியிலும், விளையாட்டுத்துறைகளிலும் ஈடுபட்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். நல்ல நண்பர்களின் சேர்க்கை மனமகிழ்ச்சியை உண்டாக்கும். மேற்கல்விக்காக வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய யோகமும் உண்டாகும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 19-12-2017 முதல் 23-4-2018 வரை

    சனி பகவான் தனுசு ராசியில், கேது நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 9-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடன்கள் படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும். குரு 7-ல் இருப்பதால் சுபகாரியங்கள் கைகூடும். கணவன்-மனைவி  ஒற்றுமை பலப்படும். கொடுக்கல்-வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். வெளிவட்டாரத் தொடர்புகளால் அனுகூலமானப் பலன்கள் கிட்டும். எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை அடைவார்கள். ராகு-கேதுவுக்குப் பரிகாரமாக அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

சனி பகவான் தனுசு ரா
சியில் வக்ரகதியில் 24-4-2018 முதல் 20-8-2018 வரை
 
  ஜென்ம ராசிக்கு 9-ல் வக்ரகதியில் சனி சஞ்சரிப்பதால், எதிலும் சற்று கவனமுடன் நடந்து கொண்டால் இக்காலங்களில் அனுகூலமான பலன்களை அடையலாம். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகக்கூடும் என்பதால் கணவன்-மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. குருவும் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும் என்றாலும் கூட்டாளிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பொருளாதார நிலை ஓரளவுக்குத் திருப்தியளிக்கும். உடல்நிலையில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. 4-ல் ராகு இருப்பதால் தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். ஆஞ்சநேயர், விநாயகரை வழிபடுவது கெடுதியைக் குறைக்கும். 

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 21-8-2018 முதல் 19-1-2019 வரை

   சனி பகவான் தனுசு ராசியில், கேது நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்பதால் இக்காலங்களில் ஏற்றம் மிகுந்த பலன்களையே அடைவீர்கள். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். 5-10-2018 முதல், குரு 8-ல் சஞ்சரிக்க இருப்பதால் கொடுக்கல்-வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடையலாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் அமையும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனம் தேவை. நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வதும், கணவன்-மனைவி விட்டுக்கொடுத்து நடப்பதும் நன்மையளிக்கும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் உயர்வான பதவிகளைப் பெறுவார்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்மையைத் தரும்.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 20-1-2019 முதல் 6-5-2019 வரை

  சனி பகவான் தனுசு ராசியில் 2,7-க்கு அதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சரளமாக அமையும். உடல்நிலைகளில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. சுபகாரிய முயற்சிகள் தடைகளுக்குப்பின் நிறைவேறும். பொருளாதாரநிலை ஓரளவுக்கு திருப்தியளிக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. கணவன்- மனைவி இடையே வீண்வாக்குவாதங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். பணம் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. 13-2-2019 முதல், ராகு 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்றுத் தாமதப்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது நல்லது.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 7-5-2019 முதல் 1-9-2019 வரை

  ஜென்ம ராசிக்கு 9-ல் சனி பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் எதையும் சமாளிக்கமுடியும். கணவன்-மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாமலிருக்கும். சிலருக்கு பூமி, மனையால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. குரு 8-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத விரயங்கள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு முன்ஜாமீன் கொடுப்பதால் வீண் விரோதங்களை சந்திக்க நேரிடும். வெளிநாட்டுப் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலமான பலன்களை அடையமுடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதம் ஏற்படும். ராகு 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களில் ஒத்துழைப்புகள் வேலைப்பளுவைக் குறைக்கும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 2-9-2019 முதல் 28-9-2019 வரை

  சனி பகவான் தனுசு ராசியில், கேது நட்சத்திரத்தில் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும், சர்ப்ப கிரகமான ராகு முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் நிலவும். தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய பொற்காலமாக அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். சுபகாரியங்கள் தடைக்குப் பின்பு நிறைவேறும். தனவரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத்தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். பொன், பொருள் சேரும். நீண்ட நாள் கனவுகள் யாவும் நிறைவேறக்கூடும். நீங்கள் எந்தத் தொழில் செய்பவராக இருந்தாலும் நிதானமாக இருந்தால் லாபத்தை அடையலாம். எந்த போட்டிகளையும் எதிர்கொள்ளக்கூடிய வலிமை, வல்லமை உண்டாகும். குரு 8-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பது சிறப்பு. கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம். 

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 29-9-2019 முதல் 25-2-2020 வரை

  சனி பகவான் 2, 7-க்கு அதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை திருப்தியளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, அனுகூலங்கள் உண்டாகும். உடல்நிலையில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் லாபம் தரும். நண்பர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். 29-10-2019 முதல், குரு 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார்-உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகஸ்தர்களின் கனவுகள் நினைவாகும். பொன் பொருள் சேரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் அமையும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்வர்களுக்கு இருந்த போட்டிகள் குறைந்து லாபம் பெருகும்.  விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 26-2-2020 முதல் 28-4-2020 வரை

  சனி பகவான் 5-க்கு அதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்பதாலும், 9-ல் குரு சஞ்சரிப்பதாலும் தடைப்பட்ட சுப காரியங்கள் அனைத்தும் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். கணவன்-மனைவி  ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துகளால் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கொடுக்கல்-வாங்கல்கள் சரளமாக அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களைத் தடையின்றிப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிட்டும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். உங்களது கனவுகள் அனைத்தும் நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் கிட்டும். அசையா சொத்துகளை வாங்கமுடியும். ராகு 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கடன்கள் யாவும் குறையும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 29-4-2020 முதல் 14-9-2020 வரை

  ஜென்ம ராசிக்கு 9-ல் சனி பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், 9-ல் சஞ்சரிக்கும் குருவும் வக்ரம்பெற உள்ளதாலும் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். உடல்நிலையில் சோர்வு, கைகால், மூட்டுகளில் வலி போன்றவை தோன்றி மறையும். கணவன்-மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை தோன்றினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கப்பெறும், வேலைப்பளுவும் குறைந்தே காணப்படும். ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது சிறப்பு.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 15-9-2020 முதல் 19-11-2020 வரை

  சனி பகவான் 2, 7-க்கு அதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 9-ல் சஞ்சரிப்பதால் கடந்தகால பிரச்சினைகள் விலகி எதிலும் முன்னேற்ற மான நிலை இருக்கும்.திருமண சுபகாரியங்களும் கைகூடும். பொருளாதார நிலை திருப்தியளிக்கும். 2, 8-ல் ராகு-கேது சஞ்சரிப்பதால் கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, அனை வரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது அவசியம். உற்றார்- உறவினர்களிடமும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். குரு 9-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்துவிடக்கூடிய ஆற்றலும் திறமையும் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு  முதலீட்டினை எடுத்துவிடக்கூடிய அளவிற்கு வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகளிடம் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் அபிவிருத்தியைப் பெருக்குவதற்கு உதவிகரமாகவே செயல்படுவார்கள். ராகு-கேதுவுக்கு சர்ப்ப சாந்தி செய்வது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 27-12-2020 வரை
 
   சனி பகவான் ராசியதிபதிக்கு நட்பு கிரகமான சூரியனின் நட்சத்தி ரத்தில் 9-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். கடன் களும் குறையும். சற்றே அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். எதிர் பாராத உதவிகளும் கிடைக்கும். திருமண சுபகாரியங்கள் தடைகளுக்குப் பின் கைகூடும். குரு 10-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும் என்றாலும் கூட்டாளிகளிடன் சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட் டினைச் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். பணியில் பிறர்செய்யும் தவறுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம். 

அதிர்ஷ்டம் அளிப்பவை எண்: 1, 2, 3, 9, நிறம்: ஆழ்சிவப்பு, கிழமை: செவ்வாய், கல் : பவளம்,      திசை: தெற்கு, தெய்வம்: முருகன்.

No comments: