Saturday, November 11, 2017

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் 2017-2020 கன்னி



கன்னி உத்திரம் 2,3,4ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்கள்
பேச்சிலும் செயலிலும் பிறரைப் புண்படுத்தாமல் நிதானமுடனும், நேர்மையுடனும் வாழக் கூடிய பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்கும் சனி வாக்கியகணிப்படி வரும் 19-12-2017 முதல் 27-12-2020 வரை சுகஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டம் சனி தொடங்குகிறது. இதனால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். இருப்பதை அனுப்பிக்க இடையூறு சுக வாழ்வு பாதிப்படையும். உங்கள் ராசியாதிபதி புதனுக்கு சனி நட்பு கிரகம் என்ற காரணத்தால் அதிக கெடுதலை ஏற்படுத்த மாட்டார். உடல்நிலையில் சோர்வு, மந்தநிலை, கை, கால் மூட்டுகளில் வலி போன்ற பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். நேரத்திற்கு உணவு உண்பது தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. வண்டி வாகனங்கள் மூலமாக எதிர்பாராத செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பதன் மூலமாக தேவையற்ற பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். சிலருக்கு உண்டாக கூடிய இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டு பிரிய கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்.
அர்த்தாஷ்டம் சனியால் சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும் என்றாலும் இக்காலங்களில் உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் குரு பகவான் வரும் 04-10-2018 வரை சஞ்சாரம் செய்ய இருப்பதால் பல்வேறு வகையில் அனுகூலப் பலனை அடைய முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். சிலருக்கு புத்திர பாக்கியமும் அமையும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. 27-07-02017 முதல் 12-02-2019 வரை ராகு 11-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எதையும் சமாளிக்க முடியும்.

உடல்ஆரோக்கியம் 
உடல்நிலையில் சற்று மந்த நிலை சோர்வு உண்டாகும் என்றாலும் பெரிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் சற்றே குறையும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும்உணவு விஷயங்களில் சற்று கவனமுடன் நடந்து கொள்வது உத்தமம்.

குடும்பம் பொருளாதார நிலை
பொருளாதாரநிலை ஒரளவுக்கு திருப்தி அளிக்கும். குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு கருத்து வேறபாடுகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் தடைகளுடன் நிறைவேறும். வீடு, வண்டி, வாகனம் மூலம் சுப செலவு உண்டாகும். கடன்கள் சற்று குறையும்.

கொடுக்கல்- வாங்கல்
கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றவற்றில் எதிர்பார்க்கும் லாபத்தில் சில தடைகள் நிலவினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும்.

தொழில், வியாபாரம் 
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். அரசு வழியில் உதவிகள் கிட்டும். வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் அனுகூலம் உண்டாகும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் அதிகரித்தாலும் எதையும் சமாளித்து முன்னேற்றதை அடைய கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள்.

உத்தியோகம் 
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் எடுக்கும் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு ஒரளவுக்கு வேலைபளுவை குறையும். பதவி உயர்வுகளால் கூடுதல் பொறுப்புகள் ஏற்படும். எதிலும் சற்று நிதானமாக செயல்பட்டால் அதிகாரிகளின் ஆதரவுகளைப் பெற முடியும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

பெண்கள்
உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் ஏற்படும். அசையா சொத்துக்களால் சுபசெலவுகள் ஏற்படும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் வரவை விட செலவுகள் அதிகமாக உண்டாகும். முடிந்த வரை நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பதும், தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு பணியில் சற்று வேலைபளு கூடும்.

அரசியல்
பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அமைச்சர்களின் ஆதரவுகள் கிடைத்தாலும் உடனிருப்பவர்களால் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வருவதால் வீண் செலவுகள் அதிகரிக்கும்மக்களின் தேவையறிந்து செயல்பட்டால் அவர்களின் ஆதரவுகளை தொடர்ந்து பெறமுடியும்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராக தான் இருக்கும். போட்ட முதலீட்டினை எடுக்க சற்று எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும். பங்காளிகளின் ஆதரவுகள் ஒரளவுக்கு மன நிம்மதியினை உண்டாக்கும். கால் நடைகளால் எதிர்பார்த்த லாபம் அமையும். அசையும், அசையா சொத்து வழியில் வீண் செலவுகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவது நல்லது.

கலைஞர்கள்
புதிய வாய்ப்புகள் தேடி வரும். கொடுத்த வாக்கினை காப்பாற்ற முடியாமல் போகும். ரசிகர்களின் ஆதரவு சிறப்பாக அமையும். கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகளால் சற்றே அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும்.

மாணவ- மாணவியர்
கல்வியில் மந்த நிலை உண்டாகக்கூடிய காலம் என்பதால் சற்று கவனமுடன் செயல்பட்டால் ஒரளவுக்கு அனுகூலங்களை பெறமுடியும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பபது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாக அமையும்.


சனிபகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 19-12-2017 முதல் 23-04-2018 வரை
சனி பகவான் சர்ப கிரகமான கேதுவின் நட்சத்திரத்தில் 4-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமசனி நடைபெறுவது சாதகமற்ற அமைப்பு ஆகும். இதனால் அசையா சொத்துகளால் வீண் செலவு, தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும் என்றாலும் குரு 2-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை திருப்தியளிப்பதாக அமையும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளால் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படும் என்றாலும் 11-ஆம் வீட்டில் ராகு இருப்பதால் எதையும் எளிதில் வென்றுவிட முடியும். உத்தியோகஸ்தர்களும் பணியில் திறம்பட செயல்பட முடியும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். உடல் நிலைகளில் கவனம் செலுத்துவது தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கடன்கள் படிப்படியாக குறையும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.

சனிபகவான் தனுசு ராசியில் வக்ர கதியில் 24-04-2018 முதல் 20-08-2018 வரை
சனிபகவான் 4-ல் வக்ர கதியில் சஞ்சரிப்பது மட்டுமன்றி குருவும் தனஸ்தானத்தில் 04-07-2018 முடிய வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் தடை தாமதங்களை சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வதால் கடன்களை தவிர்க்கலாம். உடல் நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். அசையா சொத்து வகையில் செலவுகள், சுகவாழ்வு சொகுசு வாழ்வில் பாதிப்புகள் உண்டாகும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முடிந்த வரை நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். சர்ப கிரகமான ராகு 11-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து லாபம் காண முடியும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் நிம்மதியுடன் செயல்பட முடியும் என்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமத நிலையை எதிர்கொள்வீர்கள். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

சனிபகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 21-08-2018 முதல் 19-01-2019 வரை
சனி பகவான் சர்ப கிரகமான கேதுவின் நட்சத்திரத்தில் 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றும். 05-10-2018 முதல் குரு முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார நிலையில் ஒரளவுக்கு உயர்வுகள் உண்டாகும். என்றாலும் எதிர்பாராத செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் மந்தமான நிலைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகஸ்தர்கள் எவ்வளவு தான் பாடுபட்டாலும் நல்ல பெயரை எடுக்க முடியாது. எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவிஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். சர்ப கிரகமான ராகு 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சனிபகவான் தனுசு ராசியில் பூராடம் நட்சத்திரத்தில் 20-01-2019 முதல் 06-05-2019 வரை
சனி பகவான் உங்கள் ராசிக்கு 2,9-க்கு அதிபதியான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 4-ல் சஞ்சரிப்பதால் நன்மை தீமை கலந்த பலன்களையே அடைய முடியும். குருவும் 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்களுக்குப் பிறகே வெற்றி கிட்டும். உடல் நிலையில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியிருக்கும். எவ்வளவு தான் பாடுபட்டாலும் எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்தியளிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச் செயல்படவும். கூட்டாளிகளின் ஆதரவுகள் சிறப்பாகவே இருக்கும். 12-02-2019 முடிய ராகு 11-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளும் திறன் உண்டாகும். நெருங்கியவர்கள் செய்யும் உதவிகள் மூலம் உங்கள் பிரச்சினைகள் குறையும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.

சனிபகவான் தனுசு ராசியில் வக்ர கதியில் 07-05-2019 முதல் 01-09-2019 வரை
சனி 4-ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குரு 3-ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் நடந்து கொள்வது உத்தமம். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் அமையும். கடன்கள் படிப்படியாக குறையும். சேமிப்பு பெருகும். கடந்த கால பிரச்சினைகள் சற்றே குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கப்பெற்று எதையும் சமாளித்து விடமுடியும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அமையும். வேலைபளு குறையும். தொழில் வியாபாரம் முன்னேற்ற உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சனிபகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 02-09-2019 முதல் 28-09-2019 வரை
சனி பகவான் சர்ப கிரகமான கேதுவின் சேர்க்கை பெற்று 4-ல் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சிறுசிறு பாதிப்புகளால் மருத்துச் செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வீண் பிரச்சினைகளும், சங்கடங்களும் ஏற்படும். இக்காலங்களில் குருவும் சாதகமின்றி சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் சிக்கல்கள், எதிர்பாராத வீண் செலவுகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற பயணங்களையும் பெரிய முதலீடுகளையும் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலைப் பளுவை குறைத்துக் கொள்ள முடியும். ராகு 10-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினை பெறுவீர்கள். குரு, சனிக்கு பரிகாரங்கள் செய்வது மிகவும் உத்தமம்.

சனிபகவான் தனுசு ராசியில் பூராடம் நட்சத்திரத்தில் 29-09-2019 முதல் 25-02-2020 வரை
சனி பகவான் உங்கள் ராசி அதிபதி புதனுக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது ஓரளவுக்கு சாதகமான அமைப்பு என்றாலும் 4-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைதாமதங்கள் நிலவும். குடும்பத்தில் வீண் கருத்து வேறுபாடுகள் எதிர்பாராத செலவுகள் உண்டாகும் என்றாலும் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். 29-10-2019 முதல் குருவும் சுகஸ்தானமான 4-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதிலும் எதிர்நீச்சல் போட்டே சமாளிக்க வேண்டியிருக்கும்பொருளாதார நிலையில் தடைகள் ஏற்படாது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். பெரிய முதலீடுகளில் செய்ய இருக்கும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை. ஆடம்பரச் செலவுகளை சற்றே குறைத்துக் கொண்டால் கடன்கள் உண்டாவதை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உயர்வுக்கு வழிவகுக்கும். ராகு, கேதுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.

சனிபகவான் தனுசு ராசியில் உத்திராடம் நட்சத்திரத்தில் 26-02-2020 முதல் 28-04-2020 வரை
உங்கள் ராசிக்கு சுகஸ்தானத்தில் குரு, சனி, கேது இனைணந்து சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்களால் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பதால் மட்டுமே அனுகூலமானப் பலனை பெற முடியும். பொருளாதார நிலையிலும் தடைகளையே சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறரை நம்பி கொடுக்காமல் இருப்பது நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை உண்டாகும்தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். வேலையாட்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் முடிந்த வரை பிறர் விஷயத்தில் தலையீடு செய்யாது இருப்பது நற்பலனை உண்டாக்கும். குரு ப்ரீதி, விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

சனிபகவான் தனுசு ராசியில் வக்ர கதியில் 29-04-2020 முதல் 14-09-2020 வரை
ஜென்ம ராசிக்கு 4-ல் சனிபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் ஏற்ற இறக்கமான பலன்களை அடைய முடியும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக் கூடிய பாதிப்புகளால் அடிக்கடி மருத்துவச் செலவுகளை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தடை உண்டாகும். தொழிலாளர்களிடமும் ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகி அபிவிருத்திகள் குறையக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். முடிந்த வரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டு பிரிய நேரிடும். அலைச்சல், டென்ஷன்களும் அதிகரிக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சனிபகவான் தனுசு ராசியில் பூராடம் நட்சத்திரத்தில் 15-09-2020 முதல் 19-11-2020 வரை
சனி பகவான் உங்கள் ராசி அதிபதி புதனுக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் சஞ்சரித்தாலும் சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்திலுள்வர்களிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் எதையும் சமாளிக்க முடியும். கடன்களும் குறையும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிடைக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகளால் வீண் செலவுகள் தோன்றும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கக்கூடிய காலம் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களும் தங்கள் பணிகளில் சற்று கவனமுடனிருப்பது உடன்பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சனிக்கு பரிகாரம் செய்யவும்.

சனிபகவான் தனுசு ராசியில் உத்திராடம் நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 27-12-2020 வரை
சனி பகவான் தனக்கு பகை கிரகமான சூரியனின் நட்சத்திரத்தில் சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 5-ல் குரு, 3-ல் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். மனதில் மகிழ்ச்சி குடிகொள்ளும். திருமணம் போன்ற சுப காரியங்களும் தடபுடலாகக் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். புத்திர பாக்கியமும் சிறப்பாக அமையும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உற்றார் உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். சிலருக்கு சொந்த வீடு கார் போன்றவை வாங்கும் யோகம் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்படச் செயல்பட்டு எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பை
எண் - 5,6,7,8   நிறம் - பச்சை, நீலம்            கிழமை - புதன், சனி

கல்மரகத பச்சை               திசை - வடக்கு          தெய்வம் - ஸ்ரீவிஷ்ணு

No comments: