Thursday, November 16, 2017

sani peyarchi 2017 to 2020 Kadaga rasi

sani peyarchi 2017 to 2020 Kadaga rasi கடகம்  
புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

சாந்தமான குணமும், சகிப்புத்தன்மையும், எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய ஆற்றலும் கொண்ட கடக ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் வாக்கிய கணிதப்படி  19-12-2017 முதல் 27-12-2020 வரை சனி சஞ்சாரம் செய்யவிருப்பதால் உங்கள் பலமும், வலிமையும் கூடும். உங்களுடைய மனக்கவலைகள் எல்லாம் விலகி எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படக் கூடிய அற்புத அமைப்பு ஏற்படும். கணவன்- மனைவி  ஒற்றுமையும் அன்யோன்யமும் அதிகரிக்கும். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடனே செயல்பட முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்பதவிகள் தேடிவரும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும், உடன்பணிபுரிபவர்களின் ஆதரவு களும் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெறுவதால் குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வீர்கள். அசையும், அசையா சொத்துகளில் இருந்த வந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். வீடு, வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். நெருங்கியவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பிரிந்து சென்றவர்களும் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். கூட்டாளி களின் ஒற்றுமையான செயல்பாடுகளால் அபிவிருத்தியும் பெருகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் லாபங்கள் பெருகும். கடன் பிரச்சினைகள் குறையும். 

 சனி 6-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் 5-10-2018 முதல் 28-10-2019 வரை குரு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். பணம் பல வழிகளில் தேடிவரும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும்.  புத்திரபாக்கியம் வேண்டுபவர்களுக்கு புத்திர பாக்கியம் அமையும். பூர்வீக சொத்து வழக்குகளில் இருந்த பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். அதிநவீன பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் அமையும். ராகு- கேது 12-2-2019 வரை 1, 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் குடும்பத்தின் ஒற்றுமை குறையாமலிருக்கும். 13-2-2019 முதல் 1-9-2020 வரை கேது 6-ல், ராகு 12-ல் சஞ்சரிக்க இருப்பதால் எல்லாவகையிலும் முன்னேற்ற பலன்களை அடையமுடியும். 

உடல் ஆரோக்கியம்  

உடல்நிலை அற்புதமாக அமையப்பெற்று உங்கள் பலமும் வலிமையும் கூடும். அவ்வப்போது சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பதால் மருத்துவச் செலவுகள் குறையும். மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெற்று மனநிறைவைத் தரும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

குடும்பம், பொருளாதார நிலை

குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யமான உறவு இருக்கும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். தாராளமான தனவரவுகளால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலம் கிட்டும். உறவினர்களிடையே சுமுகமான நிலை இருக்கும். கடன்கள் குறையும்.

கொடுக்கல்- வாங்கல் 

  பொருளாதார நிலை சிறப்பாக அமையும். பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். கொடுத்த கடன்களும் திருப்தி கரமாக வசூலாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளிலும் தீர்ப்பு சாதக மாக அமையும். கடன்கள் யாவும் குறையும். கொடுத்த வாக்குறுதிகளை சரியான நேரத்தில் காப்பாற்றமுடியும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். 

தொழில், வியாபாரம் 

   தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். சிறுசிறு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளித்து லாபம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் மற்றும் பழைய தொழிலை விரிவுபடுத்தும் நோக்கங்கள் யாவும் வெற்றியைக் கொடுக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் சிறப்பான லாபம் கிடைக்கும்.

உத்தியோகம் 

  உத்தியோகஸ்தர்கள் எதிலும் அனுகூலமானப் பலன்களை அடைவார்கள். கூடுதல் பொறுப்புகளும் வேலைப்பளுவும் சற்று அதிகரித் தாலும் எதையும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்வுகளும், பாராட்டுதல்களும் கிடைக் கும். சிலருக்கு இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு நிம்மதியாக வாழும் அமைப்பு உண்டாகும்.

பெண்கள்

  குடும்ப வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன்- மனைவி உறவு சிறப்பாக அமையும். பொருளாதார நிலை உயர்வாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். வீடு, மனை வாங்கும் யோகம் அமையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். புத்திர பாக்கி யமும் கிட்டும். புத்திரர்களால் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடை பெறும். 

அரசியல் 

  உங்களின் செல்வம், செல்வாக்கு உயரக்கூடிய காலமாகும். பெரிய மனிதர்களின் சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். உங்களின் பேச்சுகளுக்கு ஆதரவு அதிகரிக்கும். பொருளாதார நிலையிலும் உயர் வைச் சந்திப்பீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் யாவற்றிலும் தடையின்றி வெற்றி கிட்டும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச்சிறப்பாக இருக்கும். சந்தையில் விளை பொருளுக்கேற்ற விலை தாராளமாகக் கிடைக்கும். நவீனகரமான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலனைப் பெறமுடியும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பூர்வீக சொத்துகளும் கைக்கு வந்துசேரும். கடந்தகால வம்பு, வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

கலைஞர்கள் 

  எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சம்பளத்தொகைகளும் விரிவடைவ தால் பொருளாதார நிலையும் உயரும். தொழிலில்  ஏற்பட்டிருந்த பிரச்சினைகள், போட்டி, பொறாமைகள் யாவும் படிப்படியாகக் குறையும். வெளியூர், வெளிநாடுகள் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். ரசிகர்களின் ஆதரவு பெருகும்.

மாணவ- மாணவியர் 

   நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், ஞாபகசக்தி போன்றவற்றால் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்க்க முடியும். விளையாட்டுத்துறைகளிலும் வெற்றிமேல் வெற்றிகள் குவியும். பெற்றோர், ஆசிரியர்களின் மற்றும் நல்ல நண்பர்களின் நட்பு நற்பெயரை பெற்றுத்தரும். கல்விக்காக வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 19-12-2017 முதல் 23-4-2018 வரை

  சனி ருண ரோக  ஸ்தானமான 6-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்ப தால் உடல்நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளியூர்,வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். எவ்வளவு கடன்கள் ஏற்பட்டாலும் அவற்றை அடைக்கக்கூடிய ஆற்றலும் ஏற்படும். தொழில், வியாபாரம் லாபமளிப்பதாக அமையும். மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் விலகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். குரு 4-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை அடையமுடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிட்டும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 24-4-2018 முதல் 20-8-2018 வரை

  சனி 6-ல் சஞ்சரித்தாலும் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் சுமாரான நற்பலன்களே உண்டாகும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்ப தால் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதும், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் நற்பலனைத் தரும். குரு 4-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாகத் தடைகள் ஏற்பட லாம். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதிகளைக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். வீடு, வாகனம், போன்றவற்றால் சிறுசிறு விரயங்கள் தோன்றினாலும் எதையும் சமாளித்துவிடுவீர்கள். தொழில், வியாபாரம் ஓரளவுக்கு லாபம் தரும். பெரிய தொகை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்துப் பணியில் கவனம் செலுத்துவது சிறப்பு. அம்பாள், தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 21-8-2018 முதல் 19-1-2019 வரை

  ச னி பகவான் 6-ல் மூல நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உற்றார்- உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சிறுசிறு இடையூறுகள் நிலவினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. கொடுக்கல்-வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பயணங்களால் அனுகூலம், மிகுந்த பலன்கள் உண்டாகும். 4-ல் சஞ்சரித்த குரு 5-10-2018 முதல் பஞ்சம ஸ்தான மான 5-ல் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். உற்றார்-உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். திருமணமாகாதவர்களுக்கு மணமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றி மறையும்.  துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 20-1-2019 முதல் 6-5-2019 வரை

  சனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதும், குரு 5-ல் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப் பாகும். இதனால் பணம் பல வழிகளில் தேடிவரும். சுப காரிய முயற்சி களில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கக்கூடிய அளவிற்கு ஆற்றலும், உடல் நிலையில் முன்னேற்றங்களும் உண்டாகும். அசையும், அசையா சொத்துகளை வாங்குவீர்கள். உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும். தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகஸ்தர் களுக்குப் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும் தடையின்றிக் கிட்டும். 7-ல் சஞ்சரிக்கும் கேது 13-2-2019 முதல் 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் கணவன்-மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் முழுமையாக விலகி அன்யோன்யம் அதிகரிக்கும். சர்ப்ப சாந்தி செய்வது, விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 7-5-2019 முதல் 1-9-2019 வரை

  சனி பகவான் 6-ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். கேது 6-ல் சஞ்சரிப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்லில் பெரிய தொகையை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில், வியாபார ரீதியாக சிறுசிறு தடைகளை எதிர்கொள்ளக்கூடும் என்றாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபங்களும் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ் தர்கள் திறமைக்கேற்ற உயர்வுகளையும் பாராட்டுகளையும் பெறமுடியும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் வேலைப்பளுவும் குறையும். குரு வக்ரகதியில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 2-9-2019 முதல் 28-9-2019 வரை

   சனி மூல நட்சத்திரத்தில் 6-ல் கேதுவின் சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதாலும், குரு 5-ல் சஞ்சரிப்பதாலும் எல்லாவகையிலும் ஏற்றம், செல்வம், செல்வாக்கு உயரக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். பொருளாதார நிலை மிக அற்புதமான அமையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து உறவுக்கரம் நீட்டுவார்கள். தொழில், வியாபார ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். பெரிய ஒப்பந்தங்களில் கையெ ழுத்திடும் வாய்ப்பும் உண்டாகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப் பட்ட உயர்வுகள் தடை விலகி கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் இருக்கும். ராகுவுக்குப் பரிகாரம் செய்வது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 29-9-2019 முதல் 25-2-2020 வரை

  சனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் கேது சேர்க்கை பெற்று 6-ல் சஞ்சரிப்பதும், குரு 5-ல் சஞ்சாரம் செய்வது பொற்காலம் ஆகும். எல்லா வகையிலும் ஏற்றமிகு பலன்கள் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த இடையூறுகள்விலகி நல்ல லாபம் அமையும்.பொன், பொருள் சேரும். உற்றார்- உறவினர்கள் அனுகூலமாக செயல்படு வார்கள். 5-ல் சஞ்சரிக்கும் குரு 29-10-2019 முதல், குரு ருண ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயங்களில் மட்டும் சற்று கவனமாக செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் லாபம் தரும். பெரிய முதலீடுகளில் செய்யும் காரியங்களில் நிதானம் தேவை. உத்தியோ கஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 26-2-2020 முதல் 28-4-2020 வரை

  சனி பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதும், கேது 6-ல் சஞ்சரிப்பதும் சாதக அமைப்பு என்பதால் எல்லாவகையிலும் முன்னேற்ற பலன்களைப் பெறமுடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதையும் சமாளித்துவிட முடியும். பொருளாதார நிலை சிறப் பாக அமையும். குரு, ருண ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதால் சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் நிறைவேறும். கொடுக்கல்-வாங்கலில் கவனமுடன் செல்படுவது நல்லது. பொன் பொருள் சேரும். செய்யும் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகள் நிலவினாலும் பெரிய கெடுதி இல்லை. உடல்நிலையில் சற்று கவனம் செலுத்த நேரிடும். குடும்பத்தில் மகிழ்ச்சி, உற்றார்-உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்குத் தகுந்த பாராட்டுதல்கள் அமையும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 29-4-2020 முதல் 14-9-2020 வரை

ஜென்ம ராசிக்கு 6-ல் சனி பகவான் வக்ரகதியில் சஞ்சரித்தாலும் இக்காலங்களில் எதையும் சமாளித்துவிட முடியும். குரு 6-ல் சஞ்சரிப்ப தால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். உற்றார்- உறவினர்களை சற்று அனுசரித்து நடப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடு களை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய் பவர்கள் சற்று மந்தநிலையை எதிர்கொள்ள நேரிட்டாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. தொழிலாளர்களால் அனுகூலமான பலன்கள் ஏற் படும். கேது 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர் களுக்கு எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் ஏற்படும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 15-9-2020 முதல் 19-11-2020 வரை

  சனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதும், ராகு 11-ல் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப் பாகும். இக்காலங்களில் வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் சற்றுக் குறையும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளைத் தடையின்றி மேற்கொள்ளலாம். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் மேன்மையடையும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து லாபம் பெருகும். புதிய கூட்டாளிகள் சேரு வார்கள். பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஆதாயமும் உண்டு. உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். விநாயகரை வழிபடுவது நல்லது. 

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 27-12-2020 வரை

  சனி பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 6-ல் சஞ்சரிப்பதும், குரு 7-ல் சஞ்சரிப்பதும் சாதக அமைப்பு என்பதால் எல்லாவகையிலும் முன்னேற்ற பலன்களைப் பெறமுடியும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத தனவரவுகளால் குடும்பத்தின் பொருளாதாரம் உயரும். உற்றார்-உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாகச் செயல்படுவார்கள். ஆடை ஆபரணம் சேரும். சிலருக்கு அசையா சொத்து யோகமும் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைவிலகி நல்லவரன்கள் தேடிவரும். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல்- வாங்கலும் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். தொழில், வியாபாரம் நல்லநிலையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். போட்டிகள் குறையும். பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். சேமிக்கவும் முடியும். விநாயகரை வழிபடுவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் : 1, 2, 3, 9, நிறம் : வெள்ளை, சிவப்பு, கிழமை : திங்கள், வியாழன், கல் :  முத்து, திசை : வடகிழக்கு, தெய்வம் : வேங்கடாசலபதி.

No comments: