Thursday, November 2, 2017

sani peyarchi 2017 to 2020 Mithuna rasi

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் 2017-2020



மிதுனம்
மிருகசீரிஷம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, 
புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்

டினமான காரியங்களையும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே! உங்கள் ராசியதிபதி புதனுக்கு நட்பு கிரகமும் உங்கள் ராசிக்கு 8,9-க்கும் அதிபதியான சனி பகவான் சமசப்தம ஸ்தாமான 7-ஆம் வீட்டில் வாக்கிய கணிதப்படி  19-12-2017 முதல் 27-12-2020 வரை சஞ்சாரம் செய்ய உள்ளார். இது அவ்வளவு சாதமான அமைப்பு என்று கூறமுடியாது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.கணவன்-மனைவி இடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உற்றார்-உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்ப டுத்துவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும், சக நண்பர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதும் நற்பலனைத் தரும். நண்பர்களும் விரோதிகளாக மாறுவார்கள். அசையும், அசையா சொத்துகளால் தேவையற்ற செலவுகள் உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் மற்றவர்களுக்கு முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்க்கவும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உத்தியோ கஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சலை சந்திப்பார்கள். 

   சனி 7-ல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குரு பகவான் 2-9-2017 முதல் 4-10-2018 வரை 5-ஆம் வீட்டிலும், 29-10-2019 முதல் 15-11-2020 வரை 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்கவுள்ள காலங்கள் சகலவிதத்திலும் ஏற்றத்தை உண்டாக்கும் காலமாக  இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபகாரியங்கள் எளிதில் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். மணமானவர் களுக்கு புத்திர பாக்கியம் அமையும். பொருளாதார நிலை சிறப்பாக அமைவதால் அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டா கும். உற்றார்-உறவினர்களாலும் அனுகூலங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சி களில் வெற்றி கிட்டும். கொடுக்கல்-வாங்கலில் நல்ல லாபம் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். தெய்வ தரிசனங்களுக்கான பயணங்கள் மேற்கொள்வீர்கள். ராகு-கேது 12-2-2019 வரை 2-லும், பின்பு 13-2-2019 முதல் 1-9-2020 வரை 1, 7-லும்  சஞ்சரிக்க இருப்பதால் உடல் ஆரோக்கி யத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். 

உடல்ஆரோக்கியம்  

  உடல்நிலையில் அடிக்கடி சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் செயல் படுவது நல்லது. மனைவி, மக்களுக்கும் உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலை உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் உண்டாகும். குடும்பத்தில் உண்டாகும் பிரச்சினைகள் மனக்குழப்பத்தை ஏற்படுத்தும் என்றாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது.

குடும்பம், பொருளாதாரநிலை 

  பொருளாதார நிலை திருப்தியளிப்பதாகவே இருக்கும். உற்றார்- உறவினர்களிடையே விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. அசையும், அசையா சொத்துகளை வாங்கும் வாய்ப்பு அமையும். திருமண சுப காரியங்கள் கைகூடும். கணவன்-மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. புத்திர பாக்கியம் உண்டாகும். பொன், பொருள் சேரும். 

கொடுக்கல்- வாங்கல்

  கமிஷன் ஏஜென்ஸி, கான்ட்ராக்ட் போன்றவற்றில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகையை பிறருக்குக் கடனாகக் கொடுக்கும்போது சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவிஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப் பதைத் தவிர்ப்பது மிகவும் உத்தமம்.

தொழில், வியாபாரம் 

   தொழில், வியாபாரம் நல்லமுறையில் நடைபெறும். நவீன தொழில் நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி உயர்வினை சந்திப்பீர்கள். கூட்டாளி களை மிகவும் அனுசரித்துச் செல்ல வேண்டியிருக்கும். வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் ஓரளவுக்கு முனனேற்றமானப் பலன்கள் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது மிகவும் கவனம் தேவை.

உத்தியோகம் 

உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெற்றாலும் வேலைப்பளு அதிகரிப்பதால் அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். திறமைக்கேற்ற பாராட்டுதல்களும், அதிகாரிகளின் ஆதரவுகளும் மனமகிழ்ச்சியை உண்டாக்கும். வெளிநாடு சென்று பணிபுரிய விரும்பு பவர்களுக்கு சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். புதிய வேலை வாய்ப்பு தகுதிக்கேற்றபடி அமையும்.

பெண்கள்

  கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். மணமாகாத மங்கையருக்கு சில தடைகளுக்குப்பின் சுபகாரியம் நடந்தேறும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை திருப்தி யளிக்கும். பொன், பொருள் ஆடை ஆபரணம் சேரும். புதிய பொருட் சேர்க்கைகளும் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். தேவை யற்ற செலவுகளைக் குறைத்துக் கொள்வது உத்தமம்.

அரசியல்    

   அரசியலில் சிறுசிறு சோதனைகளை சந்தித்தாலும் பதவிக்கு பங்கம் வராது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதால் மக்களின் ஆதரவு சிறப்பாகவே அமையும். மேடைப் பேச்சுகளில் சற்று கவனமுடன் இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலைகள் உருவாகி அலைச்சல் அதிகரிக்கும். 

விவசாயிகள்

  பயிர் விளைச்சல் சுமாராக இருக்கும். உழைப்புக்கேற்ற பலனைப்பெற சற்று எதிர்நீச்சல் போடவேண்டி வரும். பணவரவுகளும் சுமாராகத் தானிருக்கும். புதிய பூமி, மனை போன்றவற்றால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். கால்நடைகளை வாங்குவீர்கள். உற்றார்-உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. 

கலைஞர்கள் 

  தொழில் ரீதியாக சில போட்டிகளை சந்தித்தாலும் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடைப்படாது. எதிர்பார்க்கும் வாய்ப்பு களுக்காகக் காத்திருக்காமல் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. வெளிநாட்டுப் பயணங்களால் சற்றே அலைச்சல்கள் ஏற்பட் டாலும் பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ள முடியும். மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும்.

மாணவ- மாணவியர்

  கல்வியில் முழுஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும். முடிந்தவரை தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போடவேண்டி யிருக்கும். அரசுவழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் தாமதப்படும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 19-12-2017 முதல் 23-4-2018 வரை

  சனி பகவான் 7-ல் கேதுவின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் 2,8-ல் ராகு- கேது சஞ்சரிப்பதாலும் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது, கணவன்- மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உடல்நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் உள்ளவர் களால் சிறுசிறு மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும் என் றாலும், குரு 5-ல் சஞ்சரிப்பதால் திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். புத்திரவழியில் பூரிப்பு உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் நடைபெறும். தொழில், வியாபார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது சிறப்பு. வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிட்டும். துர்க்கை,விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 24-4-2018 முதல் 20-8-2018 வரை

  சனி 7-ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் குரு 5-ல் சஞ்சரிப்பதாலும் இக்காலங்களில் எல்லாவகையிலும் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியைக் கொடுக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். பணவரவுகள் தாராளமாக அமைவதால் கொடுத்த வாக் குறுதிகளைக் காப்பாற்ற முடியும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். சுப காரியங்கள் கைகூடும். வெளிவட்டாரத் தொடர்புகளால் அனுகூலம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் கனவுகள் நினைவாகும். 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் வீண்மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். விநாயகரை வழிபடுவது மிகவும் உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 21-8-2018 முதல் 19-1-2019 வரை

  சனி 7-ல் கேதுவின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், இக்காலங்களில் 4-10-2018 வரை குரு 5-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமான பலன்களே அமையும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பண வரவுகள் தாராளமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கடன்கள் படிப்படியாகக் குறையும். சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். வெளிநாடுகள் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிடைக்கும். 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதால் 5-10-2018 முதல், குரு 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவு களில் நெருக்கடிகள் ஏற்படும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகையை குரு மாற்றத்திற்குப் பிறகு ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. குடும்பத்திலுள்ள வர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சனி பகவானுக்குப் பரிகாரம் செய்வது மிகவும் உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 20-1-2019 முதல் 6-5-2019 வரை

  சனி தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரமான பூராடத்தில் 7-லும், குரு 6-லும் சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பாகும். உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகள் எற்படும். எதிர் பாராத வீண்செலவுகள் உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் சற்று நிதான முடன் செயல்படுவது உத்தமம். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை நிலவி னாலும் முதலீட்டிற்கு பங்கம் ஏற்படாது. பூர்வீக சொத்து விஷயங்களி லுள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். 2,8-ல் சஞ்சரிக்கும் ராகு- கேது 13-2-2019 முதல், ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்ப தால் குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றும். நெருங்கியவர் களை அனுசரித்து நடப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல் குறையும். கணவன்- மனைவியிடையே உண்டாகக்கூடிய பிரச்சினைகளால் குடும்பத்தில் நிம் மதிக்குறைவு உண்டாகும். குரு, சனிக்குப் பரிகாரங்கள் செய்வது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 7-5-2019 முதல் 1-9-2019 வரை

  சனி 7-ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், குரு 6-ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் பொருளாதார நிலை ஓரளவுக்குத் திருப்தியளிக்கும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஏற்படும் போட்டிகளை சமாளிக்கக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். உடல்நிலையில் சற்று கவனம் செலுத்துவது சிறப்பு. திருமண சுப காரியங்கள் கைகூடும். பணவிஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்க்கவும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்ப தால் நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது சாதகப் பலனைத் தரும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது உத்தமம். உத்தியோ கஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். கௌரவப் பதவிகளால் அதிகநேரம் உழைக்க நேரிடும். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை ஏற்பட்டாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. ராகு-கேதுவுக்குப் பரிகாரம் செய்வது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 2-9-2019 முதல் 28-9-2019 வரை

  சனி பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் 7-ல் சஞ்சரிப்பதாலும், ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதாலும் வாழ்க்கை வண்டிச் சக்கரம்போல நன்மை தீமைகள் கலந்ததாகவே இருக்கும். உடல் ஆரோக் கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்திலுள்ள வர்களிடம் விட்டுக்கொடுத்து நடப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப் பிடிப்பது சிறப்பு. எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவதற்குமுன் சற்று நிதானித்து, சிந்தித்துச் செயல்படுவது நல்லது. ஆண்டுக்கோளான குரு ருணரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சுமாராக இருக்கும். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சற்றே மந்தநிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. உத்தியோ கஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உடன்பணிபுரிபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தினமும் விநாயகரை வழிபடவும்.  

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 29-9-2019 முதல் 25-2-2020 வரை

  சனி பூராட நட்சத்திரத்தில் 7-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. சுபகாரிய முயற்சிகள் தடையுடன் நிறைவேறும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைப்பெற்றாலும் போட்டிகளை சமாளிக்க வேண்டியிருக்கும். அசையும், அசையா சொத்து களால் வீண்செலவுகள் உண்டாகும். வெளிநாட்டுப் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அதன்மூலம் அனுகூலமான பலன்களும் கிட்டும். 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு 29-10-2019 முதல், 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால்  பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை பலப் படும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. குலதெய்வ வழிபாடு செய்வது குடும்பத்திற்கு நல்லது.

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 26-2-2020 முதல் 28-4-2020 வரை

  சனி சூரியனின் நட்சத்திரத்தில் 7-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் குரு 7-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் இக்காலங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள், பொருளாதார ரீதியாக மேன்மைகள் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும்.உற்றார்-உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழில், வியாபாரத்தில் கடந்த காலங்களில் இருந்த சோதனைகள் அனைத்தும் விலகி அபிவிருத்தியும் லாபமும் பெருகும். உத்தியோகஸ்தர் களுக்குப் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளும் தடையின்றிக் கிட்டும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்து ழைப்புகளால் வேலைப்பளு குறையும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் உடல்நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டிவரும். கணவன்-மனைவி இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. ராகு-கேதுவுக்குப் பரிகாரம் செய்வது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 29-4-2020 முதல் 14-9-2020 வரை

ஜென்ம ராசிக்கு 7-ல் சஞ்சரிக்கும் சனி பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் அற்புதமான நற்பலன்களையே பெறுவீர்கள். குருவும் 7-ல் சஞ்சரிப்பதால் செய்யும் தொழில், வியாபாரத்தில் மேன்மைகளும் கூட்டாளிகளால் லாபங்களும் உண்டாகும். புதிய நவீன கருவிகளை வாங்குவீர்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் அனுகூ லங்கள் ஏற்படும். பணம் தாராளமாக வருவதால் கொடுக்கல்-வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றிக் கிடைக்கும். தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக் கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களும் தடபுடலாக நடந்தேறும். உத்தியோ கஸ்தர்கள் பணியில் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற்று முன்னேறமுடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிக்கும். கடன்களும் குறையும். துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 15-9-2020 முதல் 19-11-2020 வரை

  சனி சுக்கிரனின் நட்சத்திரத்தில் 7-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், குரு 7-ல் சாதகமாக சஞ்சரிப்பதாலும், கேது 6-ல் சஞ்சாரம் செய்வதாலும் இக்காலங்களில் உடல்நிலை அற்புதமாக அமையும். குடும்பத்திலுள்ளவர்களால் ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறையும். கணவன்-மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். திருமண சுபகாரியங்களுக் கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதாரம் உயர்வடையும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்-வாங்கல் நல்லநிலையில் நடைபெற்று லாபம் பெருகும். விரோதிகளும் நண்பர்களாகச் செயல்படுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களும் சாதகமாக மாறுவார்கள். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். கடன்கள் குறையும். பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த ஊதிய உயர்வு, உத்தியோக உயர்வு போன்ற யாவும் கிடைக்கும். 

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 27-12-2020 வரை

  சனி சூரியனின் நட்சத்திரத்தில் 7-ல் சஞ்சரிப்பதும், குரு 8-ல் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்றாலும், கேது 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத தனவரவுகள் ஏற்படுவதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். எடுக்கும் எந்தவொரு காரியத் திலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். உடல் ஆரோக் கியத்திலும் பாதிப்புகள் ஏற்படுவதால் மருத்துவச் செலவுகளை எதிர் கொள்ள வேண்டிவரும். குடும்பத்திலுள்ளவர்களாலும் வீண்விரயங்கள் ஏற்படும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்து, உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நல்ல அனுகூலங்களைப் பெறமுடியும். தொழில், வியாபாரம் ஓரளவுக்கு முன்னேற்றமளிப்பதாக இருந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனம் தேவை. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது. 

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் : 5, 6, 8,      நிறம் : பச்சை, வெள்ளை, கிழமை : புதன், வெள்ளி, கல் : மரகதம், திசை : வடக்கு, தெய்வம் : விஷ்ணு. 

Post a Comment

Intha Naal