Sunday, December 3, 2017

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் 2017-2020 மீனம் சனிப் பெயர்ச்சிப் பலன்கள்   மீனம்  
 பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி 

கனிந்த பார்வையும், மலர்ந்த முகமும், கம்பீரமானத் தோற்றமும் கொண்ட மீன ராசி அன்பர்களே! இதுவரை உங்கள் ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்த சனி பகவான் வாக்கியப்படி  19-12-2017 முதல் 27-12-2020 வரை ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. இதனால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற எதிர்ப்புகள் மற்றும் போட்டி பொறாமைகளால் லாபங்கள் குறையும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பற்ற நிலைகளால் மந்த நிலை நிலவுவதோடு அபிவிருத்திக் குறையக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும் நல்ல பெயரை எடுக்கமுடியாது. பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க நேரிடும். உடன்பணிபுரிபவர் களால் வேலைப்பளு அதிகரித்து நீண்ட நேரம் உழைக்க வேண்டி யிருக்கும். இதனால் உடல்நிலை சோர்வடையும். புதிய வேலை தேடு பவர்கள் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேற தாமதம் ஏற்படும். 

சனி ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உங்கள் ராசியதிபதி குரு பகவான் 5-10-2018 முதல் 28-10-2019 வரை பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இக்காலங்களில் உங்களுக்கு பொருளாதார ரீதியாக மேன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். தடைப்பட்டத் திருமண சுப காரியங்கள் கைகூடும். நல்லவரன்கள் தேடிவரும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். நெருங்கியவர்களின் ஆதரவு கிட்டும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில், வியாபாரத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். நல்ல லாபம் கிட்டும். தற்போது 5,11-ல் சஞ்ரிக்கும் ராகு, கேது  13-2-2019 முதல் 1-9-2020 வரை 4,10-ல் சஞ்சரிக்க இருப்பதால் இக்காலங்களில் தேவையற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். 
உடல் ஆரோக்கியம் 

  உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத நிலை உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களுக்கும் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும் என்றாலும் எடுக்கும் காரியங்களில் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றிகளைப் பெறுவீர்கள். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் ஓரளவுக்கு எதையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள்.

குடும்பம், பொருளாதாரநிலை 

குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண் டால் அனுகூலமான நற்பலனைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை ஓரளவுக்குத் திருப்திளிப்பதாகவே அமையும். திருமண சுபகாரியங்களுக் கான முயற்சிகளில் வெற்றி கிட்டும்.  குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டால் சேமிக்கமுடியும். 

கொடுக்கல்- வாங்கல்

  பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படக்கூடியக்காலம் என்பதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பவர்கள் பெரிய தொகை ஈடுபடுத்தும்போது மிகவும் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே லாபம் அடையமுடியும். உங்களுக்கு தேவையற்ற வம்பு, வழக்குகளும் அதிகரிக்கும். எதிலும் கவனமுடனிருப்பது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். 

தொழில், வியாபாரம் 

  செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப்போகும். இதனால் அபிவிருத்தி குறைந்து பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்படும். தொழிலாளர்களும் வீண்பிரச்சினைகளை ஏற்படுத்துவதால் மனசஞ் சலங்கள் உண்டாகும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப் படும். வங்கிக் கடன்களை செலுத்த முடியாத அளவிற்கு லாபம் குறையும். 

உத்தியோகம் 

  உத்தியோகஸ்தர்கள் பணியில் முழுமனநிறைவற்ற நிலை உண்டாகும். பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் சேர்த்தே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். உடல்நிலையில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். உயரதி காரிகள் செய்யும் கெடுபிடிகளால் மனநிலையில் நிம்மதிக்குறைவு ஏற்படும். நீண்டநாட்களாக கிடைக்காமலிருந்த நிலுவைத்தொகைகளும் கைக்குக் கிடைக்கப்பெறும்.

பெண்கள்

நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் சில தடைகளை சந்திக்க நேரி டும். உடல்நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மருத்துவச் செல வுகள் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளால் சேமிப்பு குறையும். பணிபுரியும் பெண்கள் உத்தியோகத்தில் நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். பேச்சில் கவனம் தேவை. 

அரசியல்

அரசியல்வாதிகளின் பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடனிருப்பவர்களே துரோகம் செய்ய எண்ணுவார்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றினால் மட்டுமே அவர்களின் ஆதரவுடன் பதவியைத் தக்கவைத்துக் கொள்ளமுடியும். எதிர்பார்க்கும் மாண்புமிகு பதவிகள் தாமதப்படும். கட்சிப் பணிகளுக்காக அதிகம் செலவுகள் செய்ய நேரிடும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

விவசாயிகள்

 விவசாயிகளுக்கு விளைச்சல்கள் சுமாராக இருக்கும். சந்தையில் விளைபொருட்களுக்கு ஏற்ற விலை எதிர்பார்த்தபடி கிடைக்கப் பெறுவதால் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமும் சந்தோஷமும் நிறைந்திருக்கும். அரசுவழியில் வரவிருந்த மானிய உதவிகளும் தாமதப்படும். சேமிப்பு குறையும். 

கலைஞர்கள்

வரவேண்டிய வாய்ப்புகள் போட்டிகளால் கைநழுவிப்போகும். கையிலிருக்கும் வாய்ப்புகளை சரியாகப் பார்த்துக்கொள்வது நல்லது. நினைத்த கதாபாத்திரத்திரங்களில் நடிக்க முடியாது. பொருளாதார நிலையிலும் இடையூறுகள் நிலவுவதால் சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு ஏற்படும். சக நடிகர்களுடன் கவனமுடன் பழகுவது நல்லது.

மாணவ- மாணவியர்

  நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள்.அரசுவழியில் வரவேண்டிய உதவிகள் தாமதப்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் தேடிவரும். உடன்பழகும் நண்பர்களால் சிறுசிறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும் என் பதால் கவனம் தேவை. பயணங்களின்போது வேகத்தைக் குறைப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் கவனமுடனிருக்கவும்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 19-12-2017 முதல் 23-4-2018 வரை

  சனி பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதால் நன்மை தீமை கலந்த பலன்களை அடையமுடியும். இதுமட்டுமன்றி குரு பகவானும் ஜென்ம ராசிக்கு 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் மற்றும் அசையா சொத்துவகையில் வீண் செலவுகளை சந்திக்க நேரிடும். உற்றார் -உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும் என்றாலும் 11-ல் கேது சஞ்சரிப்பதால் உங்கள் திறமையால் எதையும் சமாளித்து ஏற்றங்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் வீண்செலவுகளைத் தவிர்த்தால் மட்டுமே சேமிக்கமுடியும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிப்பதால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப்போகும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 24-4-2018 முதல் 20-8-2018 வரை

  சனி பகவான் இக்காலங்களில் தொழில் ஸ்தானமான 10-ல் சஞ்சரித்தாலும் வக்ரகதியில் இருப்பதால் தொழில், வியாபார ரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் ஏற்படும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.  உத்தியேகஸ்தர்களுக்கும் பணியில் இருந்த நெருக் கடிகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். கணவன்-மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குரு 8-ல் சஞ்சரித்தாலும் 4-7-2018 வரை  வக்ரகதியில் இருப்பதால் பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் நடைபெறும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகி குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தடபுடலாக நடைபெறும். கடன்கள் ஓரளவுக்குக் குறைவதால் சேமிக்க முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம். 

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 21-8-2018 முதல் 19-1-2019 வரை

 சனி பகவான் கேது நட்சத்திரமான மூலத்தில் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத இடமாற்றங்களை சந்திக்க நேரிடும். பணியில் ஒரு நிம்மதியற்ற நிலை ஏற்படும். வேலைப்பளு அதிகரிப்பதால் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடும். 8-ல் சஞ்சரிக்கும் குரு 5-10-2018 முதல், பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் பிரச்சினைகள் அனைத்தும் மறைந்து குடும்பத்தில் சுபகாரியங்கள் கை கூடும். பொருளாதார நிலையிலிருந்த தடைகள் விலகும். செல்வம், செல் வாக்கு உயரக்கூடிய யோகம் உண்டாகும்.புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். தொழில், வியாபாரத்திலிருந்த பிரச்சினைகள் விலகி முன்னேற்றமான நிலை உண்டாகும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 20-1-2019 முதல் 6-5-2019 வரை

  சனி பகவான் சுக்கிரன் நட்சத்திரமான பூராடத்தில் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் குரு 9-ல் சஞ்சரிப்பதால் இருந்து வந்த தேவையற்ற பிரச்சினைகள் அனைத்தும் விலகி எல்லா வகையிலும் மேன்மையான பலன்களை அடை வீர்கள். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் கைகூடும். மங்களகரமான நிகழ்ச்சிகள் நிறைவேறி குடும்பத்தில் மனநிறைவை உண்டாக்கும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிலவும். வீடு,மனை, வாகனம் வாங்கும் யோகம் அமையும். பொன்பொருள் சேரும். கொடுக்கல்-வாங்கல் சரளமாக அமையும். எதிபாராத திடீர் தனவரவுகள் ஏற்பட்டு செல்வம், செல்வாக்கும் உயரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை ஏற்படும். போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் குறையும். கூட்டாளி களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். துர்க்கையம்மனை வழிபடுவது மன நிறைவைத் தரும். 

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 7-5-2019 முதல் 1-9-2019 வரை

  ஜென்ம ராசிக்கு 10-ல் சனி பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். குருவும் சாதகமாக 9-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்களும் தடபுடலாக நடந்தேறும். உற்றார்- உறவினர்களால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாக்கும். உடல்நிலை அற்பதமாக அமைந்து எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும்.எதிர்பாராத வகையில் பணவரவுகள் கிடைக்கும். நீண்ட நாள் கனவுகள் அனைத்தும் நிறைவேறி மகிழ்ச்சி அளிக்கும். செல்வம், செல்வாக்கு உயரும். வெளிநாட்டுத் தொடர்புகளும் கிட்டும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும், அபிவிருத்தியும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் திருப்தியான நிலை இருக்கும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 2-9-2019 முதல் 28-9-2019 வரை

  சனி பகவான் மூல நட்சத்திரத்தில் சர்ப்பகிரகமான கேதுவின் சேர்க்கை பெற்று ஜீவன ஸ்தானமான 10-ல் சாதகமற்று சஞ்சரித்தாலும் ராசியதிபதி குரு பாக்கிய ஸ்தானமான 9-ல் வலுவாக சஞ்சரிப்பதால் உங்களுக்கு வெற்றிமேல் வெற்றிகளை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடை பெறும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திரவழியில் பூரிப்பு உண்டாகும். செல்வம், செல்வாக்கு பெருகும். வீடு, மனை வாங்கும் யோகம் அமையும். நினைத்த காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். உத்தியோ கஸ்தர்கள் சிறுசிறு தடைக்குப் பின் உயர்வுகளைப் பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் நிதானமாக செயல்பட்டால் ஏற்றங்களைப் பெறலாம். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 29-9-2019 முதல் 25-2-2020 வரை

  சனி பகவான் சுக்கிரனின் நட்சத்திரமான பூராடத்தில் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரித்தாலும் குரு 9-ல் இருப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். திருமண சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடி மகிழ்ச்சியளிக்கும். சொந்த வீடு, பூமி, மனை யாவும் வாங்கும் பாக்கியம் உண்டாகும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். உத்தியோக ரீதியாக உயர்வுகள் அமையும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வர்களால் லாபம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோக ரீதியாக உயர்வுகள் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் அதிகரிக்கும். புத்திரபாக்கியம் உண்டாவதற்கான வாய்ப்புகள் அமையும். பொருளாதார நிலை சிறப்பாக அமையும். 29-10-2019 முதல், குரு 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரம், உத்தியோகம் செய்பவர்கள் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. நவகிரக சாந்தி செய்வது உத்தமம். 

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 26-2-2020 முதல் 28-4-2020 வரை

  சனி பகவான் தனக்கு பகை கிரகமான சூரியனின் நட்சத்திரமான உத்திராடத்தில் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் குரு, கேது சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் நன்மை தீமை கலந்த பலன்களையே பெறமுடியும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளை சந்தித்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவதன்மூலம் வீண் விரயங்களை குறையும். தொழில், வியாபாரம் செய்கின்றவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகக்கூடும். அசையா சொத்து வகையில் வீண் செலவுகள் ஏற்படும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப் படையும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 29-4-2020 முதல் 14-9-2020 வரை

 சனி பகவான் ஜென்ம ராசிக்கு 10-ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலையினை அடைய முடியும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். தொழிலாளர்களின் ஒத்து ழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் மன  நிம்மதியுடன் செயல்படமுடியும். எதிர்பார்த்துக் காத்திருந்த ஊதிய உயர்வு, இடமாற்றம் போன்றவையும் கிடைக்கப் பெறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்திலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடை பெறும். கணவன்- மனைவி ஒற்றுமை நிலவும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கடன்கள் நிவர்த்தியாகும். பூர்வீக சொத்துகளாலும் லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். ராகு-கேதுவுக்குப் பரிகாரம் செய்வது நல்லது.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 15-9-2020 முதல் 19-11-2020 வரை

  சனி பகவான் சுக்கிரன் நட்சத்திரமான பூராடத்தில் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பது சுமாரான அமைப்பு என்றாலும் ராகு முயற்சி ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்தால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியும் லாபமும் கிட்டும். தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் யாவும் தடைவிலகி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் பாதிக்காது. சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் லாபம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடிவரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இட மாற்றங்களை அடையமுடியும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகளால் வெளிவட்டாரம் விரிவடையும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 27-12-2020 வரை

 சனி பகவான் தனக்கு பகை கிரகமான சூரியனின் நட்சத்திரமான உத்திராடத்தில் ஜென்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 11-ல் குரு, 3-ல் ராகு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன்கள் நிவர்த்தியாகும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடித்தால் வீண்பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். கொடுக்கல்-வாங்கலும் சரளமாக நடைபெறும். மணமாகாதவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். புத்திரவழியில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளும் சற்று அனுகூலமாகச் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களும் வேலைப்பளுவும் குறையும். சனிக்குப் பரிகாரம் செய்யவும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் : 1, 2, 3, 9, கிழமை : வியாழன், ஞாயிறு, திசை : வடகிழக்கு   கல் : புஷ்ப ராகம், நிறம் : மஞ்சள், சிவப்பு, தெய்வம் :  தட்சிணாமூர்த்தி.

No comments: