Sunday, December 3, 2017

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் 2017-2020 கும்பம்அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்

உயர்ந்த பண்பும், பொறுமையும், பிறர் விஷயங்களில் அத்துமீறித் தலையிடாத நற்குணமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே! இதுவரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து தொழில், உத்தியோக ரீதியாக தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவந்த உங்கள் ராசியதிபதி சனி பகவான் வாக்கியப்படி  19-12-2017 முதல் 27-12-2020 வரை உங்கள் ராசிக்கு லாபஸ் தானமான 11-ல் சஞ்சரிக்க உள்ளதால் இதுவரை உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் அனைத்தும் பகலவனைக் கண்ட பனிபோல விலகிவிடும். உங்களது செல்வம், செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை நிலவும். தொழில், வியாபாரத்திலிருந்த பிரச்சினைகள் அனைத்தும்விலகி தொட்டதெல்லாம் லாபத்தையே கொடுக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது பொன்னான காலமாகும். உத்தியோகஸ்தர்களின் கனவுகள் அனைத்தும் நினவாகும். எதிர்பார்த்த உயர்வுகளையும், இட மாற்றங்களையும் தடையின்றிப் பெறமுடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் உடனிருக்கும் ஊழியர்களின் ஒத்துழைப்புகளும் வேலைப் பளுவைக் குறைக்கும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். 

   சனி சாதகமாக சஞ்சரிக்கும் இக்காலங்களில் சர்ப்ப கிரகமான ராகு 12-2-2019 வரை 6-லும், 13-2-2019 முதல் 1-9-2020 வரை கேது லாபஸ்தானத்திலும் சஞ்சரிக்க இருப்பதும், குரு பகவான் 4-10-2018 வரை பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டிலும், 29-10-2019 முதல் 15-11-2020 வரை லாபஸ்தானமான 11-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். கடன்கள் அனைத்தும் படிப்படியாகக் குறையும்.சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். புரிந்துகொள்ளாமல் பிரிந்துசென்ற உறவினர்களும் தேடிவந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். அசையும், அசையா சொத்துகளையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். தீர்ப்பும் உங்களுக்கு சாதகமாகவே அமையும்.  கொடுக்கல்-வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய முதலீடு களை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலமான பலனைப் பெறமுடியும். பெயர், புகழ் அனைத்தும் உயரும்.

உடல் ஆரோக்கியம்   

    உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். புதுத்தெம்பும் உற்சாகமும் ஏற்படும்.  நீண்ட நாட்களாக மருத்துவச் சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் மருத்துவச் செலவுகள் குறையக்கூடிய வாய்ப்பு உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்கள் சுபிட்சமாக இருப்பார்கள். எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். மங்களகரமான காரியங்கள் நடைபெற்று உங்களின் கடமைகளை நிறைவேற்றிய திருப்தி ஏற்படும்.

குடும்பம், பொருளாதார நிலை 

குடும்பத்தில் சுபிட்சமும், லஷ்மி கடாட்சமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நடந்தேறும். பொருளாதார நிலை திருப்தி கரமாக அமைந்து வீடு, மனை,வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பொன் பொருள், ஆடை ஆபரணம் சேரும்.

கொடுக்கல்- வாங்கல்

  கொடுக்கல்-வாங்கலில் கடந்த காலங்களிலிருந்த பிரச்சினைகள் விலகும். பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காணலாம். கொடுத்த கடன்களும் வீடு தேடிவரும்.  விரோதிகளும் நண்பர்கள் ஆவார்கள். நல்ல நட்புகளால் நற்பலன் அமையும். எதிர்பாராத தனவரவு களும் உண்டாகும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். பங்காளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதால் பெரிய மனிதர்களின் நட்புக் கிட்டும்.

தொழில், வியாபாரம் 

  தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மையடையும். கூட்டாளி களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புதிய தொழில் தொடங்க, பெரிய தொகை ஈடுபடுத்தி அபிவிருத்திச் செய்ய அற்புதமான காலமாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளும் லாபத்தை ஏற்படுத்தும். முதலாளி -தொழிலாளி இடையே உள்ள உறவு திருப்தி கரமாக அமைந்து மேன்மேலும் முன்னேற்றத்தை உண்டாக்கும்.

உத்தியோகம் 

  உத்தியோகஸ்தர்களுக்குச் செய்யும் பணியில் திருப்தியான நிலை இருக்கும். அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். திறமைக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப்பெறும். எதிர்பார்க்கும் பதவி மற்றும் ஊதிய உயர்வுகளும் கிட்டும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பினைப் பெற்று உயர்வடைவார்கள்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்கு அழகான புத்திர பாக்கியமும் கிட்டும். பொன், பொருள், ஆடை ஆபரணம் யாவும் சேரும். பணவரவுகள் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பணிபுரிபவர் களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். நெருங்கியவர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். 

அரசியல் 

  பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். அவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை தடை யின்றிக் காப்பாற்ற முடியும். கட்சிப் பணிகளை சிறப்பாகச் செய்யமுடியும். கட்சி ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் எந்த வித பிரச்சினைகளும் இன்றி சாதனை செய்வீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். 

விவசாயிகள்

 பயிர் விளைச்சல் மிகச்சிறப்பாக இருக்கும். விளைப்பொருளுக்கு சற்று கூடுதலான விலை சந்தையில் கிடைக்கும். தாராள தனவரவுகளால் நவீன யுக்திகளைக் கையாளமுடியும். அரசுவழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் கிடைக்கும். வீடு, மனை, புதிய நிலம் போன்றவற்றையும் வாங்கிச் சேர்ப்பீர்கள். கடன்கள் குறையும்.

கலைஞர்கள் 

  புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத்தட்டும். எதிர்பார்க்கும் கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று உங்கள் கனவுகள் நனவாகும். நினைத்த அளவிற்கு உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் நடித்த படங்களும் வசூலை வாரி வழங்குவதால் ரசிகர்களின் ஆதரவு பெருகும். பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். ஆடம்பரக் கார், பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள். சின்னத்திரையில் இருப்பவர்களாலும் ஜொலிக்கமுடியும். 

மாணவ - மாணவியர்

  கல்வியில் பல சாதனைகளைச் செய்யமுடியும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி, கல்லூரிக்குப் பெருமை சேர்ப்பீர்கள். அரசுவழியில் கிடைக்கப்பெறும் உதவிகள் தக்கசமயத்தில் உதவும். விளையாட்டுப்போட்டிகளிலும் பரிசுகளையும் பாராட்டுதல் களையும் பெறமுடியும். நல்ல நட்புகளால் நற்பலன்கள் தேடி வரும். ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிக்கும்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 19-12-2017 முதல் 23-4-2018 வரை

  சனி பகவான் மூல நட்சத்திரத்தில் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், 6-ல் ராகு, 9-ல் குரு சஞ்சரிப்பதும் மிக அற்புதமான அமைப்பாகும். பணவரவுகள் மிகச்சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளைத் தற்போது மேற்கொள்ள முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். அழகான குழந்தை பாக்கியமும் கிட்டும். பணம் கொடுக்கல்-வாங்கலிலும் பெரிய தொகை ஈடுபடுத்தமுடியும். கடன்கள் குறையும். பொன், பொருள் சேரும். பூர்வீக சொத்துகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்படச் செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேர முடியும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 24-4-2018 முதல் 20-8-2018 வரை

  சனி பகவான் லாப ஸ்தானத்தில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின்பே வெற்றி பெறமுடியும். 6-ல் ராகு சஞ்சரிப்பதும், 9-ல் குரு சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் பணவரவுகள் திருப்தியளிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்தநிலை ஏற்பட்டாலும் பொருட்தேக்கம் உண்டாகாது. எந்த பிரச்சினைகளையும் எளிதில் எதிர்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலையே இருக்கும். திறமைக்கு பாராட்டுதல்கள் கிடைக்கும்.  எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் முன்னேற்றம் உண்டாகும். சனிப்ரீதியாக விநாயகரை வழிபடுவது சிறப்பு.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 21-8-2018 முதல் 19-1-2019 வரை

  ராசியதிபதி சனி பகவான் மூல நட்சத்திரத்தில் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், 6-ல் ராகு சஞ்சாரம் செய்வதும் அனுகூல மான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை திருப்தியளிப்பதாக அமையும். தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யமுடியும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும். பொன் பொருள் சேரும். புத்திரர்கள் அனுகூலமாக இருப்பார்கள். அசையா சொத்து வகையில் லாபம் அமையும். உற்றார் -உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாகச் செயல்படு வார்கள். 9-ல் சஞ்சரிக்கும் குரு 5-10-2018 முதல் 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட்தேக்கம் உண்டாகாது. உத்தியோகஸ்தர்கள் பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப் பிடிப்பது நல்லது. விநாயகரை வழிபடுவது உயர்வைத் தரும்.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 20-1-2019 முதல் 6-5-2019 வரை

  உங்கள் ராசியாதிபதி சனி பகவான் சுக்கிரனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் தொழில், வியாபாரத்திலிருந்த தடைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். நண்பர்கள் மற்றும் தொழிலாளர்கள் மிகவும் அனுகூலமாக அமை வார்கள். பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. சுபகாரியங்கள் தடை களுக்குப் பின்பு கைகூடி மகிழ்ச்சியளிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை நிலவும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். உடல்நிலையில் மிகச்சிறப்பாக அமையும். 13-2-2019 முதல், கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதால் எல்லாவகையிலும் லாபம் கிட்டும். தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்கள் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும். குரு 10-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, உத்தியோகஸ்தர்கள் பணியில் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 7-5-2019 முதல் 1-9-2019 வரை

  11-ல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் உடல்நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவைத் தடையின்றிப் பெறமுடியும். பணவரவுகள் திருப்திகரமாக இருந்தாலும் 10-ல் குரு இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமதம் உண்டாகும். தொழில், வியாபார ரீதியாக ஏற்படும் பயணங்களால் அலைச்சல் அதிகரித் தாலும் அதன்மூலம் ஓரளவுக்கு நற்பலனும் அமையும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பைப் பெற சில சிரமங்களை அடைய நேரிடும். உத்தியோ கஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிவரும் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்வீர்கள். ஆஞ்சநேயரை வழிபடுவது மிகவும் உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 2-9-2019 முதல் 28-9-2019 வரை

  சனி பகவான் சர்ப்ப கிரகமான கேதுவின் சேர்க்கை பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிமேல் வெற்றியினைப் பெறுவீர்கள். குடும்பத்தில்  சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பொருளாதார நிலையிலிருந்த தடைகள் விலகும். உற்றார்- உறவினர்களிடையே இருந்த பிரச்சினைகள் விலகி ஒற்றுமை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். குரு 10-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பரச் செலவு களைக் குறைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் நிலவி னாலும் எதிர்நீச்சல் போட்டு லாபம் பெறுவீர்கள். கூட்டாளிகளால் ஓரளவுக்கு நற்பலன்களைப் அடைவீர்கள். உத்தியோக ரீதியாக எதிர் பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப்பின் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 29-9-2019 முதல் 25-2-2020 வரை

  உங்கள் ராசியதிபதி சனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் உங்கள் கனவுகள் நனவாகும். தடைப்பட்ட உயர்வுகளைப் பெற்று கௌரவமான பதவிகள் கிடைக்கப்பெறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். பொருளாதாரநிலை சிறப்பாக அமையும். வீடு,மனை வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகளால் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கப் பெற்று சேமிப்பு பெருகும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். 29-10-2019 முதல் குரு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் பணம் பலவழி களில் தேடிவரும். பெரிய மனிதர்களின் நட்புக் கிட்டும். தொழில், வியா பாரத்தில் எடுக்கும் முயற்சிகளில் நற்பலனைப் பெறுவார்கள். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 26-2-2020 முதல் 28-4-2020 வரை

  உங்கள் ராசியதிபதி சனி பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் குரு கேது சேர்க்கை பெற்று  சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். பணம் பலவழிகளில் தேடிவரும். எதிர்பார்க்கும் உதவிகள் அனைத்தும் தடையின்றிக் கிட்டும். வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய யோகம் அமையும். மணமாகாதவர்களுக்குத் திருமண யோகம் கைகூடும். பொருளாதார நிலையில் முன்னேற்றங்கள் உண்டாகி புதிய பொருள் சேர்க்கைகளை அடைவீர்கள். உற்றார்-உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் மிகப்பெரிய பலன்களை அடைவார்கள். தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய காலம் என்பதால் உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகஸ் தர்கள் உயர்வான நிலைகளை அடைவார்கள். கடன்கள் குறைவதால் சேமிப்புகள் பெருகும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 29-4-2020 முதல் 14-9-2020 வரை

  சனி பகவான் வக்ரகதியில் சஞ்சரித்தாலும் ஜென்ம ராசிக்கு 11-ல் சஞ்சரிப்பதாலும், குரு பகவானும் 11-ல் சஞ்சரிப்பதாலும்  இக்காலங்களில் நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பொன், பொருள் சேரும். மணமாகாதவர்களுக்கு மணமாகும். மண மானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியளிக்கும். புத்திர பாக்கியமும் அமையும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் நிவர்த்தியாகும். குடும்பத்தில் நவீன பொருட் சேர்க்கைகள் அமையும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். புதிய கூட்டாளிகளால் அபிவிருத்தி பெருகும். வேலையாட்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்-வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் தடைப்பட்டுக் கொண்டி ருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு யாவும் கிடைக்கும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 15-9-2020 முதல் 19-11-2020 வரை

 சனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் குரு சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் அனுகூலமான நற்பலன்களைத் தடையின்றிப் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியினைக் கொடுக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பொன், பொருள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். சிலருக்கு சொந்த பூமி, மனை வாங்கும் யோகம் அமையும். பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு, வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகளும், அரசுவழியில் ஆதாயங்களும் தேடிவரும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிக்கும். சர்ப்ப சாந்தி செய்வது உத்தமம்.

சனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 27-12-2020 வரை

  சனி பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்ப தால் இக்காலங்களிலும் நன்மையான பலன்களை அடையமுடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும் சுபிட்சமான நிலை உண்டாகும். தாராள தனவரவுகளால் குடும்பத்தில்  தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் குறையும். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும். புதிய பூமி, மனை,வாகனங்களையும் வாங்க முடியும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன்- மனைவி யிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறை யாது. தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வரவேண்டிய வாய்ப் புகள் தடையின்றி வரும். போட்டி பொறாமைகள் விலகும். உத்தியோகஸ் தர்கள் பணியில் நிம்மதியான நிலையை அடைவார்கள். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களால் எந்தவொரு பணியையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் : 5, 6, 8,      கிழமை : வெள்ளி, சனி, திசை : மேற்கு, கல் : நீலக்கல்      நிறம் : வெள்ளை, நீலம், தெய்வம் : ஐயப்பன்.

No comments: