Wednesday, December 27, 2017

வார ராசிப்பலன் டிசம்பர் 31 2017 முதல் ஜனவரி 6 - 2018 வரை

வார ராசிப்பலன்
டிசம்பர் 31  2017 முதல் ஜனவரி 6 2018 வரை 
மார்கழி 16 முதல் 22 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
ஆசிரியர்இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)
Dip in astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை -- 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,



  சந்தி



திருக்கணித கிரக நிலை

ராகு
கேது

 
சனி 
சூரிய
சுக்கி

புதன்

குரு
செவ்
 

கிரக மாற்றம்
06-01-2018 தனுசில் புதன் இரவு 7.50 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
ரிஷபம்            30.12.2017 அதிகாலை 04.29 மணி முதல் 01.01.2018 அதிகாலை 04.27 மணி வரை.
மிதுனம்          01-01-2018 காலை 04.27 மணி முதல் 03-01-2018 அதிகாலை 03.33 மணி வரை
கடகம்              03-01-2018 அதிகாலை 03.33 மணி முதல் 05-01-2018 அதிகாலை 03.55 மணி வரை
சிம்மம்            05-01-2018 அதிகாலை 03.55 மணி முதல் 07-01-2018 காலை 07.15 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
31.12.2017 மார்கழி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திரியோதிசி திதி ரோகினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பம் இலக்கினம். வளர்பிறை

01.01.2018 மார்கழி 17 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்தசி திதி மிருகசிருஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பம் இலக்கினம். வளர்பிறை

03.01.2018 மார்கழி 19 ஆம் தேதி புதன்கிழமை துவிதியை திதி பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பம் இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்
நல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். குரு பகவான் 7-ல் சாதகமாக இருப்பதால் தாராள தனவரவுகள் உண்டாகி உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் சாதகமான நடந்து கொள்வதால் அவர்களால் நற்பலன்களை பெற முடியும். பொன், பொருள் சேர்க்கைகள் அமையும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிவதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். பயணங்களால் நற்பலன் உண்டாகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். துர்கையம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 1, 2.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்
சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 7-ல் புதன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களால் நற்பலன்களை அடைவீர்கள். அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாக கூடும் என்பதால் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன்- மனைவி அனுசரித்து செல்வது, உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். தடைபட்ட திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் நற்பலனை அடைய முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் கவனம் தேவைபணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை  பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் - 31, 3, 4.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே, குரு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதாலும் சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றங்களை அடைவீர்கள். 7-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய சிறுசிறு பாதிப்புகளால் மந்தமான நிலை நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமத நிலை உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை தற்சமயம் பயன்படுத்தி கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பயணங்களால் சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். கூட்டாளிகளை  அனுசரித்து செல்வது உத்தமம். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. சிவ வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 1, 2, 5, 6.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்
சுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன், 6-ல் சூரியன், சனி சஞ்சரிப்பது நற்பலனை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் எந்தவித பிரச்சனைகளையும் எதிர் கொள்ள கூடிய ஆற்றல் உண்டாகும். செவ்வாய் 4-ல் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது உத்தமம். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். கடன்களும் சற்று குறையும். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகளும் லாபமும் கிடைக்கும். கூட்டாளிகள் வழியிலும் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் சற்று தாமதநிலை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடனும் தெம்புடனும் செயல்பட்டு ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 31, 3, 4.

சிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்
சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 4-ல் புதன், 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள். பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்றாலும் குரு பகவான் 3-ல் சாதகமற்று இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது சிறப்பு. அசையா சொத்துகளால் சிறுசிறு செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஓத்துழைப்புகளால் எதையும் சாதிக்க முடியும்தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சிளை அளிக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விடுவார்கள். குரு பகவான் வழிபாடு செய்வது சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் - 31, 1, 2, 5, 6.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்
சூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, தன ஸ்தானத்தில் குரு, லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் 4-ல் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவைற்ற அலைச்சல் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமதம் ஏற்படும். பண வரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று நிவர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை போன்றவை ஏற்படும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும் என்றாலும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலப்பலனை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொண்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 1, 2, 3, 4.

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்
நேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன், சூரியன், சனி சேர்க்கைப் பெற்று 3-ல் இருப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களையும், பொருளாதார ரீதியாக முன்னேற்றங்களையும் அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதால் மருத்துவ செலவை தவிர்க்க முடியும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தியும் பெருகும். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் பணியில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 3, 4, 5, 6.

சந்திராஷ்டமம் - 30.12.2017 அதிகாலை 04.29 மணி முதல் 01.01.2018 அதிகாலை 04.27 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
நியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், சனி, 12-ல் செவ்வாய், குரு இருப்பதால் வீண் விரயங்கள், தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள், வாக்குவாதங்கள் போன்றவை ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் சற்று தாமத நிலை உண்டாகும். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். அசையும், அசையா சொத்துக்களாலும் சிறுசிறு விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி எந்த வாக்குறுதிகளும் கொடுக்காமல் இருப்பது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே ஏற்றம் பெற முடியும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் முழு முயற்சியுடன் செயல்பட்டு படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவ பெருமானை வணங்குதல் உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 31, 5, 6.

சந்திராஷ்டமம் - 01-01-2018 காலை 04.27 மணி முதல் 03-01-2018 அதிகாலை 03.33 மணி வரை

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் செவ்வாய், குரு சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றங்களை அடைவீர்கள். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானமாக செயல்படுவது நல்லது. பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களிடம் சற்று கவனமுடன் நடந்து கொள்வது பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். கொடுத்த கடன்களையும் வசூலிக்க முடியும். சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் நல்ல லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர் பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை அடைய கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். மாணவர்கள் எதிர்பார்க்கும் அரசு உதவிகள் கிடைக்கப் பெறும். சனி பகவான் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 31, 1, 2,

சந்திராஷ்டமம் - 03-01-2018 அதிகாலை 03.33 மணி முதல் 05-01-2018 அதிகாலை 03.55 மணி வரை

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்
எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர் கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி 12-ல் சூரியன், சுக்கிரனுடன் சஞ்சரிப்பதால் வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வதும், சிக்கனத்தை கடைபிடிப்பதும் நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது, உறவினர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு கூடுதலாகவே இருக்கும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்க்கும் வாய்ப்புகள் போட்டி பொறாமைகளால் கை நழுவிப் போகும். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தால் வீண் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 1, 2, 3, 4.

சந்திராஷ்டமம் - 05-01-2018 அதிகாலை 03.55 மணி முதல் 07-01-2018 காலை 07.15 மணி வரை.

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனி, சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணம் பல வழிகளில் வந்து சேரும். எடுக்கும் முயற்சிகளில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். தடைப்பட்ட திருமண சுப காரியகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொன், பொருள் சேரும். சொந்த பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெற முடியும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். வெளியூர், வெளிமாநிலங்களுக்கு சென்று பணிபுரிய கூடிய வாய்ப்பும் அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் அமையும். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் - 3, 4, 5, 6.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி
பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன  ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் புதன், 10-ல் சூரியன், சுக்கிரன், 11-ல் கேது சஞ்சரிப்பதால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் இனிய வாரமாக அமையும். பல புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எதிர்பார்த்ததை விட லாபம் அமோகமாக இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் வீண் அலைச்சல்கள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப வேலை வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியமும் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். பண வரவுகள் சிறப்பாக அமைந்து ஆடம்பர தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் எளிதில் கிடைக்கப்பெறும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் - 31, 5, 6.


No comments: