Monday, April 30, 2018

Today rasi palan - 01.05.2018


Today rasi palan - 01.05.2018
இன்றைய ராசிப்பலன் -  01.05.2018
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
01.05.2018 சித்திரை 18, செவ்வாய்க்கிழமை, பிரதமை திதி காலை 06.48 வரை பின்பு தேய்பிறை துதியை. விசாகம் நட்சத்திரம் பகல் 03.56 வரை பின்பு அனுஷம். மரணயோகம் பகல் 03.56 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

புதன்
சூரிய
சுக்கி

               
திருக்கணித கிரக நிலை
01.05.2018
ராகு
கேது

செவ்
சனி (வ)
 

குரு(வ)
சந்தி
 


இன்றைய ராசிப்பலன் -  01.05.2018
மேஷம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு காலை 09.36 மணிக்கு பின் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வரவேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். எந்த செயலையும் நிதானமாக செய்வது நல்லது.
ரிஷபம்
இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துகளை விற்பதில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் புரிவோர்களுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும். வருமானம் இரட்டிப்பாகும்.
கடகம்
இன்று இல்லத்தில் உறவினர்கள் மூலம் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
சிம்மம்
இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சற்று மந்த நிலை ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.
கன்னி
இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும்.
துலாம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வீண் செலவுகளால் குடும்பத்தில் நெருக்கடிகள் அதிகரிக்கலாம். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பெற்றோர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்களது அன்பை பெற முடியும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் சற்று குறையும்.
விருச்சிகம்
இன்று தொழில் வியாபரம் செய்பவர்களுக்கு அமோகமான பலன்கள் உண்டாகும். மற்றவர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு மேலோங்கி இருக்கும். அரசு துறை சார்ந்தவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பொருளாதார மேன்மையால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்.
தனுசு
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளால் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். சிக்கனத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் உள்ள மந்த நிலை மாறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.
மகரம்
இன்று அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும்.
கும்பம்
இன்று நீங்கள் எந்த ஒரு செயலையும் கடின உழைப்புடன் செய்து முடிப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.
மீனம்
இன்று குடும்பத்தில் உள்ளவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. உங்கள் ராசிக்கு காலை 09.36 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளையும் சுபகாரியங்களையும் மதியத்திற்கு பிறகு மேற்கொள்வது உத்தமம். இதுவரை இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் படிப்படியாக குறையும்.

Sunday, April 29, 2018

Today rasi palan - 30.04.2018


Today rasi palan - 30.04.2018
இன்றைய ராசிப்பலன் -  30.04.2018
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
30-04-2018, சித்திரை 17, திங்கட்கிழமை, பௌர்ணமி திதி காலை 06.28 வரை பின்பு தேய்பிறை பிரதமை. சுவாதி நட்சத்திரம் பகல் 02.46 வரை பின்பு விசாகம். அமிர்தயோகம் பகல் 02.46 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. லஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள்.
இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

புதன்
சூரிய
சுக்கி

               
திருக்கணித கிரக நிலை
30.04.2018

ராகு
கேது

செவ்
சனி (வ)
 

குரு(வ)
சந்தி
 


இன்றைய ராசிப்பலன் -  30.04.2018
மேஷம்
இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன் ஏற்படும்.
ரிஷபம்
இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மிதுனம்
இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். வேலையில்  உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.
கடகம்
இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். வண்டி வாகனங்களால் எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர்.
சிம்மம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண பேச்சுவார்த்தைகளில் இருந்த தடைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பால் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு விரிவடையும். சேமிப்பு உயரும்.
கன்னி
இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாக கூடும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றத்துடன் கூடிய உயர்வுகள் கிடைக்கும்.
துலாம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். வங்கி சேமிப்பு உயரும்.
விருச்சிகம்
இன்று குடும்பத்தில் பெரியவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். திடீர் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.
தனுசு
இன்று உங்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வேலையில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.
மகரம்
இன்று உங்களுக்கு பணவரவுகள் தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் வழியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் இருந்த தடை தாமதங்கள் விலகி முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் ஓரளவு குறையும்.
கும்பம்
இன்று குடும்பத்தில் எதிர்பாராத சுப செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் கல்விக்கான வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் மறையும். கொடுத்த கடன் வசூலாகும்.
மீனம்
இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும்.