Monday, April 16, 2018

அட்சயதிருதி 


அட்சயதிருதி 
                                                      
       சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வருகின்ற மூன்றாவது திருதியான வளர்பிறை திருதியைத் தான் அட்சயதிருதி என்கிறோம். சித்திரை மாதத்தில் சூரியன் மேஷத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கும். இந்த மாதத்தில் சந்திரன் ரிஷபத்தில் உச்சமடையும் பொழுது அட்சயதிருதி வருகிறது.
       தந்தைக்கு அதிபதி சூரியன் தாய்க்கு அதிபதி சந்திரன். சூரியனும், சந்திரனும் பலம் பெற்று சஞ்சரிக்கும் இன்றைய தினத்தில் பெற்றோரை வணங்கி அவர்களின் ஆசியைப் பெறுவது நற்பலனை தரும். பித்ருக்களுக்கும் சாந்தி செய்வது வழிபாடு செய்வது நன்மையளிக்கும்.
       அக்ஷய திருதியை நன்னாளை பொன்னாளாக போற்றி கொண்டாடுவது மக்களின் பழக்கமாக உள்ளது. இந்நாளில் எந்த பொருளை வாங்கினாலும் அது இரட்டிப்பாக பெருகி வளரும் என்பது ஐதீகம். இதனால் மக்கள் தங்கம் வாங்குவதை ஒரு வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். ஒரு சில சமுதயாத்தினர் மட்டுமே கொண்டாடிய இந்த அக்ஷய திருதியை தற்போது ஜாதி, மத பேதமின்றி யாவரும் பொன் நகைகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அக்ஷய திருதியை நாளில் தானியங்கள், நகைகள் வாங்குவது மட்டுமின்றி சுமங்கலிப் பெண்களை வீட்டுக்கு அழைத்து வெற்றியை தாம்பூலம், மஞ்சள் கயிறு, ரவிக்கைத் துணி போன்றவற்றை தானம் கொடுப்பது, லட்சுமி தேவியை வழிபாடு செய்வது, லட்சுமி சமேத நாராயணனை வணங்குவது, தேவிக்குரிய ஸ்தோத்திரங்களை உச்சரிப்பது போன்றவற்றால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். விஷ்ணுவுக்கு துளசியுடன் கோதுமையையும், கோதுமையில் செய்த இனிப்பு பண்டங்களையும் படைத்து அவற்றை பிராமணர்களுக்கும் எளியவர்களுக்கும் தானமாக கொடுப்பதாலும், மோர், நீர், பானகம், போன்றவற்றை தானம் செய்வதாலும் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும்.
கஞ்சிக்கே வழியில்லாமல் வறுமையில் வாடிய குசேலன் கண்ணனை சந்தித்து தான் கொண்டு வந்த அவலை கொடுத்து திடீரென்று குபேரன் ஆனது இந்த அக்ஷய திருதியை நன்னாளில் தான். சித்திரை மாதம் முழுவதும் விஷ்ணுவுக்குரியது என்பதால் விஷ்ணு பகவானை வழிபடுவதன் மூலமும் நற்பலன்கள் அமையும்.
நாட்டில் பாவங்களை பெருக பெருக பூமித்தாயால் பாரம் தாங்க முடியாமல் சுனாமி, பூகம்பம், புயல், வெள்ளம் போன்றவை ஏற்படுகிறது. இயற்கை ஏற்படுத்தும் சேதங்களை மனிதனால் தடுக்க முடியாது என்றாலும் அவற்றிலிருந்து தம்மை காத்து கொள்ளவும், பெரியளவில் இழப்புகளை சந்திக்காமல் இருக்கவும் பெரிய அளவில் உதவிகளை செய்ய முடியாவிட்டாலும் இது போன்ற நன்நாட்களில் நம்மால் முடிந்த தானதருமங்களை செய்வோம்.
இவ்வருடம் திருக்கணித சித்தாந்தப்படி திருதியை திதியானது 18&04&2017 புதன்கிழமை அதிகாலை 03.45  மணியிலிருந்து பின்இரவு 01.30 மணி வரை உள்ளது.
     18&04&2017 புதன்கிழமை அன்று காலை 06.00&07.00, 09.00&10.00, மதியம் 1.30&2.00, மாலை 04.00 & 05.00, இரவு 07.00&09.00, 11.00 &12.00 மணி வரை நகைகள் வாங்க உத்தமம்.




No comments: