Rasi palangal

Saturday, May 5, 2018

Today rasi palan - 06.05.2018


Today rasi palan - 06.05.2018
இன்றைய ராசிப்பலன் -  06.05.2018
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
06-05-2018, சித்திரை 23, ஞாயிற்றுக்கிழமை, சஷ்டி திதி பகல் 03.55 வரை பின்பு தேய்பிறை சப்தமி. உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 04.39 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது . சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் - மாலை 04.30 - 06.00, எம கண்டம் - பகல் 12.00 - 01.30, குளிகன் -  பிற்பகல் 03.00 - 04.30, சுப ஹோரைகள் - காலை 7.00 - 9.00, பகல் 11.00 - 12.00 , மதியம் 02.00 - 04.00,  மாலை 06.00 - 07.00, இரவு 09.00 - 11.00,


புதன்
சூரிய
சுக்கி

               
திருக்கணித கிரக நிலை
06.05.2018


ராகு
செவ் கேது

சந்தி சனி (வ)


குரு (வ)      



இன்றைய ராசிப்பலன் -  06.05.2018
மேஷம்
இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலப்பலன் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குலையும். உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். இதுவரை இருந்த மனக்குழப்பங்கள் படிப்படியாக குறையும். தெய்வ ஸ்தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு அமையும்.
மிதுனம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் குழப்பமும் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகளை தள்ளி வைப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதியாக இருந்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வெளியூர் பயணங்களில் அதிக கவனம் தேவை.
கடகம்
இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.
சிம்மம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
கன்னி
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடங்கல்கள் ஏற்படலாம். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். குடும்பத்தில் அமைதி குறையும். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவோடு எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.
துலாம்
இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் உண்டாகலாம். பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வில் புதிய மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.
தனுசு
இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். பண பற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும்.
மகரம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பார்கள். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.
கும்பம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். கடன் சுமை குறையும்.
மீனம்
இன்று பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை உண்டாகும்.

Post a Comment