Thursday, June 14, 2018

வார ராசிப்பலன் - ஜுன் 17 முதல் 23 வரை


வார ராசிப்பலன் - ஜுன் 17 முதல் 23 வரை 
ஆனி 3 முதல் 9 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,






சூரிய புதன்
               
               


சந்தி ராகு சுக்கி
கேது  செவ்

சனி (வ)
 
குரு(வ)               
 

கிரக மாற்றம்  இல்லை

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
கடகம்              16-06-2018 அதிகாலை 03.23 மணி முதல் 18-06-2018 அதிகாலை 04.21 மணி வரை.
சிம்மம்            18-06-2018 அதிகாலை 04.21 மணி முதல் 20-06-2018 காலை 07.38 மணி வரை.
கன்னி              20-06-2018 காலை 07.38 மணி முதல் 22-06-2018 மதியம் 01.44 மணி வரை.
துலாம்            22-06-2018 மதியம் 01.44 மணி முதல் 24-06-2018 இரவு 10.31 மணி வரை.

இவ்வாரத்தில் சுப முகூர்த்த நாட்கள் இல்லை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
சிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதும் 4-ஆம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் சிறு தடை தாமதத்திற்கு பின் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். துர்கையம்மனுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 20, 21, 22, 23.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 3-ல் ராகு சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் அனுகூலங்களை அடைவீர்கள். குரு வக்ர கதியில் இருப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும்.  கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். சிவ வழிபாடு சனி பகவான் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 17, 22, 23.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட மிதுன ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், 8-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த செயல் செய்வதென்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினைப் பெற முடியும். குடும்பத்தில் உள்ளவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகும்.  உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சந்திக்க வேண்டியிருந்தாலும் எதிர் பார்த்த லாபத்தை பெற்று விடுவீர்கள். மாணவர்கள் தேவையற்ற பழக்க வழக்கங்களை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. முருக வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்தால் நன்மைகள் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் - 18, 19.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களால் நிம்மதி குறையும். வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார நிலை சுமாராக தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நற்பலனை தரும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களால் நிம்மதி குறைவு ஏற்படும். தேவையற்ற வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அதன் மூலம் லாபம் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனத்துடன் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். வேலை பளுவும் சற்று அதிகரிக்கும். முருகனுக்கு அபிஷேகம் செய்வதும், சிவ வழிபாடு செய்வதும் மேன்மையை உண்டாக்கும்.
வெற்றி தரும் நாட்கள் - 17, 20, 21, 22.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சூரியன், புதன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். போட்டி பொறாமைகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். லாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை தேவைக்கேற்ற படியிருக்கும். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் நிலவும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். பழைய வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்படுவார்கள். சிவ வழிபாடு அம்மன் வழிபாடு செய்து வந்தால் கஷ்டங்கள் குறையும்.
வெற்றி தரும் நாட்கள் - 18, 19, 22, 23.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
மிருதுவான வார்த்தைகளால் நயமாக பேசக் கூடிய கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன் சூரியன் சேர்க்கைப் பெற்று 10-ல் சஞ்சரிப்பதால் சிறப்பான பணவரவு, இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மேலோங்கும் நிலை உண்டாகும். சுக்கிரன், ராகு லாப ஸ்தானத்தில் இருப்பதால் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் நல்ல லாபத்தினை அடைவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வுகள் கிடைப்பதோடு எதிர்பார்க்கும் இடமாற்றங்களும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து நட்பு கரம் நீட்டும். கொடுக்கல்- வாங்கல்  லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவும் முடியும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். தினமும் விநாயகர் வழிபாடு செய்து வருவது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 17, 20, 21, 22.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
பேச்சிலும் செயலிலும் முடிந்த வரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் சனி 9-ல் புதன் 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் சற்று எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். பண வரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். 4-ல் செவ்வாய் இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும் என்பதால் தூர பயணங்களை தவிர்க்கவும். வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பும் அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலையிருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது உத்தமம். முருக வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 17, 18, 19, 22, 23.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி செவ்வாய் 3-ல் உச்சம் பெற்று சஞ்சரிப்பதும் பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் உங்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். சூரியன் 8-ல் இருப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றி கிட்டும். பொளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் சாதகமான பலன்களை அடையலாம். சொந்த பூமி மனை வாங்கும் விஷயங்களில் சற்று கவனமுடன் செயல்பட்டால் அனுகூலப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட்டால் லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு கைநழுவிய பதவி உயர்வுகளை தடையின்றி பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் கஷ்டங்கள் குறையும்.
வெற்றி தரும் நாட்கள் - 18, 19, 20, 21, 22.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
எந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவு நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை தவிர்ப்பது உத்தமம். உடல் நிலையிலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது சிறப்பு. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தடைகள் ஏற்படலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் அடைய வேண்டிய லாபத்தை அடைவார்கள். வர வேண்டிய வாய்ப்புகளும் வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலைபளு குறைவாகவே இருக்கும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் கவனமுடன் இருப்பது நல்லது. ராகு காலங்களில் அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 20, 21, 22, 23.
சந்திராஷ்டமம் -   16-06-2018 அதிகாலை 03.23 மணி முதல் 18-06-2018 அதிகாலை 04.21 மணி வரை.


மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
எல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும் கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியனும் 7-ல் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் எந்த சிக்கலையும் சமாளித்து ஏற்றங்களை அடைவீர்கள். பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் கடனில்லாத வாழ்க்கை அமையும். அசையும் அசையா சொத்துக்கள் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்பட்டால் ஏற்படும் சிறு சிறு விரயங்களை தவிர்க்கலாம். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய மருத்துவ செலவுகள் உண்டாகாது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்கையும் காபாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும். கூட்டாளிகள் வழியிலும் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலாளர்களின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப் பின்பே கிடைக்கும். வேலைபளு குறையும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள். சனிப்ரீதி ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -                 17, 22, 23.
சந்திராஷ்டமம் -   18-06-2018 அதிகாலை 04.21 மணி முதல் 20-06-2018 காலை 07.38 மணி வரை.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
எதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன் 6-ல் ராகு சஞ்சரிப்பதால் தாராள தனவரவு ஏற்படும். நெருங்கியவர்களால் அனுகூலங்களை அடைவீர்கள். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் எதிலும் சிக்கனமாக செயல்படுவது சிறப்பு. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி சாதகமான பலன்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே வீண் விரயங்களை தவிர்க்க முடியும். வீடு வாகனம் போன்றவற்றை வாங்கும் முயற்சிகளை சில காலம் தள்ளி வைப்பது உத்தமம். பொன் பொருள் போன்றவற்றை வாங்குவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அபிவிருத்தியும் லாபமும் பெருகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் சிறப்பாகவே இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் வீண் பொழுதுபோக்குகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. முருக வழிபாடு விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் - 17, 18, 19.
சந்திராஷ்டமம் -   20-06-2018 காலை 07.38 மணி முதல் 22-06-2018 மதியம் 01.44 மணி வரை.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி.
அன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் செவ்வாய் கேது சஞ்சரிப்பதும் வலமான பலன்களை தரும் அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் மருத்துவ செலவுகள் உண்டாகாது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற முடியும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட்டு பெற்றோர் ஆசிரியர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவார்கள். சிவ வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் - 18, 19, 20, 21.
சந்திராஷ்டமம் -   22-06-2018 மதியம் 01.44 மணி முதல் 24-06-2018 இரவு 10.31 மணி வரை.



No comments: