Rasi palangal

Wednesday, August 1, 2018

Today rasi palan - 02.08.2018


Today rasi palan - 02.08.2018
இன்றைய ராசிப்பலன் -  02.08.2018
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
02-08-2018, ஆடி 17, வியாழக்கிழமை, பஞ்சமி திதி பகல் 11.33 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. உத்திரட்டாதி நட்சத்திரம் பகல் 01.12 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 0. சஷ்டி, முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் - மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் - காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

சந்தி



               
               
திருக்கணித கிரக நிலை
02.08.2018

சூரிய ராகு புதன் (வ)
கேது
செவ் (வ)

சனி (வ)
 
குரு    
  சுக்கி

இன்றைய ராசிப்பலன் -  02.08.2018
மேஷம்
இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் தவிர்ப்பது உத்தமம். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் சற்று ஏமாற்றத்தை அளிக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணிகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது.
ரிஷபம்
இன்று உங்களுக்கு குடும்பத்தினரால் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் உபாதைகள் விலகி ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல பலனைத் தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.
மிதுனம்
இன்று நீங்கள் மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும்.
கடகம்
இன்று உங்களுக்கு தனவரவு சுமாராகத்தான் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். தொழிலில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். திருமண முயற்சி தாமதமாகும்.
சிம்மம்
இன்று நீங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் சற்று பாதிப்புகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் நடைபெறுவதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. உணவு விஷயத்தில் சற்று கவனம் தேவை. பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.
கன்னி
இன்று உங்களுக்கு காலையிலேயே ஆச்சிரியப்படும் படியான தகவல்கள் வந்து சேரும். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார தேவைகள் எளிதில் நிறைவேறும், வழக்கு சம்பந்தபட்ட விஷயங்களில் வெற்றி உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
துலாம்
இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். எடுத்த காரியம் எளிதில் முடியும். எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். கடன் பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் மன நிம்மதி அதிகரிக்கும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் தேவைகள் பூர்த்தியாகும். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் வேலைபளு சற்று கூடுதலாகவே இருக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.
தனுசு
இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வு, அசதி இருந்தாலும் எடுத்த காரியத்தை தடையின்றி செய்து முடிப்பீர்கள். வரவும் செலவும் சமமாகவே இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். கடன்கள் குறையும்.
மகரம்
இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நினைத்தது நினைத்தபடி நிறைவேறும். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். வருமானம் இரட்டிப்பாகும்.
கும்பம்
இன்று உங்களுக்கு திடீர் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளால் சிறு மனசங்கடங்கள் ஏற்படும். உறவினர்கள் உதவியால் பணப்பிரச்சினைகள் குறையும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால்  அனுகூலப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.
மீனம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்க இன்று அனுகூலமான நாளாகும். சிலருக்கு வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.

Post a Comment