Sunday, August 26, 2018

Today rasi palan - 27.08.2018



Today rasi palan - 27.08.2018
இன்றைய ராசிப்பலன் -  27.08.2018
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
27-08-2018, ஆவணி 11, திங்கட்கிழமை, பிரதமை திதி இரவு 07.15 வரை பின்பு தேய்பிறை துதியை. சதயம் நட்சத்திரம் பகல் 03.03 வரை பின்பு பூரட்டாதி. சித்தயோகம் பகல் 03.03 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1.
இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.






சந்தி
திருக்கணித கிரக நிலை
27.08.2018
புதன் ராகு
கேது  செவ் (வ)
சூரிய
சனி (வ)

குரு
  சுக்கி

இன்றைய ராசிப்பலன் -  27.08.2018
மேஷம்
இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும். வீட்டில் ஒற்றுமை குறையலாம். தொழில் வியாபாரத்தில் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். கடன்கள் ஓரளவு குறையும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் புதிய மாற்றம் ஏற்படும்.
கடகம்
இன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
சிம்மம்
இன்று உறவினர்களால் மனமகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.
கன்னி
இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும்.
துலாம்
இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் -சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகலாம். வியாபார ரீதியாக எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உடன் பிறப்பிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும்.
தனுசு
இன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் கைக்கு வந்து சேரும்.
மகரம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் வேலைபளு சற்று குறையும்.
கும்பம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் படிப்பு சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.
மீனம்
இன்று நீங்கள் செய்ய நினைக்கும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனவருத்தங்கள் ஏற்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.

No comments: