Sunday, September 16, 2018

குரு பெயர்ச்சி பலன் 2018 - 2019 - மீனம்குரு பெயர்ச்சி பலன்  2018 - 2019 - மீனம் 
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,
மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம்,  உத்திரட்டாதி,  ரேவதி
நல்ல அறிவாற்றலுடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியாதிபதி குருபகவான் இதுநாள் வரை 8-ஆம் வீட்டில் சஞ்சரித்ததால் பல இடையூறுகளை நீங்கள் எதிர்கொண்டு இருந்தாலும் வாக்கிய கணிதப்படி வரும் 4-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்)  ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் கடந்த கால பிரச்சினைகளில் இருந்து படிப்படியாக விடுப்பட்டு மிகவும் சாதகமான பலனை பெறுவீர்கள். தடைப்பட்ட திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். சிலர் சிறப்பான புத்திர பாக்கியங்களை பெறுவார்கள். உங்களை வெறுத்து ஓடி ஒளிந்தவர்களும் உங்கள் அருமை பெருமைகளை புரிந்து கொண்டு நட்பு பாராட்ட வருவார்கள். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தேவைகள் பூர்த்தியாவதுடன், கடன்களும் படிப்படியாக குறையும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம், பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் போன்றவை உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்களுக்கு சனிபகவான் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஜீவனசனி நடைபெறுவதும், வரும் 13-2-2019 முதல் சர்பகிரகமான ராகு 4-ஆம் வீட்டிலும், கேது 10-ஆம் வீட்டிலும் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. இதனால் சிறுசிறு பிரச்சினைகள், தேவையற்ற அலைச்சல்கள் போன்றவற்றை சந்திக்க சேர்ந்தாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும் அபிவிருத்தியும் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் ஓரளவுக்கு முன்னேற்றங்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெற சற்று தாமதநிலை ஏற்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பயணங்களால் ஓரளவுக்கு அனுகூலமானப்  பலன்களை அடைய முடியும். வாழ்க்கை தரமும் முன்னேற்றம் அடையும்.

உடல் ஆரோக்கியம் 
உடல் ஆரோக்கியமானது சிறப்பாகவே இருக்கும். நீண்ட நாட்களாக உங்களை தொல்லை படுத்திக் கொண்டிருந்த உடம்பு பாதிப்புகள் படிப்படியாக குணமடையும். குடும்பத்தில் மனைவி பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களால் சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்புகள் உண்டாகாது. இவ்வளவு நாட்களாக மனதில் நிலவி கொண்டிருந்த சில பிரச்சினைகள் சுமூகமாக முடியும்.
குடும்பம் பொருளாதார நிலை
கடந்த காலங்களால் நீங்கள் அனுபவித்து வந்த துன்பங்கள் யாவும் மறையும். இந்த குரு பெயர்ச்சியின் மூலம் உங்களுக்குள்ள சஞ்சலங்கள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் இருந்த வம்புகள் கருத்து வேறுபாடுகள் யாவும் மறைந்து ஒற்றுமை சிறப்படையும். பண வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறைவதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி கடன்களும் படிப்படியாக விலகும். நண்பர்களின் வட்டாரம் அதிகரிக்கும். பிரிந்தவர்களும் தேடி வந்து ஒற்றுமை கரம் நீட்டுவார்கள். பொன் பொருள் சேரும். சிலருக்கு வீடு மனை வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம், குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்பு உண்டாகும்.
கமிஷன்- ஏஜென்சி
கமிஷன் ஏஜென்சி காண்டிராக்ட் துறையில் இருப்பவர்கள் முன்னேற்றமடைய கூடிய காலமிது. பணவரவுகள் சரளமாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உங்களுக்கு இருந்து வந்த வம்பு வழக்குகளிலும் நல்லதொரு தீர்வு ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு நற்பலனை உண்டாக்கும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளும் பொறாமைகளும் நிலவினாலும் லாபங்களை பெருக்கி கொள்ள கூடிய அளவிற்கு அபிவிருத்தி பெருகும். கை நழுவிய வாய்ப்புகளும் தேடி வருவதால் பொருளாதார நிலையானது உயர்வடையும். தொழிலாளி முதலாளி என்ற பேதமில்லாமல் அனைவரிடமும் சுமூகமான நிலை நிலவும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். புதிய நவீன கருவிகள் வாங்குவதற்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய கிளை நிறுவனங்களையும் நிறுவ கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளால் லாபம் பெருகும்.
உத்தியோகம்
பணியில் இதுவரை நிலவிய நெருக்கடிகள் குறையும். வீண் பழிச்சொற்களால் மனம் சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் உங்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வுகள் தேடி வரும். பெயர் புகழ் உயரும் அளவிற்கு உங்களின் திறமைகளை வெளிப்படுத்த கூடிய வாய்ப்புகள் அமையும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களுக்கு ஆளாவீர்கள். உடன் பணி புரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் கருத்து வேறுபாடுகள் மறைந்து அவர்களும் உங்களுக்கு ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் சில தடைகளுக்குப்பின் நிறைவேறும்.
அரசியல்
அரசியல்வாதிகள் அபிரிதமான வளர்ச்சியினை அடையக்கூடிய காலமிது. இழந்த பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். மக்களிடையே செல்வாக்கு உயரும். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். மாண்புமிகு பதவிகள் கிட்டும். கட்சி பணிகளுக்காக வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்பும் அமையும். நினைத்தது நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். 
விவசாயிகள்
பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். மழை வளம் குறைவாக இருந்தாலும் கையாள வேண்டிய முறைகளைக் கையாள்வதால் லாபங்களைப் பெற்று விடுவீர்கள். பயிர்களை இன்சூரஸ் செய்வதன் மூலமும் அரசு வழியில் ஆதாயங்களைப் பெற முடியும். காய், கனி, பூ, போன்றவற்றாலும் லாபம் கிட்டும். கால் நடைகளையும் அபிவிருத்தி செய்ய முடியும். பொருளாதாரம் சிறப்பாக அமையும்.
கலைஞர்கள் 
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக்கூடிய வாய்ப்புகள் அமையும். எதை தேர்ந்தெடுப்பது என முடிவெடுக்க முடியாத அளவிற்கு வாய்ப்புகள் குவியும். என்றாலும் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கடந்த காலங்களில் இருந்த பொருளாதார நெருக்கடிகளும் குறைந்து சுகவாழ்வு சொகுசு வாழ்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். அனுகூலமான பயணங்களும் அதன் மூலம் நற்பலன்களும் உண்டாகும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனதில் இருந்த பாரங்களும் குறைந்து உற்றார் உறவினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் தடபுடலாக நிறைவேறும். கணவன்- மனைவியிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். சிலர் சிறப்பான புத்திர பாக்கியத்தை பெற்றெடுப்பர். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். புது வீடு கட்டி குடிபுக கூடிய வாய்ப்பும் உண்டாகும். கடன்கள் குறைந்து சேமிப்புகள் பெருகும்.
மாணவ மாணவியர் 
கல்வியில் இருந்து வந்த மந்த நிலைகள் விலகி ஞாபக சக்தி அதிகரிக்கும். பெற்றோர் ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளான நீங்கள் தற்போது அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள். பேச்சு போட்டி ஓவியப் போட்டி, பாட்டு போட்டி போன்றவற்றில் கலந்து கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். நல்ல நண்பர்களின் நட்பு தேடி வரும். தேவையற்ற பொழுது போக்குகளில் உள்ள நாட்டம் குறைந்து கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும்.

குரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04.10.2018 முதல் 21.10.2018 வரை
உங்கள் ராசியாதிபதி குருபகவான் பாக்கிய ஸ்தானமான 9-ல் தன் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதும், 11-ல் கேது சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்தால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களைப் பெற முடியும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதார நிலை மேன்மையடையும். கடன்களும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்த கொண்டால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். திருமண சுப காரியங்கள் தடையின்றி நிறைவேறும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். பயணங்களால் அனுகூலப் பலனை அடைவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.
குரு பகவான் அனுச நட்சத்திரத்தில் 22.10.2018 முதல் 20.12.2018 வரை
குருபகவான் சனியின் நட்சத்திரத்தில் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும், 11-ல் கேது சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்பதால் பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தி ஆகும். தடைபட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமானப் பலன்களை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். சனி 10-ல் சஞ்சரிப்பதால் போட்டி பொறாமைகள் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை பெற சற்றே தாமதநிலை உண்டாகும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.
குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21.12.2018 முதல் 12.03.2019 வரை
குருபகவான் கேந்திராதிபதியான புதனின் நட்சத்திரத்தில் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சி அளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலன்களை அடைய முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். ஜென்ம ராசிக்கு 10-ல் சனி சஞ்சாரம் செய்வதால் உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் சிறுசிறு இடையூகளை சந்தித்தாலும் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளும் கிட்டும். தொழில் வியாபாரத்தில் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சினைகளை சந்தித்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிட்டும். வரும் 13-2-2019-ல் ஏற்படவிருக்கும் சர்பகிரக மாற்றத்தின் மூலம் ராகு 4-ல், கேது 10-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். மாணவர்களும் கல்வியில் உயர்வடைவார்கள். துர்கை அம்மனை வழிபாடு நல்லது.
குரு பகவான் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் 13.03.2019 முதல் 09.04.2019 வரை
இக்காலங்களில் உங்கள் ராசியாதிபதி குரு கேதுவின் நட்சத்திரத்தில் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 10-ல் சனி, கேது சேர்க்கைப் பெற்று சஞ்சாரம் செய்வதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்வதுடன், எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று கடன் சுமைகள் சற்று குறையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் சற்று தாமதமாகும். தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களை பெறுவீர்கள் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.
குரு பகவான் வக்ர கதியில் 10.04.2019 முதல் 06.08.2019 வரை
குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் இருப்பது நல்லது. அன்றாட பணிகளில் ஈடுபடுவதிலேயே மந்தநிலை ஏற்படும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே உண்டாக கூடிய வாக்குவாதங்களால் நிம்மதி குறைவு உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொண்டால் கடன்களை தவிர்க்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரோதங்களை ஏற்படுவதை தவிர்க்கலாம். சனி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகளையும், போட்டி பொறாமைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். வெளிவட்டார தொடர்புகளால் ஓரளவுக்கு நற்பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது வீண் பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. உடன்பணிபுரிபவர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
குரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 07.08.2019 முதல் 28.10.2019 வரை
இக்காலங்களில் உங்கள் ராசியாதிபதி குரு புதனின் நட்சத்திரத்தில் 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறுவதால் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலனை அடைவீர்கள். அதிநவீன பொருட்களையும், ஆடை ஆபரணங்களையும் வாங்கும் வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுத்து லாபங்களை காண முடியும். கொடுத்த கடன்களை தடையின்றி வசூலிக்க முடியும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பூர்வீக சொத்துகளில் இருந்த வம்பு வழக்குகளில் சாதகப்பலன்கள் உண்டாவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் சாதகமாகவே நடந்து கொள்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் புதிய வாய்ப்பு தேடி வரும். தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வேலைபளுவும் குறையும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். சனிபகவானை வழிபாடு செய்வது நல்லது.

பரிகாரம்
மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது, ஊனமுற்ற ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வது சனிக்கிழமைகளில் திருப்பதி வெங்கடாசலபதியை வழிபடுவது, அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது போன்றவற்றால் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபமேற்றுவது, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்களால் அர்ச்சனை செய்வது. ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது உத்தமம். 13-2-2019 முதல் ராகு கேது சாதகமின்றி சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது நல்லது. துர்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9          கிழமை - வியாழன், ஞாயிறு                      திசை - வடகிழக்கு
கல் - புஷ்ப ராகம்    நிறம் - மஞ்சள், சிவப்பு                      தெய்வம் -  தட்சிணாமூர்த்தி

No comments: