Rasi palangal

Friday, November 23, 2018

Today rasi palan - 24.11.2018


Today rasi palan - 24.11.2018
இன்றைய ராசிப்பலன் -  24.11.2018
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.Com, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
24-11-2018, கார்த்திகை 08, சனிக்கிழமை, பிரதமை திதி காலை 09.01 வரை பின்பு தேய்பிறை துதியை. ரோகிணி நட்சத்திரம் பகல் 03.09 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் பகல் 03.09 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. வாஸ்து நாள்  முற்பகல் 11.09-11.45. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.



சந்தி

செவ்
திருக்கணித கிரக நிலை
24.11.2018
ராகு
கேது 

சனி
சூரிய குரு புதன் (வ)
  சுக்கி


இன்றைய ராசிப்பலன் -  24.11.2018
மேஷம்
இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். தொழிலில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் ஓரளவு குறையும். உறவினர்கள் உதவியால் பணகஷ்டம் நீங்கும்.
ரிஷபம்
இன்று உறவினர்களுடன் இருந்த மனகசப்புகள் நீங்கி சுமூக உறவு உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் குறையும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களால் வீண் செலவுகள் செய்ய கூடிய சூழ்நிலை ஏற்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. வேலையில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் குறையும். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.
கடகம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.
சிம்மம்
இன்று வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான சிக்கல்களில் அனுகூலப்பலன் கிட்டும். உறவினர்கள் வழியாக மனமகிழும் செய்திகள் வந்து சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.
கன்னி
இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. உறவினர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். கடன்கள் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
துலாம்
இன்று உங்களுக்கு தேவையில்லாத மனஉளைச்சல் உண்டாகலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. வேலையில் மற்றவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது உத்தமம். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். புத்திர வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.
தனுசு
இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். வேலை நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். நினைத்தது நடக்கும்.
மகரம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையலாம். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் உண்டாகலாம். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். பணப்பற்றாக்குறை தீரும்.
கும்பம்
இன்று உங்களுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். எளிதில் முடியகூடிய செயல்கள் கூட தாமதமாக முடியும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும்.
மீனம்
இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் பெருகும்.

Post a Comment