Monday, February 11, 2019

மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020


மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

முன்கோபம் இருந்தாலும் எதிலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 13-02-2019 முதல் 01-09-2020 வரை ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் ராகுவும், 9-ஆம் வீட்டில் கேதுவும் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பே ஆகும். குரு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. சனி 9-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து விட முடியும். பூர்வீக சொத்து விஷயங்களால் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் தோன்றி மறையும். முன் கோபத்தை குறைப்பது, பேச்சில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் பெரிய கெடுதி இல்லை. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.
வரும் 29-10-2019 முதல் குரு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். பொன் பொருள் சேரும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். நெருங்கியவர்களும் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வற்றாலும் லாபம் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் பொடுப்பது போன்றவற்றில் நிதானமாக செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் சற்று தடை தாமதங்களுக்குப் பின் கிடைக்கும். தேவையற்ற விஷயங்களில் தலையீடு செய்யாமல் இருப்பது நல்லது. புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். எதிலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலன்களைப் பெற முடியும்.

உடல் ஆரோக்கியம்
உடல்நிலை சிறப்பாக இருக்கும். சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் அதிகமாக இருக்காது. குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு உடல்நிலை ஓரளவுக்கு முன்னேற்றம் அடையும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும்.
குடும்பம் பொருளாதாரநிலை
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சில தடைகளுக்குப் பின் நல்ல வரன்கள் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கும் புத்திர பாக்கியம் கிட்டும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் சேரும். சிலருக்கு வீடு வாகனம் போன்றவை வாங்கும் யோகம் உண்டாகும்.
உத்தியோகம்
பணியில் தடைப்பட்ட உயர்வுகள் தடை விலகி கிடைக்கும். கௌரவமும் பெயர் புகழும் உயரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் அமோகமாக நடைபெறும். போட்டிகள் குறையும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். நவீன கருவிகளை வாங்க அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். உங்களுக்குள்ள வங்கி கடன்கள் குறையும்.
கொடுக்கல்- வாங்கல்
பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குருபெயர்ச்சிக்குப் (29-10-2019) பின் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்கள் யாவும் வீடு தேடி வரும். பண விஷயமாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொருளாதார உயர்வுகளால் குடும்ப தேவைகள் மட்டுமின்றி பிற தேவைகளும் பூர்த்தியாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.
அரசியல்
பெயர் புகழ் யாவும் தேடி வரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பெயர் புகழ் உயர்வடையும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய நேர்ந்தாலும் வர வேண்டிய வரவுகள் வந்து சேரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பும் உண்டாகும். கௌரவ மிக்க பதவிகள் கிடைக்கும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கு ஏற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் லாபங்கள் பெருகும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய நவீன கருவிகளையும் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். அரசு வழியில் மானிய உதவிகள் கிட்டும்.
கலைஞர்கள்
திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத் தொகைகளும் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். புதிய கார் பங்களா போன்றவற்றை வாங்குவீர்கள். படபிடிப்பிற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். இசைத் துறையில் உள்ளவர்களும் ஜொலிப்பார்கள்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பூர்வீக வழியில் லாபம் கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையா சொத்துக்களால் லாபம் கிட்டும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.
மாணவ மாணவியர்
கல்வியில் முன்னேற்றமான நிலையிருக்கும். தேவையற்ற நட்புக்களையும் பொழுது போக்குகளையும் தவிர்ப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டிச் செல்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-02-2019 முதல் 16-04-2019 வரை
ராகு ஜென்ம ராசிக்கு 3-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 9-ல் உத்திராட நட்சத்திரத்திலும் சஞ்சரிக்கும் இக்காலங்கள் உங்களுக்கு அனுகூலமானதாகவே அமையும். எதிர்பாராத திடீர் தன வரவுகளால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பழைய கடன்கள் படிப்படியாக குறையும். உங்களுக்குள்ள எதிர்ப்புகள் பிரச்சினைகள் யாவும் விலகும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. குரு 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் சாதகப்பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் தெம்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர் ஓரளவுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே சாதகப்பலனை அடைய முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த புதிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளால் லாபங்கள் கிட்டும். முன்கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். கல்விக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். தட்சிணாமூர்த்தி மற்றும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.
ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 17-04-2019 முதல் 20-08-2019 வரை
ராகு ஜென்ம ராசிக்கு 3-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 9-ல் பூராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குரு 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருக்கும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்ப தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துவிட முடியும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது மூலம் தேவையற்ற வழியில் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் மட்டும் கவனம் தேவை. கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதால் கிடைக்க வேண்டிய லாபங்கள் தடையின்றி கிடைக்கும். புதிய பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.
ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 21-08-2019 முதல் 24-12-2019 வரை
ராகு ஜென்ம ராசிக்கு 3-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 9-ல் பூராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். 29-10-2019 முதல் குரு 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும், ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகளும், பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் நோக்கமும் நிறைவேறும்.  உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். வெளிவட்டாரத் தொடர்புகளும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் பாராட்டுதல்களும் கல்வியின் தரத்தை உயர்த்தி கொள்ள உதவும். முருகப்பெருமானை வழிபாடு செய்வது நற்பலனை தரும்.
ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 25-12-2019 முதல் 20-05-2020 வரை
ராகு கேது ஜென்ம ராசிக்கு 3, 9-ல் தன் சொந்த நட்சத்திரங்களில் சஞ்சரிப்பதும், குரு 9-ல் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்த காரியங்களையும் நிறைவேற்றி விட முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் சிறப்பாக அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பொருளாதார நிலையும் சிறப்பாகவே இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலமானப் பலனை பெறுவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். புதிய முயற்சிகளும் வெற்றி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். சிலருக்கு இட மாற்றங்கள் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பார்கள். ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.
ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 21-05-2020 முதல் 01-09-2020 வரை
ராகு ஜென்ம ராசிக்கு 3-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், கேது 9-ல் மூல நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதாலும், குரு 9-ல் சஞ்சாரம் செய்வதாலும் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் சாதகப்பலன் அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகி லாபம் பெருகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பல பொதுநலக் காரியங்களுக்காக செலவு செய்யும் வாய்ப்பும், ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். வேலைபளு குறைவாகவே இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9,    
நிறம் - ஆழ் சிவப்பு
கிழமை - செவ்வாய்
கல் - பவளம்
திசை - தெற்கு
தெய்வம் - முருகன்

பரிகாரம்
மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 29-10-2019 முடிய சாதகமின்ற சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடவும். 5 முக ருத்ராட்சம் அணிவதும். குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. அரசமரக்கன்று, காவி, மஞ்சள், சர்க்கரை, மஞ்சள் நிற மலர்கள், ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்யவும்.

No comments: