Rasi palangal

Thursday, July 18, 2019

Today rasi palan - 19.07.2019


Today rasi palan - 19.07.2019
இன்றைய ராசிப்பலன் -  19.07.2019
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

இன்றைய  பஞ்சாங்கம்
19-07-2019, ஆடி 03, வெள்ளிக்கிழமை, துதியை திதி காலை 06.55 வரை பின்பு தேய்பிறை திரிதியை. அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 04.25 வரை பின்பு சதயம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00




ராகு சுக்கி

திருக்கணித கிரக நிலை
19.07.2019
செவ் சூரிய
புதன் (வ)
  சந்தி

கேது
சனி (வ)
குரு(வ)

 


இன்றைய ராசிப்பலன் - 19.07.2019
மேஷம்
இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். உற்றார் உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
மிதுனம்
இன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களில் நிதானத்துடன் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு பகல் 2.58 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். மன அமைதி உண்டாகும்.
கடகம்
இன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 2.58 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் வேண்டும். வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.
சிம்மம்
இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும்.
கன்னி
இன்று குடும்பத்தில் பிள்ளைகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். வண்டி வாகனங்கள் பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். எடுத்த காரியம் வெற்றி அடைய மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் ஓரளவு குறையும்.
துலாம்
இன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றியை தந்து லாபம் பெருகும். பொன் பொருள் சேரும். வேலையில் பணிசுமை குறையும். சேமிப்பு உயரும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் குறையும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
தனுசு
இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வேலையில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்பட்டு மன உளைச்சலை உண்டாக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியாக அனுகூலப்பலன் கிட்டும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும்.
மகரம்
இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். ஆன்மீக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.
கும்பம்
இன்று உங்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
மீனம்
இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடலில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலப் பலன் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேற மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

No comments: