Saturday, October 12, 2019

கும்பம் - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020


கும்பம்  - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020

குரு பகவான் திருக்கணித சித்தாந்தப்படி விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18-ஆம் தேதி திங்கட்கிழமை 57.56 நாழிகைக்கு, ஆங்கிலப்படி 05-11-2019 செவ்வாய்கிழமை அதிகாலை 05.17 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி 20-11-2020 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.(வாக்கிய சித்தாந்தப்படி வரும் 29-10-2019 முதல் 15-11-2020 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார் ).
தனுசு ராசியில் குரு பகவான் சஞ்சாரம் செய்யவுள்ள காலங்களில் உண்டாகக் கூடிய பலா பலன்களை தெள்ளத் தெளிவாக வழங்கி உள்ளேன்.

ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


கும்பம்               அவிட்டம்3,4ம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3ஆம் பாதங்கள்
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சிறு வயதிலிருந்தே சிறந்த தெய்வ பக்தியும், நல்ல தர்ம சிந்தனையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, இதுநாள் வரை ஜென்ம ராசிக்கு 10-ல் சஞ்சரித்த பொன்னவன் என போற்றப்படக் கூடிய குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 05.11.2019 முதல் 20.11.2020 வரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி சர்ப கிரகமான ராகு 5-லும், கேது 11-லும் 23.09.2020 முடிய சஞ்சரிப்பதால் குடும்பத்தில் இதுவரை தடைபட்டு கொண்டிருந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் அனைத்தும் கைகூடும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தினை பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எல்லா வகையிலும் ஏற்றங்கள் ஏற்படும். பதவி உயர்வுகளும் தடையின்றி கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். லாபங்கள் சிறப்பாக அமையும். குரு பார்வை 3, 5, 7-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் நினைத்ததை நிறைவேற்ற முடியும். பூர்வீக சொத்துகளாலும் அனுகூலங்கள் உண்டாகும். பொன், பொருள் சேரும். புத்திர வழியில் சிறிதளவு மன கவலை நிலவும் என்றாலும் குரு பார்வை 5-ஆம் வீட்டிற்கு இருப்பதால் நற்பலன் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றுவீர்கள். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலங்கள் அதிகரிக்கும்.
தற்போது 11-ல் சஞ்சரிக்கும் சனி திருக்கணிதப்படி வரும் 24.01.2020 முதல் விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு ஏழரைச் சனியில் விரயச் சனி தொடங்கினாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் அதிக கெடுதிகளை செய்ய மாட்டார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும் உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பதும் நல்லது. பொருளாதார நிலை நன்றாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. எந்தவொரு செயலிலும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

உடல் ஆரோக்கியம் 
உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடந்த காலத்தில் இருந்து வந்த ஆரோக்கிய பாதிப்புகள் படிப்படியாக குணமடையும். குடும்பத்தில் உள்ளவர்கள் ஓரளவுக்கு மகிழ்ச்சிகரமாகவே இருப்பார்கள். புத்திரர்களால் அவ்வப்போது சிறுசிறு மனக்கவலைகள் தோன்றி மறையும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் குறைவதால் மனநிலையும் நிம்மதியளிப்பதாக அமையும்.
குடும்பம் பொருளாதார நிலை   
குடும்பத்தில் ஒற்றுமையும், சுபிட்சமும் நிலவும். லஷ்மிகடாட்சம் உண்டாகும். பணவரவுகளில் இருந்து நெருக்கடிகள் குறைவதால் குடும்பத்தேவைகள் பூர்த்தியாவதுடன் இருந்து வந்த கடன் பிரச்சினைகளும் குறையும். தடைப்பட்டு வந்த திருமண சுபநிகழ்ச்சிகள் தடபுடலாக நிறைவேறும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு அனுகூலப் பலனைப் பெற முடியும். சிலருக்கு வீடுமனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகமும், பொன்பொருள் சேர்க்கைகளும் சிறப்பாக அமையும். சிலர் நினைத்த வரையே கைபிடிப்பர். புத்திர பாக்கியம் சற்று தாமதத்துடன் அமையும்.
கமிஷன்- ஏஜென்ஸி 
குரு- கேது இனைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையானது சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் துறையில் இருப்போருக்கு எதிர்பார்த்ததை விட சிறப்பான லாபம் கிட்டும். சேமிப்பும் பெருகும்.
தொழில் வியாபாரம் 
தொழில் வியாபாரத்திலிருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் குறைவதால் லாபம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பாராத அனுகூலங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். கொடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் சப்ளை செய்வதால் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். நவீன கருவிகளை வாங்கி போடுவீர்கள். கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஆதரவாக செயல்படுவதால் நீங்கள் நினைத்ததை நிறைவேற்ற முடியும்.
உத்தியோகம்
பணியில் இதுவரை இருந்த வந்த சோதனைகளும் வேதனைகளும் விலகி உற்சாகமான நிலை ஏற்படும். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கப் பெறுவதால் குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான பணி அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.
அரசியல்
அரசியல்வாதிகளின் பெயர் புகழ் உயரக்கூடிய காலமாகும். மக்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெற்று அனைவரின் அபிமானத்தையும் பெறுவீர்கள். கட்சி பணிக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். பொருளாதார நிலையும் உயர்வடையும்.
விவசாயிகள்
விவசாயிகள் எதிர்பார்த்த வசூல் கிடைப்பதால் லாபமும் அதிகப்படியாகவே இருக்கும். காய், கனி, பூ போன்றவற்றால் லாபங்கள் கிட்டும். கால்நடைகள் வளர்ப்பதால் அனுகூலங்கள் உண்டு. குடும்பத்தில் பொருளாதாரநிலை உயர்வடைவதால் மகிழ்ச்சியும் சுபிட்சமும் ஏற்படும். கடன்கள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப்பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். திருமண வயதை அடைந்த பெண்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். புத்திர பாக்கியம் கிட்டும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலப் பலனைப் பெறமுடியும். பணவரவுகள் பஞ்சமின்றி இருப்பதால் கடன்கள் குறைவதுடன் பொன் பொருளும் சேரும். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கு தகுந்த உயர்வுகள் கிட்டும்.
மாணவ- மாணவியர்
கல்வியிலிருந்த மந்த நிலைகள் விலகி உற்சாகத்துடன் படிக்க முடியும். உடல் சோர்வு மனம் அலைப்பாயக் கூடிய நிலை போன்ற யாவும் மறையும். நல்ல மதிப்பெண்களை பெறுவதால் கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் பெறுமையை தேடி தருவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகளும் பாராட்டுதல்களும் மேலும் மேலும் உற்சாகத்தை உண்டாக்கும்.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 05.11.2019 முதல் 04.01.2020
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் குரு பகவான் ஆட்சி பெற்று கேது நட்சத்திரமான மூலத்தில் சனி- கேது சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்க கூடிய காலமாக இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேற கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. பணிபுரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதில் இருந்த தடை யாவும் விலகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். தொழில், வியாபாரம் தடையின்றி நடைபெற்று எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். துர்க்கையம்மனை வணங்குவது நல்லது.

குரு பகவான் பூராட நட்சத்திரத்தில் 05.01.2020 முதல் 07.03.2020
தனகாரகன் குரு பகவான் உங்கள் ராசிக்கு 11-ல் சுக்கிரன் நட்சத்திரத்தில் கேது சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் நோக்கமும் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். வெளிவட்டாரத் தொடர்புகளும் விரிவடையும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும், ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகளும், பயணங்களால் அனுகூலங்களும் உண்டாகும்.  உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் பாராட்டுதல்களும் கல்வியின் தரத்தை உயர்த்தி கொள்ள உதவும். அம்மனையும் விநாயகரையும் வழிபாடு செய்வது நற்பலனை தரும்.

குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 08.03.2020 முதல் 29.03.2020
உங்கள் ராசிக்கு 11-ல் குரு பகவான் தனக்கு நட்பு கிரகமான சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதார மேம்பாடுகளால் கடன்களும் ஓரளவு குறைந்து நிம்மதி நிலவும். ஏழரைச்சனி நடப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும் என்றாலும் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். 5-ல் ராகு சஞ்சரிப்பதால் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் அவர்களால் கிடைக்க வேண்டி உதவிகள் கிடைக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். ராகு காலங்களில் துர்கையம்மனை வழிபடுவது நல்லது.

குரு பகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 30.03.2020 முதல் 14.05.2020
உங்கள் ராசிக்கு 11-ல் சஞ்சரித்த குரு பகவான் அதிசாரமாக விரய ஸ்தானமான 12-ல் சனி சேர்க்கை பெற்று சஞ்சரிப்பதால் பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறு இடையூறுக்குப் பின் வெற்றி கிட்டும். 11-ல் கேது சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்ப தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துவிட முடியும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொள்வது மூலம் தேவையற்ற வகையில் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். கொடுக்கல்-  வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை தள்ளி வைக்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் காரியங்களில் போது கவனம் தேவை. கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. கிடைக்க வேண்டிய லாபங்கள் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.

குரு பகவான் வக்ர கதியில் 15.05.2020 முதல் 12.09.2020
குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக சிறது தேக்க நிலை உண்டாகும். அனைவரையும் அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். 11-ல் கேது சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் ஓரளவுக்கு சுபிட்சமான நிலை இருக்கும். வீடு, வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. மங்களகரமாக சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் ஒரளவுக்கு லாபங்கள் கிட்டும். செய்யும் தொழில், வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் தடைக்கு பின்பு கிடைக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகள் மூலம் நல்லது நடக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. துர்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் பூராட நட்சத்திரத்தில் 13.09.2020 முதல் 30.10.2020
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு பகவான் ஆட்சி பெற்று சுக்கிரன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் பண வரவுகள் தாராளமாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும், அசையா சொத்துகள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பு அமையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைபிடிப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். 12-ல் சனி சஞ்சரிப்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். தொழிலாளர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உயர்வுகளை பெற முடியும். சிலருக்கு எதிர்பார்க்கும் இட மாற்றங்களும் கிட்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.

குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 31.10.2020 முதல் 20.11.2020
உங்கள் ராசிக்கு 11-ல் குரு பகவான் ஆட்சி பெற்று தனக்கு நட்பு கிரகமான சூரியன் நட்சத்திரமான உத்திராடத்தில் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்பதால் நினைத்த காரியங்களை நிறைவேற்றி விட முடியும்.  குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் சிறப்பாக அமையும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். 12-ல் சனி இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலமானப் பலனை பெறுவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். சிலருக்கு இட மாற்றங்கள் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

பரிகாரம்
கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 5-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சிவன் மற்றும் பைரவரை வணங்குவது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, சனிக்கிழமைகளில் தேங்காய், உளுந்து, அடுப்பில் உபயோகப்படுத்தும் கரி, நாணயங்கள் போன்றவற்றை தானம் கொடுப்பது. கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வது, பாம்பு புற்றுக்கு பாலூற்றுவது, முட்டை வைப்பது நல்லது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்பயன்படுத்துவது சிறப்பு.
திருக்கணிதப்படி வரும் 24.01.2020 முதல் ஏழரைச் சனியில் விரயச் சனி தொடங்குவதால் சனிக்கிழமை தோறும் அனுமனையும் விநாயகரையும் வழிபடுவது, நல்லெண்ணெய் தீபமேற்றுவது நல்லது. சனிக்கிழமைகளில் திருப்பதி ஏழுமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீபாலாஜி வெங்கடாசலபதியை வழிபட்டாலும் சனியால் ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும்.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 5,6,8                கிழமை - வெள்ளி, சனி                     திசை - மேற்கு
கல் - நீலக்கல்                 நிறம் - வெள்ளை, நீலம்                           தெய்வம் - ஐயப்பன்

No comments: