Saturday, October 12, 2019

சிம்மம் - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020


சிம்மம் - குரு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020

குரு பகவான் திருக்கணித சித்தாந்தப்படி விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18-ஆம் தேதி திங்கட்கிழமை 57.56 நாழிகைக்கு, ஆங்கிலப்படி 05-11-2019 செவ்வாய்கிழமை அதிகாலை 05.17 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி 20-11-2020 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.(வாக்கிய சித்தாந்தப்படி வரும் 29-10-2019 முதல் 15-11-2020 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார் ).
தனுசு ராசியில் குரு பகவான் சஞ்சாரம் செய்யவுள்ள காலங்களில் உண்டாகக் கூடிய பலா பலன்களை தெள்ளத் தெளிவாக வழங்கி உள்ளேன்.ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


சிம்மம்               மகம், பூரம். உத்திரம் 1ஆம் பாதம்
எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதியினை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் ஆற்றல் உடையவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, சூரியனின் ராசியில் பிறந்த உங்களுக்கு ராசியாதிபதிக்கு நட்பு கிரகமும் பொன்னவன் எனப் போற்றப்படக் கூடியவருமான குருபகவான் திருக்கணிதப்படி வரும் 05.11.2019 முதல் 20.11.2020 வரை உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்ய இருப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். கடந்த கால பிரச்சினைகள் அனைத்தும் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிப் பெறுவீர்கள். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெறும். மறைமுக எதிர்ப்புகள் விலகி எதையும் சமாளிக்க கூடிய பலமும் வலிமையும் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையொழுத்திடும் வாய்ப்புகள் அமையும். கூட்டாளிகளை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகளும் இடமாற்றங்களும் கிடைக்கப்பெறும். எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகளால் அனுகூலமானப் பலன்களை அடைய முடியும்.
குரு பார்வை ஜென்ம ராசிக்கும் 9, 11-ஆம் வீடுகளுக்கு இருப்பதாலும் சர்ப கிரகமான ராகு 11-ல் சஞ்சரிப்பதாலும் திருமண சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி மணமாகாதவர்களுக்கு மணமாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். அசையும் அசையா சொத்துகளை வாங்கிச் சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்துகளாலும் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருப்பதால் லாபம் பெருகும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் இருக்காது. குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். தற்போது 5-ல் சஞ்சரிக்கும் சனி திருக்கணிதப்படி வரும் 24.01.2020 முதல் ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். சகலவிதத்திலும் வலமான பலனை பெறுவீர்கள்.

உடல் ஆரோக்கியம் 
உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். செய்யும் பணிகளை ஒழுங்காக செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் மனைவி பிள்ளைகள் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். நெருங்கியவர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருந்து மகிழ்ச்சியை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைப்பதால் நிம்மதி நிலவும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.
குடும்பம் பொருளாதார நிலை   
குடும்பத்தின் பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். இதுநாள் வரை தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள் எளிதில் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும். கடந்த கால கடன்கள் படிப்படியாக குறைந்து சேமிக்க முடியும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
கமிஷன் ஏஜென்ஸி 
கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றத் துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருப்பதால் கொடுத்த கடன்களை திரும்பப் பெற முடியும். பெரிய மனிதர்களின் நட்புகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தற்போது உள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.
தொழில் வியாபாரம் 
தொழில் வியாபார ரீதியாக கடந்த கால நெருக்கடிகள் விலகி நல்ல லாபம் கிடைக்கும். பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் வெற்றி பெற்று பொருளாதார மேன்மை உண்டாகும். அரசு வழியில் ஆதரவுகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலம் கிட்டும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் சாதகமாக நடப்பதால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.
உத்தியோகம்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறைந்து மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். திறமைகளை வெளிப்படுத்தி நற்பெயரை எடுக்க முடியும். உயரதிகாரிகளின் பாராட்டுக்கள் மனதிற்கு மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எதிர்பார்த்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வேலை வாய்ப்பு கிட்டும்.
அரசியல்
அரசியல்வாதிகளுக்கு மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளை எளிதில் பெற முடியும். பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். உடனிருப்பவர்களால் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.  கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்ய நேர்ந்தாலும் மறைமுக வருவாய்கள் பெருகும். அடிக்கடி வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு அமையும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைவதால் லாபம் பெருகும். புதிய நவீன கருவிகளை வாங்க முடியும். புதிய பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் கிட்டும். கால்நடைகளால் ஓரளவுக்கு லாபத்தினைப் பெறமுடியும். காய்கனி போன்றவற்றால் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் தேடிவரும். குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் உண்டாகும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் அனுகூலப் பலனை ஏற்படுத்தும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்கு பயணங்கள் மேற்கொள்வீர்கள். பொன்பொருள் சேரும்.
மாணவ- மாணவியர்
கல்வி பயிலுபவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு அதிகரிக்கும். ஞாபக சக்தி திறனும் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். நல்ல நடப்புகளாலும் அனுகூலமானப் பலன்களும் உண்டாகும். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும்.

குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 05.11.2019 முதல் 04.01.2020
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு பகவான் ஆட்சி பெற்று கேது நட்சத்திரமான மூலத்தில் சஞ்சரிப்பதாலும் சர்ப்ப கிரகமான ராகு 11-ல் சஞ்சரிப்பதாலும் மிகவும் சாதகமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயரும். கணவன்- மனைவியிடையே இருந்த வாக்கு வாதங்கள் மறைந்து ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். 5-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மட்டுமே அவர்களால் சாதகப்பலனைப் பெற முடியும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்களையும் பெற்று விடுவீர்கள். கூட்டாளிகளும் ஆதரவாக இருப்பார்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். தேவையற்றப் பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். கல்விக்காக மாணவர்களுக்கு அரசு வழியில் உதவிகள் கிட்டும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

குரு பகவான் பூராட நட்சத்திரத்தில் 05.01.2020 முதல் 07.03.2020
ஜென்ம ராசிக்கு 5-ல் குரு பகவான் ஆட்சி பெற்று சுக்கிரன் நட்சத்திரமான பூராடத்தில் சஞ்சரிப்பதாலும் 11-ல் ராகு சஞ்சரிப்பதாலும் சகல சௌபாக்கியங்களையும் பெறுவீர்கள். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுதால் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் நிலவிய மந்தநிலை விலகி அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். சனி திருக்கணிதப்படி வரும் 24.01.2020 முதல் 6-ல் சஞ்சரிக்க இருப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் காரியங்களில் நல்ல அனுகூலங்களை பெறுவார்கள். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிட்டும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 08.03.2020 முதல் 29.03.2020
உங்கள் ராசியாதிபதி சூரியன் நட்சத்திரமான உத்திராடத்தில் குரு பகவான் 5-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதும் ருண ரோக ஸ்தானமான 6-ல் சனி ஆட்சி பெற்று சஞ்சரிப்பதும், 11-ல் ராகு சஞ்சரிப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும், அசையா சொத்துகளாலும் அனுகூலப்பலன் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளை தடையின்றி பெற முடியும். சிலருக்கு திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் முற்றிலும் மறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலனை அடைய முடியும். கொடுக்கல் - வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். சிவ பெருமானை வழிபடுவது, கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது உத்தமம்.

குரு பகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 30.03.2020 முதல் 14.05.2020
உங்கள் ராசிக்கு 5-ல் சஞ்சரித்த குரு பகவான் அதிசாரமாக 6-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 6-ல் சனி ஆட்சி பெற்று சஞ்சரிப்பதும், 11-ல் ராகு சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் பணவரகள் ஓரளவுக்கு சிறப்பாக அமையும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொண்டால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். மாணவர்கள் கல்வியில் சற்று அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. முருகவழிபாடு, சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

குரு பகவான் வக்ர கதியில் 15.05.2020 முதல் 12.09.2020
குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக தேக்கம் ஏற்படலாம் என்றாலும் 6-ல் சனி ஆட்சி பெற்று சஞ்சரிப்பதும், 11-ல் ராகு சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறிது பிரச்சினைகள் இருந்தாலும் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் தாமதபட்டாலும் பணியில் கௌரவமான நிலை இருக்கும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் போன்றவற்றை சந்திக்க நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். விரோதிகளும் நண்பர்களாக மாறி நற்பலன்களை செய்வார்கள். மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

குரு பகவான் பூராட நட்சத்திரத்தில் 13.09.2020 முதல் 30.10.2020
குரு பகவான் 5-ல் ஆட்சி பெற்று சுக்கிரன் நட்சத்திரமான பூராடத்தில் சஞ்சரிப்பதாலும், சனி 6-ல் வலுவாக சஞ்சரிப்பதாலும் உங்களது பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். செல்வம், செல்வாக்கு சேரும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். வீடு, மனை வாங்கும் நோக்கம் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். மாணவர்களின் கல்வி திறன் நன்கு வளர்ச்சி அடைந்து நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.  ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது நல்லது.

குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 31.10.2020 முதல் 20.11.2020
உங்கள் ராசிக்கு 5-ல் குரு ராசியாதிபதி சூரியன் நட்சத்திரமான உத்திராடத்தில் சஞ்சரிப்பதால் உங்களது செல்வம் செல்வாக்கு மேன்மை அடையும். சனியும் உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பலரை வழிநடத்திச் செல்லக் கூடிய கௌரவமானப் பதவிகள் தேடி வரும். செய்யும் தொழில், வியாபார ரீதியாக சிறப்பான மேன்மைகளை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கம் நற்பலனை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். 4-ல் கேது, 10-ல் ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல், டென்ஷன்களை குறைத்து கொள்ள முடியும். திருமண சுப காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து செல்வது நல்லது. அசையும், அசையா சொத்துகளால் அனுகூலமான பலனை பெற முடியும். மாணவர்கள் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று விட முடியும். ராகு, கேதுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம். 

பரிகாரம்
சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சர்பகிரகமான கேது 5-ல் சாததகமற்று சஞசரிப்பதால் கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9                         நிறம் - வெள்ளை, சிவப்பு         கிழமை - ஞாயிறு, திங்கள்
கல் -  மாணிக்கம்                          திசை - கிழக்கு                               தெய்வம் - சிவன்

No comments: