Sunday, October 20, 2019

Today rasi palan - 21.10.2019


Today rasi palan - 21.10.2019
இன்றைய ராசிப்பலன் -  21.10.2019
கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


இன்றைய  பஞ்சாங்கம்
21-10-2019, ஐப்பசி 04, திங்கட்கிழமை, சப்தமி திதி காலை 06.44 வரை பின்பு அஷ்டமி திதி பின்இரவு 05.25 வரை பின்பு தேய்பிறை நவமி. புனர்பூசம் நட்சத்திரம் மாலை 05.32 வரை பின்பு பூசம். அமிர்தயோகம் மாலை 05.32 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. கால பைரவருக்கு உகந்த நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 - 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.



சந்தி ராகு

திருக்கணித கிரக நிலை
21.10.2019

 

சனி கேது
குரு
 சூரிய புதன் சுக்கி
செவ்

இன்றைய ராசிப்பலன் - 21.10.2019
மேஷம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை தடையின்றி வந்து சேரும்.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி வருமானம் பெருகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
மிதுனம்
இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் கூடும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
கடகம்
இன்று உங்களுக்கு பண பற்றாக்குறையினால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு உண்டாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது.
சிம்மம்
இன்று உற்றார் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.
கன்னி
இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் அனுகூலம் கிட்டும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். வேலையில் தடைப்பட்ட ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். சேமிப்பு உயரும்.
துலாம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும், தொழில் ரீதியாக புதிய நட்பு உண்டாகும். பெரிய மனிதர்களின் உதவியால் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உங்கள் ராசிக்கு பகல் 11.40 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மதியத்திற்கு பிறகு பிரச்சினைகள் குறையும். சுப முயற்சிகளில் தடைக்குபின் அனுகூலம் ஏற்படும்.
தனுசு
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். மற்றவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம். உங்கள் ராசிக்கு பகல் 11.40 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. வெளியிடங்களில் பேசும் போது நிதானத்துடன் இருப்பது நல்லது.
மகரம்
இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வருமானம் பெருகும்.
கும்பம்
இன்று வேலையில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
மீனம்
இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

No comments: