Saturday, November 9, 2019

வார ராசிப்பலன் -- நவம்பர் 10 முதல் 16 வரை


வார ராசிப்பலன் -- நவம்பர் 10 முதல் 16 வரை 
ஐப்பசி 24 முதல் 30 வரை

கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,


சந்தி


ராகு

திருக்கணித கிரக நிலை


 

சனி குரு கேது
சுக்கி

சூரிய புதன் (வ)
செவ்

கிரக மாற்றம்
10-11-2019 துலா செவ்வாய் பகல் 02.24 மணிக்கு.
16-11-2019 விருச்சிக சூரியன் இரவு 12.51 மணிக்கு.

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
மீனம்       08-11-2019 அதிகாலை 05.30 மணி முதல் 10-11-2019 மாலை 05.20 மணி வரை.
மேஷம்     10-11-2019 மாலை 05.20 மணி முதல் 13-11-2019 அதிகாலை 03.10 மணி வரை.
ரிஷபம்     13-11-2019 அதிகாலை 03.10 மணி முதல் 15-11-2019 பகல் 11.03 மணி வரை.
மிதுனம்     15-11-2019 பகல் 11.03 மணி முதல் 17-11-2019 மாலை 05.05 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
10.11.2019 ஐப்பசி 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திரயோதசி திதி ரேவதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 05.30 மணி முதல் 06.30 மணிக்குள் துலாம் இலக்கினம். வளர்பிறை

11.11.2019 ஐப்பசி 25 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்தசி திதி அசுவினி நட்சத்திரம் சித்தயோகம் காலை 05.30 மணி முதல் 06.30 மணிக்குள் துலாம் இலக்கினம். வளர்பிறை

15.11.2019 ஐப்பசி 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருதியை திதி மிருகசீர்ஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 04.30 மணி முதல் 06.00 மணிக்குள் துலாம் இலக்கினம். தேய்பிறை

மேஷம்   அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
எந்த ஒரு விஷயத்திலும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு தனக்காரகன் குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் 3-ல் ராகு சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சியில் வெற்றி, குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் படிப்படியாக விலகி முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளை தடையின்றி பெற முடியும். சிலருக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். சூரியன், செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவி சற்று விட்டு கொடுத்து நடப்பது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அசையும் அசையா சொத்துகளால் அனுகூலப்பலன் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். சிவ வழிபாடு மகாலட்சுமி வழிபாடு செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -  11, 12, 15, 16.

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டு பிடிக்காதவாறு அளவோடு பேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைப்பதில் தடை தாமதம் ஏற்பட்டாலும் பணியில் கௌரவமான நிலை இருக்கும். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை தரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சனிப்ரீதியாக விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  10, 14, 15.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, குரு பகவான் உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேற்றங்களை அடைவீர்கள். கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலம் உண்டாகும். பஞ்சம ஸ்தானமான 5-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபங்களை பெற்று விட முடியும். தூர பயணங்களை தவிர்ப்பதினால் அலைச்சல்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற தடைகள் நிலவினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்படுவார்கள். சனி பகவான் வழிபாடும் முருக வழிபாடும் மேற்கொண்டால் சகல நன்மைகளும் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  10, 11, 12, 16.

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
நல்ல கற்பனை திறனும், சிறந்த ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன்-- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். சூரியன், செவ்வாய் 4-ல் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க தேவையற்ற இடையூறுகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்த்த உயர்வுகளை அடையலாம். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். அரசு வழியில் ஆதாயங்கள் கிட்டும். சிவ வழிபாடும் துர்கையம்மன் வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -  11, 12, 13, 14.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
தனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்க்கும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், செவ்வாயுடன் 3-ல் சஞ்சரிப்பதும், 4-ல் சுக்கிரன், 11-ல் ராகு, சஞ்சரிப்பதும் வலமான பலன்களை உங்களுக்கு ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாகும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். ஆரோக்கியத்தில் மட்டும் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான பதவி மற்றும் ஊதிய உயர்வுகள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் பல புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பணம் கொடுக்கல்-- வாங்கலில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விட முடியும். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். மாணவர்கள் கல்வியில் சற்று அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம். முருகனையும் பார்வதி தேவியையும் வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.
வெற்றி தரும் நாட்கள் -  13, 14, 15, 16.
சந்திராஷ்டமம் -   08-11-2019 அதிகாலை 05.30 மணி முதல் 10-11-2019 மாலை 05.20 மணி வரை.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய், 4-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள், குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். பொருளாதார ரீதியாகவும் நெருக்கடி ஏற்படும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன் மூலம் எதையும் சமாளிக்ககூடிய ஆற்றலை அடைவீர்கள். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வீண் செலவுகளை குறைப்பது நல்லது. கணவன்- மனைவி இருவரும் வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். அசையா சொத்துகளால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நற்பலனைப் பெற முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். முடிந்த வரை தூர பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் சற்று அதிக கவனம் செலுத்துவது உத்தமம். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -  15, 16.
சந்திராஷ்டமம் -   10-11-2019 மாலை 05.20 மணி முதல் 13-11-2019 அதிகாலை 03.10 மணி வரை.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
வசீகரமான தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடையும் யோகம் உங்களுக்கு உண்டு. தொழில் வியாபார ரீதியாக சாதகமான பலன்கள் ஏற்படும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருக்கும் என்றாலும் குரு 3-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுதால் மகிழ்ச்சி நிலவும். கடன்கள் எல்லாம் படிப்படியாக குறையும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். அரசு வழியில் எதிர்பார்க்கும் சில உதவிகள் தடையின்றி கிட்டும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவுகள் மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  10, 11, 12.
சந்திராஷ்டமம் -   13-11-2019 அதிகாலை 03.10 மணி முதல் 15-11-2019 பகல் 11.03 மணி வரை.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
முன்கோபம் உடையவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், சூரியன் சேர்க்கைப் பெற்று 12-ல் சஞ்சரிக்க இருப்பதால் தேவையற்ற நெருக்கடிகள், இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாகும். நீங்கள் எதிலும் அவசரபடாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. மற்றவர்களிடம் எச்சரிக்கையுடன் இருந்தால் தான் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். குரு பகவான் 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் நன்றாக இருந்து எந்த சிக்கலையும் சமாளிக்கும் பலத்தை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பதும், பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. கொடுத்த கடன்களை திரும்ப கேட்டால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பூர்வீக சொத்துகளால் வீண் செலவுகள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதும், கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதும் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள உதவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். மாணவர்கள் கல்வியில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. சிவ வழிபாடு செய்வது பௌர்ணமியன்று கிரிவலம் சென்று வருவது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  11, 12, 13, 14.
சந்திராஷ்டமம் -   15-11-2019 பகல் 11.03 மணி முதல் 17-11-2019 மாலை 05.05 மணி வரை.

தனுசு  மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்து உங்களது கடந்த கால பிரச்சினைகள் குறையும். பொருளாதார நிலையில் இருந்த மந்த நிலை மாறி பணவரவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். முடிந்த வரை பேச்சில் நிதானமாக இருப்பது மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். சிறப்பான பணவரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான நிலையே காணப்படும் என்றாலும் லாபங்கள் தடைப்படாது. அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். மாணவர்களுக்கு தேவையற்ற பொழுது போக்குகளால் கல்வியில் நாட்டம் குறையும். சனி பகவான் வழிபாட்டையும் மகாலட்சுமி வழிபாட்டையும் மேற்கொண்டால் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.
வெற்றி தரும் நாட்கள் -  13, 14, 15, 16.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், செவ்வாய், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது மட்டும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் நடந்து கொண்டால் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். குடும்ப ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். கடன்கள் படிப்படியாக குறையும். குரு, சனி 12-ல் இருப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவதும் வண்டி வாகனங்களில் செல்கின்ற போது கவனமாக இருப்பதும் உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தூர பயணங்களை தவிர்ப்பதன் மூலம் வீண் அலைச்சலை குறைக்கலாம். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நல்லது. சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது, சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  15, 16.

கும்பம்  அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் குரு, கேது, சனி சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களும் அடையும் அற்புத யோகம் உங்களுக்கு உண்டு. மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தாராள தனவரவுகளால் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதி இருக்காது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சிறு தடைக்குப் பின் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலை இருக்கும். மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் அதிகரித்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியை அடைவீர்கள். வெளியூர் வெளிநாடு தொடர்புகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். துர்கை வழிபாடும் முருக வழிபாடும் செய்வது உத்தமம்.
வெற்றி தரும் நாட்கள் -  11, 12.

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
மற்றவர்களின் சுக துக்கங்களையும் தன்னுடைய சுக துக்கங்களாக நினைக்கும் பண்பு கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய காலமாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் உள்ளவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலையே இருக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற முடியும். சிவ வழிபாடு செய்வது மற்றும் மகா அண்ண அபிஷேக நாளில் அரிசி, பருப்பு, காய்கறி போன்றவற்றை கோவில்களில் தானம் வழங்குவது மிகவும் நல்லது.
வெற்றி தரும் நாட்கள் -  13, 14, 15.

No comments: