Saturday, December 21, 2019

விருச்சிகம் - புத்தாண்டு பலன் - 2020


விருச்சிகம் - புத்தாண்டு பலன் - 2020

கணித்தவர்
ஜோதிட மாமணி
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001,

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
பார்ப்பதற்கு வெகுளி போல் இருந்தாலும் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! செவ்வாயின் ராசியில் பிறந்த உங்களுக்கு ராசியாதிபதிக்கு நட்பு கிரகமான குரு பகவான் திருக்கணிதப்படி 20-11-2020 முடிய தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் உங்களின் பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு போன்ற அனைத்தும் உயரும் ஆண்டாக இருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பணவரவுகள் தாராளமாக அமைவதால் குடும்பத் தேவைகள் எல்லாம் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். வீடு மனை, வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகம் அமையும். கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் மறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்கள் எல்லாம் எளிதில் கைகூடும்.
ஒரு ராசியில் நீண்ட நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் திருக்கணிதப்படி வரும் 24-01-2020 முதல் உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பதாலும் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த ஏழரைச்சனியானது முழுமையாக முடிவதாலும் தொழில் வியாபார ரீதியாக கடந்த கால சோதனைகள் எல்லாம் முற்றிலும் மறைந்து எல்லா வகையிலும் மேன்மைகள் உண்டாகும். தொழிலில் லாபங்கள் அதிகரித்து உங்களுக்கு உள்ள கடன்கள் எல்லாம் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு கடந்த காலத்தில் இருந்த சம்பள பாக்கிகள் மற்றும் நிலுவை தொகைகள் எல்லாம் கிடைத்து பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சிறப்பான பதவி உயர்வுகள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணையும் அமைப்பு உண்டாகும். பணிகளில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களையும், பரிசுகளையும் அடைய முடியும்.
இந்த ஆண்டில் தொழில், உத்தியோகம் மற்றும் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும் என்றாலும் சர்ப்ப கிரகமான ராகு 8-லும் கேது 2-லும் வரும் 23-09-2020 வரை சஞ்சாரம் செய்வதாலும் அதன்பின்பு ராகு 7-லும் கேது ஜென்ம ராசியிலும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையில்லாத கருத்து வேறுப்பாடுகள் உண்டாகும். கூட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலமாகும். உறவினர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். எடுக்கும் எல்லா காரியங்களிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிகளைப் பெற முடியும். நீண்ட நாட்களாக சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு உடல் நிலை சிறப்பாகி மருத்துவச் செலவுகள் குறையும். குடும்பத்தில் உள்ளவர்கள் சிறப்பான ஆரோக்கியத்துடன் இருப்பதால் மன நிம்மதி, மகிழ்ச்சியும் ஏற்படும்.
குடும்பம் பொருளாதார நிலை
பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். அதி நவீன பொருட்களின் சேர்க்கை, ஆடை ஆபரண சேர்க்கை யாவும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். சர்ப்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் ஏற்றங்களை அடைய முடியும்.
உத்தியோகம்
கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் முற்றிலும் மறைந்து செய்யும் பணியில் கௌரமான நிலையிருக்கும். எதிர்பாராத பதவி உயர்வுகள் கிட்டும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் பணியில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புகளால் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை விரிவு படுத்தும் யோகம் ஏற்படும். உங்களின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். 
கொடுக்கல்- வாங்கல்
பணவரவுகள் சரளமாக இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் திருப்திகரமாக வசூலாகி உங்களுக்கு உள்ள சிக்கல்கள் எல்லாம் முழுமையாக குறையும். பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்த லாபம் காண முடியும். கடந்த காலங்களில் இருந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
அரசியல்
உங்களின் பெயர் புகழ் உயரக் கூடிய காலமாக இந்த ஆண்டு இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். மறைமுக வருவாய்களும் பெருகும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். மேடை பேச்சுகளில் கவனமுடன் இருப்பது மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.
கலைஞர்கள்
வரவேண்டிய பணவரவுகளில் இருந்த இழுபறி நிலை விலகி தக்க நேரத்தில் வந்து சேரும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்து பெயர் புகழ் உயரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் யோகம் உண்டாகும். இசை, நாடகம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கும் நல்ல நிலை ஏற்பட்டு மன நிம்மதி உண்டாகும்.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப் பெறுவதால் உழைப்பிற்கேற்றப் பலனைப் பெறுவீர்கள். புதிய நவீன கருவிகள் வாங்கும் யோகம், பூமி மனை போன்றவற்றால் அதிர்ஷ்டம் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். சுப காரியங்கள் கைகூடும். பண விஷயங்களில் இருந்த நெருக்கடிகள் குறைவதால் மன நிம்மதி உண்டாகும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உறவினர்களிடம் இருந்த பகைமை விலகும். பிறந்த இடத்திற்கும், புகுந்த இடத்திற்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்து கொள்வீர்கள். திருமணமாகதவர்களுக்கு மணமாகும். அழகான புத்திர பாக்கியம் அமையும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் புதிய ஆடை ஆபரணம் போன்றவற்றை வாங்குவீர்கள். நவீன பொருட்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும்.
மாணவ- மாணவியர்
எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கல்வியில் நல்ல மதிப்பெண் பெற்று பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று படிக்க கூடிய வாய்ப்பும் உண்டாகும். நல்ல நண்பர்களின் தொடர்புகளால் மனதிற்கு இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாகும்.

மாதப்பலன்
ஜனவரி. 
உங்கள் ராசிக்கு குரு, புதன் தன ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். கடந்த காலத்தில் இருந்த பொருளாதார நெருக்கடிகள், அனைத்தும் விலகி முன்னேற்றமான நிலையைக் கொடுக்கும். பண வரவுகள் சரளமாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். உறவினர்களால் ஓரளவுக்கு அனுகூலமானப் பலன்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 09-01-2020 அதிகாலை 03.49 மணி முதல் 11-01-2020 காலை 07.52 மணி வரை.
பிப்ரவரி. 
உங்கள் ராசிக்கு குரு 2-ல், சனி 3-ல், புதன் 4-ல் மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் உங்களது செல்வம், செல்வாக்கு மேலோங்கும் இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். எல்லா வகையிலும் மேன்மைகள் உண்டாகும். இதனால் கடந்த காலங்களில் இருந்த பொருளாதார பிரச்சினைகள் அனைத்தும் விலகி முன்னேற்றமானப் பலன்கள் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். பிரிந்த உறவினர்களும் தேடி வந்து உதவி கரம் நீட்டுவார்கள். பொன், பொருள் சேரும். உணவு விஷயத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுகள் தேடி வரும். முருக கடவுளை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 05-02-2020 பகல் 02.00 மணி முதல் 07-02-2020 மாலை 06.24 மணி வரை.
மார்ச்.
உங்களுக்கு குரு தன ஸ்தானத்தில், சனி 3-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். கடந்த கால பிரச்சினைகள் விலகி முன்னேற்றமும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் கிட்டும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், மாத முற்பாதியில் சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன், உடல் சோர்வு ஏற்படும். முடிந்த வரை தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்றே அக்கறை எடுத்து கொள்வதன் மூலம் மருத்துவ செலவுகள் குறையும். கணவன்- மனைவி இடையே விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. நவகிரக வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 03-03-2020 இரவு 11.03 மணி முதல் 06-03-2020 அதிகாலை 04.55 மணி வரை மற்றும் 31-03-2020 காலை 06.05 மணி முதல் 02-04-2020 பகல் 01.33 மணி வரை.
ஏப்ரல்.
உங்கள் ராசியதிபதி செவ்வாய், சனி சேர்க்கைப் பெற்று 3-ல் சஞ்சரிப்பதும், சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் சகல விதத்திலும் மேன்மையை தரக்கூடிய இனிய அமைப்பாகும். பொருளாதார ரீதியாக ஏற்றம் உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கடன்கள் குறையும். குடும்பத்தில் அசையும் அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் இருக்கும். மகாலட்சுமி, முருக வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 27-04-2020 பகல் 11.45 மணி முதல் 29-04-2020 இரவு 07.57 மணி வரை.
மே.
உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதும் வலமான பலன்களை தரும் அமைப்பாகும். சனி பகவான் 3-ல் சஞ்சரிப்பதால் கடந்த கால கடன் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். குடும்பத்தில் கணவன்- மனைவி விட்டுக் கொடுத்து நடந்தால் ஓரளவுக்கு மகிழ்ச்சி நிலவும். ஆடம்பர பொருட் சேர்க்கைகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் சாதகப்பலன்களை அடைய முடியும். விநாயகரையும் துர்கையையும் வழிபடுவது நற்பலனை தரும்.
சந்திராஷ்டமம் - 24-05-2020 மாலை 05.34 மணி முதல் 27-05-2020 அதிகாலை 01.25 மணி வரை.
ஜுன்.
உங்கள் ராசியதிபதி செவ்வாய் 4-ல் சஞ்சரிப்பதும், சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதும் உங்களுக்கு பொருளாதார ரீதியாக தேவையற்ற நெருக்கடி, இருப்பதை அனுபவிக்க இடையூறு உண்டாகும் என்பதால் எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பதும் உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளை சில காலம் தள்ளி வைப்பது மூலம் வீண் விரயங்களை குறைக்க உதவும். விஷ்ணு வழிபாடு செய்யவும்.
சந்திராஷ்டமம் - 21-06-2020 அதிகாலை 00.35 மணி முதல் 23-06-2020 காலை 07.35 மணி வரை.
ஜுலை.
உங்கள் ராசிக்கு சுக்கிரன் சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும் என்றாலும் மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை உண்டாக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத செலவுகளால் கடன்கள் வாங்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். முடிந்த வரை சிக்கனமாகவும் ஆடம்பர செலவுகளைக் குறைத்து கொள்வதும் நல்லது. தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபங்களை பெற முடியும். சிவ வழிபாடு, அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 18-07-2020 காலை 09.00 மணி முதல் 20-07-2020 மாலை 03.28 மணி வரை.
ஆகஸ்ட்.
உங்கள் ராசிக்கு தனக்காரகன் குரு பகவான் 2-ல் சஞ்சரிப்பதும், இம்மாதத்தில் சூரியன் 9, 10-ல் சஞ்சரிப்பதும் நல்லது என்பதால் அனுகூலங்கள் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். எதையும் சமாளித்து ஏற்றமானப் பலனை பெறுவீர்கள். சுக்கிரன், ராகு 8-ல் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்வதன் மூலம் எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கும். பயணங்கள் அலைச்சலை ஏற்படுத்தும் என்றாலும் அதன் மூலம் அனுகூலங்களை அடையலாம். முருக பெருமானை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 14-08-2020 மாலை 06.05 மணி முதல் 17-08-2020 அதிகாலை 00.50 மணி வரை.
செப்டம்பர்.
உங்கள் ராசியதிபதி செவ்வாய் 6-ல் ஆட்சிப் பெற்று சஞ்சரிப்பதும், குரு 2-ல், சனி 3-ல், சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய காலமாகும். பொருளாதார உயர்வுகளும் அரசு வழியில் அனுகூலங்களும் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. விநாயகரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் - 11-09-2020 அதிகாலை 02.38 மணி முதல் 13-09-2020 காலை 10.35 மணி வரை.
அக்டோபர்.
உங்கள் ராசிக்கு குரு 2-ல், சனி 3-ல், மாத முற்பாதியில் சுக்கிரன் 10-ல், சூரியன் 11-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைத்து நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணம் வரவு தாராளமாக இருக்கும். செல்வம், செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். சொந்த வீடு, மனை வாங்க கூடிய வாய்ப்பும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் தேடி வரும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 08-10-2020 காலை 09.45 மணி முதல் 10-10-2020 இரவு 07.10 மணி வரை.
நவம்பர்.
உங்களுக்கு ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு, மாத முற்பாதியில் சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் எதிலும் கவனமாக செயல்பட வேண்டிய காலமாகும். குடும்பத்தில் வீண் குழப்பங்கள், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சுபகாரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் எவ்வளவு தான் பாடுபட்டாலும் நற்பெயர் கிடைக்காது. உயரதிகாரிகளின் கெடுபிடிகளால் மனநிம்மதி குறையும். பணவரவுகளில் நெருக்கடிகள் இருக்கும் என்றாலும் சனி 3-ல், சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவிகள் கிடைக்கப் பெற்று தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். முருக வழிபாடு, சிவ வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் - 04-11-2020 மாலை 03.44 மணி முதல் 07-11-2020 அதிகாலை 01.49 மணி வரை.
டிசம்பர்.
உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. எடுக்கும் எந்தவொரு காரியத்தையும் முடிப்பதற்கு கஷ்டப்பட வேண்டியிருக்கும். வரவுக்கு மீறிய செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். நெருங்கியவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறுசிறு நெருக்கடிகள் நிலவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் இருப்பது உத்தமம். விநாயகரை வழிபடுவது மூலம் நற்பலன் உண்டாகும்.
சந்திராஷ்டமம் - 01-12-2020 இரவு 09.37 மணி முதல் 04-12-2020 காலை 07.20 மணி வரை மற்றும் 29-12-2020 அதிகாலை 04.40 மணி முதல் 31-12-2020 பகல் 01.37 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் - 1,2,3,9          நிறம் - ஆழ்சிவப்பு, மஞ்சள்,      கிழமை - செவ்வாய், வியாழன்
கல் - பவளம்,         திசை - தெற்கு        தெய்வம் - முருகன்No comments: